36 மாதத்தில் கட்டுமானம்.. சென்னை முகத்தையே மாற்ற போகும் பரந்தூர் விமான நிலையம்.. வெளியான ரிப்போர்ட்
சென்னை: பரந்தூர் விமான நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த முறை திட்டம் மாற்றப்பட்டு உள்ளது. இதற்கான தொழில்நுட்ப ரீதியாக டிபிஆர் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
நேற்று வெளியான டிபிஆர் அறிக்கையில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள சென்னையின் இரண்டாவது விமான நிலையம் 2029 இல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பரந்தூரில் உள்ள கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்திற்கான விரிவான தொழில்நுட்ப பொருளாதார அறிக்கையின்படி, விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் ஜனவரி 2026 இல் தொடங்கப்பட்டு நான்கு கட்டங்களாக உருவாக்கப்படும்.

20 மில்லியன் பயணிகளை ஏற்றிச்செல்லும் திறன் கொண்ட முதல் கட்டம் 36 மாதங்களில் முடிக்கப்பட்டு 2029ல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். விமான நிலையத்தில் இரட்டை ஓடுபாதைகள், இருபுறமும் டாக்ஸிவே, மூன்று பயணிகள் முனையங்கள் மற்றும் பிரத்யேக சரக்கு முனையம் ஆகியவை இருக்கும். பெரிய விமானங்களை கையாளும் வகையில் இந்த விமான நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
திட்டத்திற்காக முன்பு எடுக்கப்பட இருந்த நிலத்தை விட கூடுதல் நிலத்தை கைப்பற்ற தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் மிகவும் முக்கியமான சர்வதேச விமான நிலையம் ஆகும். இங்கு தினமும் பல லட்சம் பயணிகள் வந்து செல்கிறார்கள். அவ்வப்போது இங்கே கண்ணாடி உடைந்து விழும் சம்பவம் நடக்கும். ஆனாலும் சென்னை விமான நிலையம் பாதுகாப்பான விமான நிலையங்களில் ஒன்றாகும்.
2017-18ம் ஆண்டில் மட்டும் சென்னை விமான நிலையத்தின் மூலம் சென்னை விமான நிலையத்தை 20.26 மில்லியன் பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். அமெரிக்கா, சீனா, ஜப்பான் என்று உலகம் முழுக்க பல நாடுகளுக்கு இங்கிருந்து விமானம் செல்கிறது.
புதிய விமான நிலையம்: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் மிகவும் சிறப்பாக இயங்கி வருகிறது. ஆனால் இன்னும் 10 வருடங்களில் தற்போது சென்னை விமான நிலையம் இருக்கும் பகுதி அதிக நெரிசல் மிகுந்த பகுதியாக மாறும். இதனால் மக்கள் அதிக அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்படும். அதேபோல் தற்போது மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு அதிக அளவில் விமானங்கள் வந்து செல்கிறது. இதனால் விமான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
இதை சமாளிக்கும் வகையில் சென்னைக்கு கொஞ்சம் வெளியே விமான நிலையம் அமைக்க நிலம் தேடி வந்தனர். அதன்படி காஞ்சிபுரம் - அரக்கோணம் அருகே இருக்கும் பரந்தூர், மாண்டூர் ஆகிய இடங்கள் ஆலோசிக்கப்பட்டது. கடைசியில் தற்போது விமான நிலையம் அமைப்பதற்காக பரந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மீனம்பாக்கத்தில் இருந்து இந்த பரந்தூர் 70 கிமீ தொலையில் இருக்கிறது. மொத்தம் இந்த விமான நிலையம் 3800 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளதாக முதலில் திட்டமிடப்பட்டது. தமிழக அரசு சார்பாக இந்த நிலம் வழங்கப்படுகிறது.
எதிர்ப்பு: இதற்காக தமிழ்நாடு அரசு நிலம் கையகப்படுத்த முடிவு செய்த நிலையில் மக்களுக்கு அதற்கு எதிராக கடுமையான போராட்டங்களை அறிவித்து உள்ளனர். மக்கள் பலர் குழுக்களாக இணைந்து கடந்த மூன்றரை மாதங்களாக போராட்டம் செய்து வருகின்றனர். இந்த விமான நிலையத்திற்காக விவசாய நிலத்தை கேட்கிறார்கள் என்று கூறி மக்கள் போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள். ஏகனாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 16 கிராம மக்கள்தான் தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பரந்தூர் விமான நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த முறை திட்டம் மாற்றப்பட்டு உள்ளது. திட்டத்திற்காக முன்பு எடுக்கப்பட இருந்த நிலத்தை விட கூடுதல் நிலத்தை கைப்பற்ற தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை பரந்தூரில் புதிய கிரீன்ஃபீல்ட் விமான நிலையம் விரைவில் அமைக்கப்படும். இந்த விமான நிலையத்திற்காக காஞ்சிபுரத்தில் உள்ள பரந்தூர் மற்றும் 19 கிராமங்களில் 3,774.01 ஏக்கர் பட்டா நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு பச்சை சிக்னல் கொடுத்துள்ளது. நிலம் கையகப்படுத்துதல் மற்றும் நிதி அனுமதி வழங்குவதற்கான அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
முன்பை விட 770 ஏக்கர் கூடுதலாக கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் வரும் நாட்களில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications