விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்
சென்னை: தமிழ்நாட்டில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள விஜய் தலைமையிலான அரசு, சென்னை அருகே முன்மொழியப்பட்ட பரந்தூர் பசுமைக்காடு சர்வதேச விமான நிலையத் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்து தற்போதைய நிலை மாறாமல் "ஸ்டேட்டஸ் குவோ" தொடர வேண்டும் என்று அறிவித்துள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது வெறும் நிர்வாக நடவடிக்கை மட்டுமல்ல; தமிழ்நாட்டின் அடுத்த 30 ஆண்டுகால பொருளாதார வளர்ச்சியை நிர்ணயிக்கும் முக்கிய முடிவாகவும் பார்க்கப்படுகிறது.
சென்னை சர்வதேச விமான நிலையம் தற்போது ஆண்டுக்கு 2.2 கோடிக்கும் மேற்பட்ட பயணிகளைக் கையாளும் நிலையில், அதன் கொள்ளளவை நெருங்கி வருகிறது. இந்தியாவின் முன்னணி மெட்ரோ நகரங்களுடன் ஒப்பிடும்போது சென்னை மிகவும் பின்தங்கியுள்ளது. டெல்லி NCR 137 மில்லியன், பெங்களூரு 90 மில்லியன், மும்பை 80-90 மில்லியன், ஹைதராபாத் 40-45 மில்லியன் பயணிகள் திறனைக் கொண்டிருக்க, சென்னை வெறும் 35 மில்லியன் பயணிகள் திறனுடன் மிகக் குறைவாக உள்ளது. இந்த நிலையில் பரந்தூர் திட்டம் முடங்கினால் தென்னிந்தியாவின் முன்னணி நகரங்களில் இரட்டை விமான நிலைய அமைப்பு (Dual-Airport System) இல்லாத ஒரே நகரமாக சென்னை மாறும் அபாயம் உள்ளது.

முன்தேர்வு அறிக்கை (Pre-feasibility Report) இத்திட்டத்தை "அவசரத் தேவை" என வலியுறுத்துகிறது. உலகளாவிய வர்த்தகம், சுற்றுலா, ஏற்றுமதி, தளவாடங்கள் மற்றும் பன்னாட்டு முதலீடுகளை ஈர்க்க விமான உள்கட்டமைப்பு மிக முக்கியம் என்பதை அது சுட்டிக்காட்டுகிறது. நான்கு கட்டங்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்ட இந்த விமான நிலையம் இறுதியில் ஆண்டுக்கு 100 மில்லியன் பயணிகளைக் கையாளும் திறனுடன் சென்னையை டெல்லி, பெங்களூரு போன்ற உலகத் தர நகரங்களுக்கு இணையாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
பரந்தூர் தேர்வு அரசியல் காரணங்களால் அல்ல. பண்ணூர், திருப்போரூர், படாலம் உள்ளிட்ட நான்கு இடங்களும் ஆய்வு செய்யப்பட்டன. இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) மேற்கொண்ட தொழில்நுட்ப ஆய்வுகளில் பரந்தூர் சிறந்த வான்வெளி வசதி, ஓடுபாதை வடிவமைப்பு, குறைவான தடைகள் மற்றும் சென்னை-பெங்களூரு விரைவுச்சாலை அருகாமை ஆகியவற்றால் தேர்ந்தெடுக்கப்பட்டது. பண்ணூரில் 1,546 குடும்பங்கள் பாதிக்கப்படும் நிலையில், பரந்தூரில் 1,005 குடும்பங்கள் மட்டுமே இடம்பெயர வேண்டியிருக்கும் என்பதும் கணக்கிடப்பட்டுள்ளது.
சுமார் ₹29,143 கோடி மதிப்பிலான இத்திட்டம் கட்டுமான காலத்தில் மட்டும் 8,000 நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும். ஸ்ரீபெரும்புதூர் உற்பத்தி மண்டலம், மின்னணு, குறைக்கடத்தி தொழில்கள் மற்றும் சென்னை-பெங்களூரு தொழில் வழித்தடத்தின் வளர்ச்சிக்கு பெரும் உந்துசக்தியாக அமையும். திட்டம் காலவரையின்றி தாமதமானால் முதலீட்டாளர்கள் மத்தியில் தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பு திட்டங்கள் அரசியல் காரணங்களால் மாற்றப்படும் எனும் எதிர்மறை பிம்பம் உருவாகும். ஏற்கனவே 60% நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், திட்டத்தை கைவிடுவது பெரும் நிதி இழப்பையும் சட்ட சிக்கல்களையும் ஏற்படுத்தும்.
சுற்றுச்சூழல் மற்றும் விவசாய நிலப் பாதுகாப்பு குறித்த கவலைகள் நியாயமானவை. ஆனால் உலகத் தர விமான நிலையத்தை எந்தவித சுற்றுச்சூழல் பாதிப்புமின்றி அமைப்பது சாத்தியமல்ல. முறையான மறுவாழ்வு, நியாயமான இழப்பீடு மற்றும் சுற்றுச்சூழல் நடவடிக்கைகளுடன் திட்டத்தை முன்னெடுப்பதே தமிழ்நாட்டின் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கி செல்லும் சரியான வழியாகும்.
தமிழ்நாட்டின் எதிர்காலம் சென்னையின் விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பைப் பொறுத்தது. பரந்தூர் திட்டத்தின் மீதான இறுதி முடிவு தமிழகத்தின் போட்டித்தன்மையை தக்கவைக்குமா அல்லது அண்டை மாநிலங்களிடம் இழக்கச் செய்யுமா என்பதை நிர்ணயிக்கும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications