Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பரந்தூர் போராட்டம்.. வெப்பம் தெறிக்கும் கண்ணீர்த் திவலைகள்..நெஞ்சை உலுக்கியது -திருமாவளவன் ட்வீட்

Subscribe to Oneindia Tamil

சென்னை:எங்கள் பிணங்களின்மீதுதான் பரந்தூர் விமான நிலையத்தைக் கட்டமுடியும் என கதறும் மக்களின் ஆற்றாமைக்கு என்ன விடையிறுக்க இயலும்? என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். பூர்வீக வாழிடத்தைப் பறிகொடுத்துவிட்டு எமது வாரிசுகள் அநாதைகளாகத் திரிய வேண்டுமா என மக்கள் குமுறி அழுவது என் நெஞ்சை உலுக்கியது என்றும் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சென்னையின் 2வது விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே உள்ளபரந்தூரில் அமையும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநில அரசும் நிலம் கையகப்படுத்துவதற்காக கருத்துக் கேட்புக் கூட்டம் உள்ளிட்டவற்றை நடத்தி வருகிறது.

காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூர், வளத்தூர், தண்டலம், நெல்வாய், மேல்படவூர், மடப்புரம், மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்துக்கு உட்பட்ட ஏகனாபுரம், எடையார்பாக்கம், குணகரண்பாக்கம், மகாதேவி மங்கலம், அக்கம்மாபுரம், சிங்கில்பாடி என 12 கிராமங்களை உள்ளடக்கி இந்த விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.

கிராம பொதுமக்கள் போராட்டம்

கிராம பொதுமக்கள் போராட்டம்

இந்த விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக ஏகனாபுரத்தில் 56வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தச் சூழ்நிலையில் அந்தக் கிராமங்களுக்குள் அரசியல் கட்சியினர் மற்றும் வேறு சில அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளே நுழைய காவல்துறை அனுமதிப்பதில்லை.

போலீஸ் பாதுகாப்பு

போலீஸ் பாதுகாப்பு

கடந்த சில தினங்களுக்கு முன்பு விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கருத்துக்களை கேட்கவும் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவிக்கவும் வந்தார். அவரை செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு அருகே வழிமறித்து போலீஸார் கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து அவரை காஞ்சிபுரம் மாவட்டம் பெருநகர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். மாலை வரை அவர் போராட்ட பகுதிக்குச் செல்ல முடியாதவாறு போலீஸார் அவரை தடுத்து வைத்திருந்தனர். வேறு யாரேனும் அந்தப் பகுதிக்குள் நுழைவதை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.

 தொல். திருமாவளவன் வருகை

தொல். திருமாவளவன் வருகை

நேற்றைய தினம் விசிக கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், 1350 ஏக்கர் நீர்நிலை பகுதியை அழித்தால் தான் விமான நிலையம் அமைக்க முடியும் எனில் பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் அரசு இரட்டை கொள்கையை கையாள்கிறதா என்றார்.

 கோவில்கள் அழிப்பு

கோவில்கள் அழிப்பு

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் 100க்கும் மேற்பட்ட இந்து கோவில்கள் அழிப்பதும் ஆரோக்கியமானது அல்ல, சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் கம்பன் நீர் கால்வாய் 7 கி.மீ அழிவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு அரசு செயல் திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும், நிலப்பரப்பில் விமான நிலையம் அமைக்க மாற்றம் செய்ய வேண்டும். மேலும் மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் முதல்வரை சந்திக்கும்போது எழுத்துப்பூர்வமாக வழங்க இருப்பதாக தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கண்ணீர் திவலைகள்

கண்ணீர் திவலைகள்

இதனிடையே தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள திருமாவளவன் பூர்வீக வாழிடத்தைப் பறிகொடுத்துவிட்டு எமது வாரிசுகள் அநாதைகளாகத் திரிய வேண்டுமா? என கேட்டு ஏகனாபுரம் மக்கள் கண்ணீர் சிந்தினர். அவர்கள் மனமுடைந்து குமுறி அழும்போது எம் நெஞ்சை உலுக்கியது. எனது விழிகளின் விளிம்புகளில் முட்டி நின்றன வெப்பம் தெறிக்கும் கண்ணீர்த் திவலைகள்.

எப்படி வெளியேறுவோம்

எப்படி வெளியேறுவோம்

எங்கள் பிணங்களின் மீதுதான் பரந்தூர் விமான நிலையத்தைக் கட்டமுடியும் என கதறும் மக்களின் ஆற்றாமைக்கு என்ன விடையிறுக்க இயலும்? இங்கே பிறந்தோம்; வளர்ந்தோம்; வாழ்கிறோம். இந்நிலையில் எப்படி இம்மண்ணை, எம் தாய் மண்ணை விட்டு வெளியேறுவோம்?அது ஒருபோதும் இங்கே நடவாது என பொங்கினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+