விஜய்க்கு செக்! விசிக ஆதரவு கொடுத்தாலும்.. ஆளுநர் அழைப்பது சந்தேகம்! சீனுக்குள் வந்த டிடிவி தினகரன்
சென்னை: விஜய் ஆட்சி அமைக்க இன்னும் 2 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. விசிக ஆதரவு கொடுக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அப்படி நடந்தாலும் கூட, டிடிவியின் புகார் காரணமாக ஆளுநர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைப்பது டவுட்டுதான் என்று பலரும் கூறுகின்றனர்.
விஜய் ஜெயித்தது 108(107) இடங்கள்தான். இன்னும் 10 இடங்கள் இருந்தால் ஆட்சி அமைக்கலாம். காங்கிரஸ் 5, இடதுசாரிகள் 4 ஆதரவு கிடைத்துவிட்டது. இன்னும் 2 எம்எல்ஏ தேவை. இந்த இடத்தில்தான் அமமுகவின் ஆதரவு கிடைத்ததாக சொல்லப்பட்டது. இதனையடுத்து நேற்று விஜய் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

போதுமான எண்ணிக்கை இருப்பதால் விஜய்யை ஆளுநர் அழைத்திருக்க வேண்டும். ஆனால், அதற்குள் நேற்றிரவு டிடிவி தினகரன் மிக முக்கியமான குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்திருந்தார். அதாவது, தங்கள் எம்எல்ஏ குதிரை பேரம் மூலம் விலை பேசப்பட்டிருப்பதாகவும், எனவே ஆளுநர் இது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இது பெரிய பிரச்சனை. அரசியல் களத்தில் குதிரை பேரம் என்பது ஜனநாயகத்தின் மிகப்பெரிய சவாலாகக் கருதப்படுகிறது. டிடிவி தினகரன் போன்ற தலைவர்கள் இத்தகைய புகார்களை முன்வைக்கும்போது, ஆளுநர் மற்றும் தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தை தீவிரமான அணுகும். ஒருவேளை குதிரை பேரம் உறுதி செய்யப்பட்டால் விஜய்க்கு பெரிய சிக்கல் ஏற்படலாம்.
ஆளுநரின் அதிகாரம்
ஆளுநர் என்பவர் மாநிலத்தின் அரசியல் சாசனத்தின் பாதுகாவலர். குதிரை பேரம் நடப்பதாக அவர் நம்பினால், பெரும்பான்மை சந்தேகத்திற்குரியதாக இருக்கும்போது, ஆளுநர் தவெக தலைவரை ஆட்சி அமைக்க அழைக்காமல் காலதாமதம் செய்யலாம்.
எந்தெந்த எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு அளிக்கிறார்களோ, அவர்களை நேரில் அழைத்து "யாரேனும் உங்களை வற்புறுத்தினார்களா?" அல்லது "பணம்/பதவி ஆசை காட்டப்பட்டதா?" என விசாரிக்க ஆளுநருக்கு அதிகாரம் உண்டு. அதேபோல விஜய்க்கு ஆதரவளித்த எம்எல்ஏ மீது கட்சி தாவல் தடை சட்டம் பாயலாம்.
கட்சித் தாவல் தடைச் சட்டம்
இந்திய அரசியல் சாசனத்தின் 10-வது அட்டவணை படி ஒரு கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ, தனது கட்சியின் முடிவிற்கு மாறாக மற்றொரு அணிக்கு ஆதரவு அளித்தால், அவரது பதவி பறிபோகும். தினகரன் தனது எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு என்று கடிதம் கொடுத்திருக்கும் நிலையில், அவர்கள் விஜய்க்கு ஆதரவு அளித்தால், அவர்கள் உடனடியாகத் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இது தவிர, குற்றவியல் நடவடிக்கையும் பாய வாய்ப்பு இருக்கிறது.
குற்றவியல் நடவடிக்கை
குதிரை பேரத்தில் பெருமளவு பணம் கைமாறியது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படலாம். இது தேர்தலையே ரத்து செய்யும் அளவிற்கு அல்லது சம்பந்தப்பட்ட வேட்பாளர்களைத் தகுதி நீக்கம் செய்யும் அளவிற்குச் செல்லக்கூடும்.
நீதிமன்றத் தலையீடு
முன்பு கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் நடந்தது போல, இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்திற்குச் சென்றால், நீதிமன்றம் உடனடி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடும். ரகசிய வாக்கெடுப்பு இன்றி, நேரடி ஒளிபரப்புடன் வாக்கெடுப்பு நடத்தச் சொல்லி குதிரை பேரத்தைத் தடுக்க நீதிமன்றம் முயலும்.
குடியரசுத் தலைவர் ஆட்சி
எந்தக் கட்சியாலும் முறையான பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல், குதிரை பேரம் காரணமாக ஜனநாயகம் கேலிக்கூத்தாகும் சூழல் ஏற்பட்டால், ஆளுநர் ஆர்டிகல் 356-ஐப் பயன்படுத்தி 'குடியரசுத் தலைவர் ஆட்சி'க்கு பரிந்துரைக்கலாம். இதனால் விஜய்க்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications