அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சீட் கிடைப்பது 7.5% மட்டுமே! ஆளுநருடன் வாக்குவாதம் செய்த பெற்றோர்
சென்னை: மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்கள் சேருவதற்கு காரணம் 7.5 சதவீத இடஒதுக்கீடுதானே தவிர நீட் இல்லை என ஆளுநருடன் வாக்குவாதம் செய்த பெற்றோர் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆளுநர் மாளிகையில் அவ்வப்போது எண்ணித் துணிக எனும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் ஐஏஎஸ் , ஐபிஎஸ் தேர்வுகளில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல் நடத்தப்படும்.

அது போல் இந்த முறை நீட் தேர்வில் 720 க்கு 600 மதிப்பெண்களை பெற்ற மாணவ, மாணவிகளுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல் நிகழ்த்தினார். அப்போது அவரிடம் சேலத்தை சேர்ந்த ஒரு பெற்றோர் நீட் தேர்விலிருந்து எப்போது விலக்கு அளிக்கப்படும் என கேட்டார்.
அதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, கல்வி பொது பட்டியலில் இருப்பதால் அது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் நீட் விலக்கு மசோதாவிற்கு நான் நிச்சயம் ஒப்புதல் அளித்து கையெழுத்திட மாட்டேன். நீட் தேர்வுக்கு ஒரு போதும் நான் தடை சொல்ல மாட்டேன். அப்படி செய்தால் அது மாணவர்களுக்கு செய்யும் அநீதியாகும்.
நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது மாணவர்களின் போட்டித் திறனை கேள்விக்குறியாக்கும். நீட் தேர்வுக்கு பயிற்சி மையங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பள்ளிகளில் பாடம் நடத்தும் போதே மாணவர்களை நீட் தேர்வுக்கும் தயார் செய்யலாம். நீட் தேர்வு அரசியலாக்கப்படுகிறது. மாணவர்கள் வேறு பிரச்சினைக்காக தற்கொலை செய்யும் போது அரசியல்வாதிகள் ரூ 10 லட்சம், ரூ 20 லட்சம் என கொடுத்து கொடுத்து நீட் தேர்வால்தான் அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற பிம்பத்தை உருவாக்குகிறார்கள்.
நீட் தேர்வுக்கு முன்பு தமிழகத்தில் ஏழை எளிய மாணவர்கள் ஆண்டுக்கு 30 முதல் 40 பேர் வரை கூட மருத்துவம் பயில முடியாத நிலை இருந்தது. ஆனால் நீட் தேர்வு அந்த வணிக அரசியலை உடைத்தெறிந்துவிட்டது. இதனால் 2016 க்கு பிறகு ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு நனவானது என ஆளுநர் பேசியிருந்தார்.
அப்போது மாணவியின் தந்தை அம்மாச்சியப்பன் ஆளுநரிடம், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு முன்பு கூட மருத்துவ கட்டமைப்புகளும் மருத்துவ கல்லூரிகளும் நன்றாகத்தான் இருந்தன என கூறினார். அதற்கு ஆளுநர் நீங்கள் சொல்வது தவறு என கூறி ஒரு சில புள்ளி விவரங்களையும் கூறிய ஆளுநர், தொடர்ச்சியாக பேசிய போது உட்காருங்கள் என அம்மாச்சியப்பனை கூறினார்.
இந்த நிலையில் ஆளுநர் மாளிகையில் நடந்தது என்ன என கேட்ட போது அம்மாச்சியப்பன் கூறுகையில் தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு எப்போது அளிப்பீர்கள் என கேட்டேன். என் மகள் நீட் தேர்வில் சாதிக்க நான் ரூ 4 லட்சம் வரை செலவு செய்தேன்.
ஆனால் இதுபோன்றதொரு தொகையை எல்லாராலும் செய்ய முடியாது. எனவே பொது நலனுடன்தான் இந்த கேள்வியை கேட்டேன். இத்தனை நாள்கள் எனக்கு கேட்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் என் மகள் இன்று சாதித்ததால் ஆளுநரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நீட் நுழைவுத் தேர்வுக்கு பின்னணியில் மிகப் பெரிய சதி உள்ளது.நீட் தேர்வு இல்லாமலேயே தமிழகத்தில் 70 ஆண்டுகளாக சிறப்பான மருத்துவ கட்டமைப்பு உருவானது. அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் பயில நீட் தேர்வு காரணம் இல்லை. அரசு வழங்கும் 7.5 சதவீத இடஒதுக்கீடே ஆகும். நீட் தேர்வு பயிற்சிக்கு ரூ 20 லட்சம் வரை செலவிட முடியுமா? இவ்வாறு அம்மாச்சியப்பன் தெரிவித்தார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications