ஏலே நெல்லையில் 5 ரூவாதான.. ஏமாத்தவா பாக்க.. சென்னையில் பரோட்டா கடை சூறை
சென்னை: பரோட்டா விலை தொடர்பாக, ஏற்பட்ட மோதலில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேவேந்திரர்களை பட்டியல் சாதியில் இருந்து நீக்கி, வேளாண் மரபினராக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, 'தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்' சார்பில், கட்சியின் தலைவர் ஜான்பாண்டியன் தலைமையில், நேற்று சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.

உண்ணாவிரதத்தில் பங்கேற்க பாளையங்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் உட்பட நெல்லை பகுதியில் இருந்து பஸ்களில் பலரும் வந்திருந்தனர். இரவு அனைவரும் ஊருக்கு தாங்கள் வந்த பஸ்களில் கிளம்பினர்.
அப்போது குரோம்பேட்டை காவல் நிலையம் போலீஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு ஹோட்டலில் பரோட்டா சாப்பிட முடிவு செய்து ஒரு பஸ் நிறுத்தப்பட்டது.
16 வயதுள்ள சிறுவன் பஸ்சில் இருந்து இறங்கி ஓட்டலுக்கு சென்று பரோட்டா விலையை விசாரித்துள்ளார். ஹோட்டல் ஊழியர் சிவானந்தம் ஒரு பரோட்டா ரூ.25 என்றார்.
அதற்கு அவர் எங்கள் ஊரில் ரூ.5க்கு கிடைக்கிறது. இப்படி அநியாய விலைக்கு விற்கிறீர்களே என்று சிறுவன் வாக்குவாதம், செய்தார். இதனால் அவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த சிறுவன் பஸ்சுக்கு சென்று உடன் வந்தவர்களிடம் தகவல் கூறியுள்ளார். கோபமடைந்த மேலும் பல வாலிபர்கள் சேர்ந்து கொண்டு ஹோட்டலுக்கு சென்று தகராறு செய்தனர்.
இரு தரப்புக்கும் கைகலப்பாக மாறியது. ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். ஹோட்டலில் இருந்த நாற்காலி உள்ளிட்ட பொருட்களையெல்லாம் எடுத்து ஊழியர்கள் மீது வீசி அடித்தனர். பாத்திரம் உள்ளிட்ட பொருட்களை சூறையாடினர். அந்த பகுதியே போர்க்களம் போல மாறியது. தகவல் அறிந்ததும், போலீசார் அங்கு சென்றனர்.
இதனால் மோதலில் ஈடுபட்டவர்கள் ஓடினார்கள். அவர்களை போலீசார் துரத்தி சென்றதில் 7 பேர் சிக்கினார்கள். அவர்களை போலீசார் கைது செய்தனர். கைதானவர்கள் சிவப்பிரகாஷ், சதீஷ் முத்தையா, வீரபாண்டி, பேரறிவாளன், பாலச்சந்திரன், முத்துக்குமார் மற்றும் 16 வயது சிறுவன் ஆகும். இதில் பெரும்பாலானோர் கல்லூரி மாணவர்கள். கட்சிக்காரர் ஒருவர் ஹோட்டல் ஊழியர் மீது வென்னீரை ஊற்றியதால் அந்த ஊழியர் படுகாயத்தோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
-
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்












Click it and Unblock the Notifications