போராட்டத்தின்போது விஷம் குடித்த ஆசிரியர் பலி! பகுதி நேர ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சி!
சென்னை: பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடந்த போராட்டத்தின்போது விஷம் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் நடைபெற்ற பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டத்தின் போது விஷம் குடித்த பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் கண்ணன் பலியானார்.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜனவரி 6 ஆம் தேதி முதல் பகுதி நேர ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். திமுக ஆட்சிக்கு வந்தால், இதனை நிறைவேற்றித் தருவதாக கடந்த சட்டப் பேரவை தேர்தலின் போது அறிவித்த திமுக, அதனை தனது தேர்தல் அறிக்கையில் 181-வது வாக்குறுதியாகவும் அளித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகளாகியும் வாக்குறுதியை திமுக நிறைவேற்றாததால், பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் பகுதி நேர ஆசிரியர் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னையில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குநர் ஆர்த்தி, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன், தொடக்க கல்வித்துறை இயக்குநர் நரேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த பேச்சுவார்த்தையில் ஆசிரியர்கள் போராட்டத்திற்கு தீர்வு எட்டப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார். பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு மாதாந்திர ஊதியம் ரூ. 10 ஆயிரத்தில் இருந்து 2500 ரூபாய் உயர்த்தி ரூ. 12,500 வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது மேலும் ரூ. 2500 உயர்த்தி ரூ.15 ஆயிரமாக வழங்கப்படும் என அறிவித்தார்.
முன்னதாக, சென்னையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் வானகரத்தில் உள்ள திருமண அரங்கத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், அடக்குமுறைகளைக் கண்டித்தும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் கண்ணன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் இன்று மாலை காலமானார்.
ஆசிரியர் கண்ணன் உயிரிழந்துள்ளது பகுதி நேர ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நேற்கொண்டு வருகின்றனர். பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து இன்று ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications