ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேறுமா? தருமபுரியில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து மனு!
தருமபுரி: பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதி நேர ஆசிரியர்கள், தருமபுரி வந்த முதல்வர் ஸ்டாலினிடம் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்துள்ளனர்.
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வை தொடங்கி வைக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தருமபுரி வந்தார். இந்நிகழ்வில், விவசாயிகளுக்கு இணையவழியில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விண்ணப்பித்து, ஒரே நாளில் கடன் பெறும் நடைமுறையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தருமபுரி மாவட்டத்தில் 362 கோடியே 77 லட்சம் ரூபாய் செலவிலான 1,073 முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், 512 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 1,044 புதிய திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் 70,427 பயனாளிகளுக்கு 830 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனிடையே, அதியமான் கோட்டையில் தொடங்கியிருக்கும் உழவர் நலன் காக்கும் இந்த முன்னோடித் திட்டம், விரைவில் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என முதல்வர் உறுதி அளித்தார்.
இதற்கிடையே, தருமபுரி வந்த தமிழக முதல்வர் ஸ்டாலினை தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஒருங்கிணைப் பாளர் கோ.ரமேஷ் மற்றும் மு.தருமலிங்கம் இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் தமிழக அரசு பள்ளிகளில் நீண்ட காலமாக தற்காலிகமாக பணிபுரியும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.
இது குறித்து தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பபு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் கூறுகையில், "பகுதி நேர ஆசிரியர்களுக்கு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 12,500 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. மே மாதம் சம்பளம் மற்றும் அரசு சலுகை எதுவுமே கிடையாது என்பதால் இந்த குறைந்த சம்பளத்தில் இன்றைய விலைவாசி உயர்வில் குடும்பம் நடத்த முடியவில்லை.
எனவே 15 ஆண்டு தொகுப்பூதியத்தை, தற்காலிக வேலையை ஒழித்து இனி காலமுறை சம்பளம், திமுக தேர்தல் வாக்குறுதி 181-ன் படி பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
-
அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. தூண் ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலவீனமா? முழுசா மாறிய காங். -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
7 நாட்கள் 7 அறிக்கைகள்.. விஜய்யின் தூக்கத்தை கெடுக்கும் திமுக.. சொல்ல வருவது ஒரே மேட்டர் தான் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
கோவை மக்களுக்கு ஜாக்பாட்! பல மாத காத்திருப்புக்கு விடிவுகாலம்.. மெகா திட்டத்திற்கு கிரீன் சிக்னல்!










Click it and Unblock the Notifications