தமிழ்நாட்டில் இருக்கும் எம்பிக்களில் அதிக கேஸ் ’இவர்’ மீது தான்! இந்த கட்சி மீது இத்தனை கேஸா? ஷாக்.!
சென்னை: பதினெட்டாவது மக்களவைக்கான தேர்தல் நிறைவு பெற்றிருக்கும் நிலையில் எம்பிக்கள் தற்போது நாடாளுமன்றத்தில் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் பிரமாணபத்திர தாக்கல் படி தமிழகத்தில் அதிக குற்ற வழக்குகளை கொண்ட கட்சிகள் மற்றும் எம்பிக்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..
தேர்தலில் தமிழகத்தைப் பொறுத்தவரை நான்கு முனை போட்டி நிலவிய நிலையில் தற்போது திமுக கூட்டணி பெருவெற்றி பெற்றிருக்கிறது. அந்த கூட்டணி 40க்கு 40 என தமிழகம் புதுவை தொகுதிகளில் வெற்றி பெற்றது

இந்த கூட்டணி தவிர்த்து.. அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகியவை மக்களவைத் தேர்தலில் களம் கண்டன. இந்த இரண்டு கூட்டணிகளும், நாம் தமிழர் கட்சியுமே தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முழுமையாக திமுக கூட்டணி தமிழக எதிர்க் கட்சிகளை ஸ்வீப் செய்திருக்கும் நிலையில் தாங்கள் தான் அதிக வாக்குகளை பெற்றிருக்கிறோம் கடந்த ஆண்டுகளில் இருந்ததைவிட தற்போது வாக்கு சதவீதம் அதிகரித்து இருக்கிறது என அரசியல் கட்சிகள் கூறி வருகின்றனர். இருந்த போதும் எந்த கட்சியுமே மக்கள் பிரதிநிதிகளை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப முடியவில்லை. இதற்கிடையே தேர்தலில் எம்பிக்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் தற்போது நாடாளுமன்றத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தேர்தலுக்கு முன்னதாக வேட்புமனு தாக்கலின் போது வேட்பாளர்கள் தங்கள் மீதுள்ள குற்ற வழக்குகள் குறித்து பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தனர். அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் எம்பிக்கள் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அப்படி பார்க்கும் போது, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 40 தொகுதிகளிலும் 100% வெற்றியை பதிவு செய்துள்ளது.
தற்போது தமிழகத்தில் வெற்றி பெற்றிருக்கும் மக்களவை உறுப்பினர்களில் 40 பேரில் 26 பேர் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அதாவது சுமார் 65 சதவீத தமிழகத்தைச் சேர்ந்த எம்பிக்கள் மீது குற்ற வழக்குகள் பதிவாகி இருக்கிறது. இந்தப் பட்டியலில் தேனி திமுக மாவட்ட செயலாளர் எம்பியுமான தங்க தமிழ்ச்செல்வன் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் மீது 17 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல சிவகங்கை எம்பியும் காங்கிரஸ் பிரமுகருமான கார்த்தி சிதம்பரம் மீது, 10 குற்ற வழக்குகளும் திண்டுக்கல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளரும் எம்பியும் ஆன சச்சிதானந்தம் மீது ஒன்பது குற்ற வழக்குகளும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி எம் பி எம் காங்கிரஸ் பிரமுகருமான விஜய் வசந்த் மீது எட்டு குற்ற வழக்குகளும் நிலுவையில் இருக்கின்றன.
அரசியல் கட்சிகள் என்று பார்க்கும்போது அதிகபட்சமாக 125 குற்ற வழக்குகளோடு பாரதிய ஜனதா கட்சி முதல் இடத்தில் இருக்கிறது. 50 வழக்குகளுடன் திமுக இரண்டாவது இடத்திலும், 32 வழக்குகளுடன் காங்கிரஸ் மூன்றாவது இடத்திலும், 23 வழக்குகளுடன் அதிமுக நான்காவது இடத்திலும், 20 வழக்குகளுடன் பாட்டாளி மக்கள் கட்சி ஐந்தாவது இடத்திலும் இருக்கின்றன.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா











Click it and Unblock the Notifications