பாகப்பிரிவினை + உயில் எழுதுவது கஷ்டம்.. நில வழிகாட்டி மதிப்பு 70 % உயர்த்தினால் எப்படி? சீமான் நறுக்
சென்னை: வழிகாட்டி மதிப்பை உயர்த்துவதை மறுபரிசீலனை செய்து, பழைய நிலையே பதிவுத்துறை தொடர செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
கடந்த 2017ல் குறைக்கப்பட்ட வழிகாட்டி மதிப்புகளை, சமீபத்திய மாற்றங்களுடன் அமல்படுத்த தமிழக பதிவுத்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.. இதற்காக 70 சதவீதத்துக்கு மேல் புதிய வழிகாட்டி மதிப்புகள் விரைவில் அமல்படுத்தப் போவதாகவும் செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன.

எனவே, இதற்காக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்களையும் பதிவுத்துறை நடத்தி வருகிறது. அதாவது, ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடம் இந்த கருத்து கேட்பு கூட்டம் நடத்தி வருகிறது.
பாகப்பிரிவினை: ஆனால், 70 சதவீதம் வழிகாட்டு மதிப்புகளை உயர்த்தினால், கிராம மக்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என்று சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவிக்கிறார்கள்.. கிராமங்களில் விவசாயிகள், சிறிய அளவிலான நிலம் வைத்திருப்பவர்கள், ஆவணம் செய்யவோ மற்றும் பாகப்பிரிவினை செய்யவோ முற்படும்போது, இப்போதைய வழிகாட்டி மதிப்பீட்டுப்படி அதிக செலவாகிறது.
அதுமட்டுமல்லாமல், நன்கொடையோ, உயில் சாசனமோ செய்ய பெரிய சிரமம் ஏற்பட்டுவிடும் என்பதால், வழிகாட்டி மதிப்பை உயர்த்து வதை மறுபரிசீலனை செய்து, பழைய நிலையே பதிவுத்துறை தொடர செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகளை விடுத்து வருகிறார்கள். இதே கோரிக்கையைதான் எதிர்க்கட்சிகளும் விடுத்து வருகின்றன.
வழிகாட்டி மதிப்பு: அந்தவகையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் கண்டனம் தெரிவித்துள்ளார்.. சொத்து வரியை பன்மடங்கு உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கும் திமுக அரசு, பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பீட்டை 70 விழுக்காடு வரை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் என்றும் அறிக்கை விட்டு கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு முழுவதும் பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பீட்டை உயர்த்துவதற்குக் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது. கடந்த மார்ச் மாதம்தான் பத்திரப்பதிவு கட்டணத்தை 3 மடங்கு உயர்த்திய திமுக அரசு தற்போது மேலும் 70% வரை உயர்த்த முடிவெடுத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
சந்தை மதிப்பு: தமிழ்நாட்டில் உள்ள 571 பத்திரப்பதிவு அலுவலகங்கள் மூலம் பதிவு செய்யப்படும் சொத்துகளுக்கு, வழிகாட்டி மதிப்பீட்டின் அடிப்படையில் 7% முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் 2% நிர்வாகக் கட்டணம் என மொத்தமாக 9% வருவாய் ஒவ்வொரு பத்திரப்பதிவின் மூலமும் அரசுக்குக் கிடைத்து வருகிறது. மேலும், தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் சந்தை மதிப்புக்கு ஏற்ற வகையில் வழிகாட்டி மதிப்பீட்டை அவ்வப்போது உயர்த்துவதால் ஒவ்வொரு ஆண்டும் அரசுக்கு வருவாய் உயர்ந்தே வருகின்றது.
ஆனால், திமுக அரசு கடந்த 28.03.2024 அன்று திடீரெனப் பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பீட்டுக் கட்டணத்தை எவ்வித அறிவிப்புமின்றி 3 மடங்கு உயர்த்தியதால், ஏழை மக்கள் பொருளாதாரச் சிக்கலுக்கு உள்ளாகி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பத்திரப்பதிவு: தற்போது, வழிகாட்டி மதிப்பீட்டை மீண்டும் 70% வரை உயர்த்துவது குறித்து தமிழ்நாடு முழுவதுமுள்ள உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடம் பத்திரப்பதிவு துறையால் கருத்துகேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவது மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திமுக அரசின் இத்தகைய எதேச்சதிகார நடவடிக்கையால் தற்போது கிராமப்புறங்களில் காலி மனைக்கு சதுர மீட்டர் ஒன்றிற்குக் கட்டணம் 340 ரூபாயிலிருந்து 540 ரூபாய் என 200 ரூபாய் அளவிற்கு உயரவுள்ளது. உயரும் பத்திரப்பதிவு கட்டணத்தை நிலத்தின் விற்பனை மதிப்பில் சேர்த்துவிடுவதால் நிலவிற்பனை பெருமுதலாளிகளுக்கு எவ்வித பாதிப்பும் இக்கட்டண உயர்வால் ஏற்படப்போவதில்லை.
பாகப்பிரிவினை: ஆனால் உயில் மற்றும் பாகப்பிரிவினை செய்யும் ஏழை மக்களும், வாழ்க்கை முழுதும் அரும்பாடுபட்டு உழைத்து களைத்து சிறுக சிறுக சேர்த்த பணத்தில் சொந்தமாக ஒரு வீடு கட்டுவதை வாழ்நாள் கனவாகக் கொண்டு நிலம் வாங்க முயற்சிக்கும் பாமர மக்களும்தான் இத்தகைய பத்திரப்பதிவு கட்டண உயர்வால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
எனவே, சொத்து வரியைப் பன்மடங்கு உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கும் திமுக அரசு, பத்திரப்பதிவு கட்டணத்தையும் மீண்டும் மீண்டும் உயர்த்தும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும்" என்று சீமான் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications