முதல் முறையாக விமானப் பயணம்.. சென்னை ஏர்போர்டில் இளைஞருக்கு நடந்த வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம்
சென்னை: கையை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல், அவசர கால கதவை திறக்க முயன்றுள்ளார் ஒரு பயணி. சென்னையில் இருந்து டெல்லி செல்லும் விமானத்தில் அவசர கால கதவை திறக்க முயன்ற உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பயணியை தூக்கி சென்று போலீசில் ஒப்படைத்துள்ளார்கள் விமான நிலைய அதிகாரிகள்..
சென்னையில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 159 பயணிகள் அமர்ந்திருந்தனர். விமானத்தின் கதவுகள் அடைக்கப்பட்டு விட்டது. விமானி விமானத்தை ஓடு பாதையில், இயக்குவதற்கு தயாராகி கொண்டிருந்தார்..

இந்நிலையில திடீரென விமானத்தின் அவசரகால கதவை திறந்ததற்கான அபாய ஒலிக்கான அலாரம் ஒலித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமானி, உடனடியாக விமானத்தை இயக்காமல் நிறுத்திவிட்டு அவசரகால கதவை திறந்தது யார்? என்று நேரடியாக விசாரணையில் இறங்கினார்.
இதைத்தொடர்ந்து விமான பணிப்பெண்கள் அவசர கால கதவு அருகே உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த, பயணியிடம் சென்று விசாரித்தார்கள்.
அப்போது அந்த சீட்டில் அமர்ந்திருந்த பயணி, அவசர கால கதவை தான் திறந்ததை ஒப்புக்கொண்டார். அதேநேரம் நான் அந்த கதவை திறக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அந்த பட்டனை அழுத்தவில்லை என்றும் அந்த பட்டன் வித்தியாசமாக இருந்து. இதனால் அதை தெரியாமல் அழுத்தி விட்டேன் . உடனே விமானத்துக்குள், அந்த அலாரம் ஒலித்து விட்டது. மேலும் நான் முதல் முறையாக விமான பயணம் மேற்கொண்டேன்.. எனக்கு அது அவசரகால கதவை திறப்பதற்கான பட்டன் என்று தெரியாது' என்று கூறியுள்ளார்.
ஆனாலும் விமானிகள் மற்றும் விமான ஊழியர்கள், அவருடைய விளக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அந்தப் பயணியை உடனடியாக விமானத்திலிருந்து கீழே இறக்கி, காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று, சென்னை விமான நிலைய மேலாளருக்கு தலைமை விமானி அவசர தகவல் அளித்தார்.
இதையடுத்து விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து வந்து பயணியிடம் விசாரித்தனர். விமான பயணமும் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் அந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சுமார் 1 மணி நேரம் தாமதமாக, 158 பயணிகளுடன் டெல்லிக்கு புறப்பட்டு சென்றது. விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்ட பயணியை, சென்னை விமான நிலைய போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சென்னை விமான நிலைய போலீசார் அந்த பயணியை விசாரித்த போது, அவர் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 27 வயதாகும் சரோஸ் என்பதும், சென்னையில் ஒரு வேலையில் சேர நேர்காணலுக்கு உத்தரபிரதேசத்தில் இருந்து ரயிலில் வந்ததும், பின்னர், விமானம் மூலம் டெல்லிக்கு திரும்பி செல்ல இருந்ததும் விசாரணையில தெரியவந்தது. மேலும் அந்த பயணிக்கு இது முதல் விமான பயணம் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications