இது மும்பை இல்லைங்க.. நம்ம சென்னை தான்! செங்கல்பட்டு ரூட்டில் தொடரும் தலைவலி! கதறும் பொதுமக்கள்
சென்னை: சென்னையில் புறநகர் ரயில்களைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருப்பினும், இந்த ரூட்டில் பயணிக்கும் பயணிகள் பெரும் சிரமத்தையே எதிர்கொண்டு வருகின்றனர்.
வேலைவாய்ப்பு, படிப்பு என பல்வேறு காரணங்களுக்காகச் சென்னைக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இந்தியாவில் அதிக மக்கள்தொகையைக் கொண்ட நகரங்களில் ஒன்றாகச் சென்னை இருக்கிறது.

இதனால் சென்னையில் டிராபிக் பிரச்சினை மிகப் பெரிய தலைவலியாக மாறி இருக்கிறது. முக்கிய சாலைகளில் பெரும்பாலான நேரங்களில் டிராபிக் அதிகமாகவே இருக்கிறது. அதிலும் குறிப்பாக பீக் ஹவர்களில் நிலைமையைச் சொல்லவே வேண்டாம். அந்தளவுக்கு டிராபிக் மோசமாக இருக்கிறது.
புறநகர் ரயில்கள்: டிராபிக் பிரச்சினையைச் சரி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நெரிசல் அதிகம் இருக்கும் இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டும் வருகிறது. இருப்பினும், எந்த நகராக இருந்தாலும் சரி கூட்ட நெரிசலை இதுபோன்ற மேம்பாலங்கள் அல்லது சாலை விரிவாக்க பணிகள் முழுமையாகச் சரி செய்யவே செய்யாது. பொதுமக்களை பொது போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவித்தால் மட்டுமே டிராபிக் பிரச்சினை சரியாகும்.
சென்னையைப் பொறுத்தவரை பஸ், மெட்ரோ, புறநகர் ரயில்கள், பறக்கும் ரயில்கள் ஆகியவை பொது போக்குவரத்திற்கு இருக்கிறது. இதில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பொது போக்குவரத்து கருவியாகப் புறநகர் ரயில்கள் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் இந்த புறநகர் ரயில்களைப் பல லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர். நகரின் வெளியே இருக்கும் பொதுமக்கள் நகருக்குள் வந்து செல்ல இந்த புறநகர் ரயில்கள் மிகப் பெரியளவில் உதவுகிறது.

ரொம்ப மோசம்: அதிகப்படியான மக்கள் இதைப் பயன்படுத்தினாலும் ரயில்களில் நிலைமை ரொம்பவே மோசமாகவே இருக்கிறது. போதியளவில் ரயில்கள் இல்லாத காரணத்தால் பயணிகள் முற்றி மோதி ஏற வேண்டிய சூழலே இருக்கிறது. அதிலும் குறிப்பாகக் காலை 7.30 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 முதல் 7 மணி வரை ஆபீஸ் நேரங்களில் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழியும். உள்ளே ஏறுவதே பெரும் சிரமமாக இருக்கும். அந்தளவுக்குக் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.
அதிலும் குறிப்பாகப் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சென்னை- செங்கல்பட்டு ரூட்டில் கூட்டம் நிரம்பி வழியும். மாலை நேரங்களில் ஏறவே முடியாத அளவுக்குக் கூட்டம் இருக்கும். பெண்களுக்கு இந்த ரயில்களில் தனியாகவே சில பெட்டிகள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இருந்தாலும் அதிலும் கூட கூட்டம் நிரம்பி வழியும். அங்கே பெண்கள் கிட்டதட்ட தொங்கிக் கொண்டு செல்லும் சூழலே இருக்கும்.
சென்னை செங்கல்பட்டு ரூட்: இதற்கிடையே இது குறித்த படத்தை நெட்டிசன் ஒருவர் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இது மும்பை புறநகர் ரயில்களில் எடுக்கப்பட்ட படம் என நினைக்காதீர்கள்.. சென்னையில் செங்கல்பட்டு ரூட்டில் நிலவும் கூட்டம் இது எனப் பதிவிட்டு அவர் இரண்டு போட்டோக்களை பகிர்ந்துள்ளார். இதில் மகளிர் பெட்டியிலேயே இடம் இல்லாமல், பெண்கள் படிகளில் கிட்டதட்ட தொங்கிக் கொண்டு செல்லும் நிலையே இருக்கிறது.
அவர் பதிவிட்ட இந்த போட்டோக்களே இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மாலை நேரத்தில் சென்னை பீச்சில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கப்படும் எல்லா ரயில்களிலும் இதேபோலத் தான் கூட்டம் நிரம்பி வழிகிறது என்றும் இந்த ரூட்டில் இயக்கப்படும் ரயில்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்று பலரும் சாடியுள்ளனர். மேலும், இந்த ரூட்டில் 9 பெட்டிகளை கொண்ட ரயில்களுக்குப் பதிலாக 12 அல்லது 15 பெட்டிகளை கொண்ட ரயில்களைப் பயன்படுத்தலாம் என ஒரு சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
காரணம்: தாம்பரம்- செங்கல்பட்டு வரை சில ஆண்டுகள் முன்பு வரை இரண்டு லைன்கள் மட்டுமே பாதை இருந்தது. இதனால் அப்போது ரயில் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இதற்கிடையே இப்போது 3 லைன்களாக மாற்றப்பட்ட பிறகும் ரயில் எண்ணிக்கையை உயர்த்தவில்லை என்று சிலரும் சாடி வருகின்றனர். பீக் ஹவர்களில் பொதுமக்கள் பெரும் சிரமத்தைச் சந்திக்கும் நிலையில், ரயில் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தென்னக ரயில்வேக்கு பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
-
சென்னை மெரினாவிற்கு வரும் ‘ரோப் கார்'.. இனி வானில் பறந்து கொண்டே பீச்சை ரசிக்கலாம்.. குட்நியூஸ் -
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
சென்னை வாடகைதாரர்கள் கவனத்திற்கு! 2026 புதிய வாடகை சட்டத்தில் மாற போகும் அந்த 5 முக்கிய விதிகள் என்ன -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications