எங்க ஊருக்கு 5 மணி நேரத்துல போயிடலாம்..ஆனா கிளாம்பாக்கத்துல 6 மணி நேரமா வெயிட்டிங்! புலம்பிய பயணிகள்
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் தென் மாவட்டங்களுக்கு போதுமான பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 5 மணி நேர பயணத்திற்கு 6 மணி நேரம் காத்திருப்பதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னை நகரத்திற்குள் பேருந்துகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காகவும் கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து முனையம் கடந்த ஜனவரி மாதம் முதல் பயன்பாட்டுக்கு வந்தது. 88 ஏக்கர் பரப்பளவில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் இப்பேருந்து முனையத்தை கட்டி முடிக்க கடந்த 2019ம் ஆண்டு அப்போதைய அதிமுக ஆட்சியில் பணிகள் தொடங்கப்பட்டன. பின்னர் 4 ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து முனையம் பயன்பாட்டுக்கு வந்தது.

இப்படியாக பயன்பாட்டுக்கு வந்ததிலிருந்து பல்வேறு விமர்சனங்கள் இப்பேருந்து முனையம் மீது எழுந்திருக்கின்றன. இப்பேருந்து முனையத்திற்கு செல்ல நகர பேருந்துகளை தவிர வேறு வழி கிடையாது. ஆனால், கோயம்பேட்டில் இந்த பிரச்னை இல்லை. நகரின் மூலையில் இருக்கும் திருவொற்றியூரிலிருந்து கூட கோயம்பேட்டிற்கு மெட்ரோ சேவை இருக்கிறது. இது இல்லாமல் நகர பேருந்தில் வருவதெனில் குறைந்தபட்சம் 45 நிமிடங்களில் வந்து சேர்ந்துவிடலாம்.
ஆனால் கிளாம்பாக்கத்திற்கு இப்படி எந்த வசதியும் கிடையாது. வடபழனியில் வேலை செய்யும் ஒருவர் கிளாம்பாக்கம் வர குறைந்தபட்சம் 1 மணி நேரத்திலிருந்து 1.30 மணி நேரம் வரை ஆகும். மட்டுமல்லாது மெட்ரோ, மின்சார ரயில் என எந்த வசதியும் கிளாம்பாக்கத்திற்கு கிடையாது. இப்படியான விமர்சனங்களுக்கு மத்தியில் தற்போது போதுமான பேருந்துகள் இல்லை என்கிற குற்றச்சாட்டுகளும் எழுந்திருக்கின்றன.
இன்றும், நாளையும் வார இறுதி நாட்கள் என்பதால் மக்கள் சொந்த ஊருக்கு செல்ல நேற்றிரவு கிளாம்பாக்கத்தில் குவிந்தனர். ஆனால் ஊருக்கு போக போதுமான பேருந்துகள் இல்லாததால் அவர்கள் ஜிஎஸ்டி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இந்த சாலையில் சுமார் 1 மணி நேரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இது குறித்து பயணிகள் கூறுகையில், “நாங்கள் திருச்சியை சுற்றியுள்ள ஊர்களுக்கு செல்ல இங்கு வந்திருக்கிறோம். ஆனால் இங்கு பஸ் கிடைக்கவில்லை. எங்கள் கிராமங்களுக்கு பஸ்ஸை கேட்கவில்லை, முக்கியமான நகரமான திருச்சிக்குதான் பஸ் கேட்கிறோம். குறைந்தபட்சம் 5000 பேராவது இங்கு இருப்போம். இதுவரை திருச்சிக்கு என 25 பேருந்துகள்தான் சென்றிருக்கிறது. நான் நேற்றிரவு 10 மணிக்கு இங்கு வந்தேன். தற்போது விடியற்காலை 3.15 மணி ஆகிவிட்டது. இதுவரை திருச்சிக்கு பஸ் கிடைக்கவில்லை.
பேருந்து முனையத்திற்கு பேருந்துகள் நுழையும்போதே ஃபுல்லாகிதான் வருகிறது. அதில் எப்படி ஏற முடியும்? ஆனால், கிடைக்கும் பேருந்துகளில் ஏறிக்கொள்ள வேண்டும் என்று போலிசார் மிரட்டுகின்றனர். சமீபத்தில் 300 பேருந்துகள் விடப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த பேருந்துகள் எல்லாம் எங்கு ஓடுகிறது என்று எங்களுக்கு தெரியவில்லை. நாங்கள் ஆண்கள், எப்படியாவது சமாளித்துக்கொள்கிறோம். ஆனால் கை குழந்தைகளை வைத்திருக்கும் பெண்கள் இங்கு பல மணி நேரமாக காத்திருக்கிறார்கள். அவர்களால் எப்படி இந்த நெரிசலில் பயணிக்க முடியும்?
போக்குவரத்து அதிகாரிகளிடம் கேட்டால், வண்டி வந்தால்தான் உண்டு என்கிறார்கள். சில நேரம் வண்டி விபத்தில் சிக்கிக்கொண்டது என்று கூறுகிறார்கள். எதையும் அவர்களால் உறுதியாக கூற முடியவில்லை. இங்கிருந்து எங்கள் ஊருக்கு மொத்தமே 5 மணி நேரம்தான். ஆனால் பேருந்துக்காக 6 மணி நேரமாக காத்திருக்கிறோம்” என்று கூறியுள்ளனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications