பயணிகளுக்கு குட்நியூஸ்.. ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடம் முன்பு வரை ஏறும் இடத்தை மாற்ற அனுமதி
சென்னை: இனி ரயில்கள் புறப்படுவதற்கு 30 நிமிடங்கள் வரை பயணிகள் தாங்கள் ஏறும் ரயில்வே ஸ்டேஷனை மாற்றி கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதெடர்பாக தெற்கு ரயில்வே சார்பில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய ரயில்வே பயணிகளுக்கு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி இனி, ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் வரை பயணிகள் தாங்கள் ஏறும் இடத்தை (Boarding) மாற்றிக்கொள்ளலாம்.

இந்த புதிய வசதி 2026 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. இது பயணிகளுக்கு பெரிய அளவில் பயணளிக்கும். ஏனென்றால் இதற்கு முன்பு ஒருவர் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் ஏறும் இடத்தை மாற்ற விரும்பினால் ரயில் புறப்படுவதற்கு 24 மணிநேரத்துக்கு முன்பு மாற்றம் கோரிக்கை வைக்க வேண்டும்.
இந்த கோரிக்கை ரயில்வேயால் ஏற்கப்பட்டு ரயில் புறப்படுவதற்கு முன் தயாரிக்கப்படும் முதல் முன்பதிவு (First Chart) அட்டவணை லிஸ்ட்டில் வெளியிடப்படும். ஆனால் தற்போது ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடத்துக்கு முன்பு மாற்றம் செய்யலாம். இந்த மாற்றங்கள் இரண்டாவது முன்பதிவு அட்டவணை (Second Chart) லிஸ்ட்டில் காண்பிக்கப்படும்.
இந்த வசதியை பயணிகள் IRCTC இணையதளம் சேவை வழியாகவோ அல்லது பிஆர்எஸ் (PRS) கவுண்டர் உள்ளிட்டவற்றின் வாயிலாகவோ பெறலாம். இந்த சமயத்தில் ரயில் பயணத்துக்கான டிக்கெட் மற்றும் உரிய புகைப்பட அடையாள ஆவணம் கட்டாயம் இருக்க வேண்டும்.
மேலும் இந்த செயல்முறை உறுதியான (Confirmed) மற்றும் ஆர்ஏசி (RAC) டிக்கெட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். காத்திருப்பு பட்டியல் (Waiting list) டிக்கெட்டுகளுக்கு இது பொருந்தாது. அதேபோல் ஏறும் இடத்தை ஒருமுறை மட்டுமே மாற்றலாம். இரண்டாவது முன்பதிவு அட்டவணை தயாராவதற்கு முன்பே கோரிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications