சோதனை ஓட்டத்திலேயே இப்படியா? நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில்.. திருச்சி வந்த போது ஷாக்கான பயணிகள்
சென்னை: நேற்று சென்னை- திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் சோதனை நடைபெற்றது. இந்த ரயில் திருச்சி ரயில் நிலையம் வந்த போது நடந்த சம்பவம் ஒன்று விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
வந்தே பாரத் ரயில் மக்கள் இடையே அதிக கவனம் பெற்றுள்ளது. இந்த ரயிலை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

சென்னை முதல் பெங்களூர் வழியாக மைசூர் வரை ஏற்கனவே வந்தே பாரத் சேவை உள்ளது. முதல்முறையாக தமிழ்நாடு உள்ளேயே வந்தே பாரத் ரயில் சென்னை - கோவை இடையே திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 6 மணி நேரத்தில் கோவை செல்ல முடியும்.
வந்தே பாரத் ரயில்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் செப்டம்பர் 24ம் தேதி சென்னை - திருநெல்வேலி இடையே ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்கான பரிந்துரை தென்னக ரயில்வே மூலம் கொடுக்கப்பட்டு உள்ளது. 8 மணி நேரத்தில் சென்னை டூ நெல்லை செல்லும் விதமாக இந்த சேவை தொடங்கப்பட உள்ளது.
திருநெல்வேலி மற்றும் சென்னை: இதற்காக டிராக்கை சரி செய்ய வேண்டும். இந்த பணிகள் முடிந்துவிட்டன. குறுகிய வளைவுகளை நீக்க வேண்டும். இந்த பணிகள் நடந்து வந்த நிலையில் எதிர்பார்த்ததை விட வேகமாக பணிகள் முடிந்துள்ளன. இதனால் இந்த மாதம் 24ம் தேதி கண்டிப்பாக சென்னை - திருநெல்வேலிக்கு 8 மணி நேர ரயில் சேவை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. .
சென்னை-நெல்லை இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயிலுக்கான எண் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் நெல்லைக்கு வந்தே பாரத் சேவை தொடங்குவது உறுதியாகி உள்ளது. இந்த ஒதுக்கீடு காரணமாக பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நிறுத்தங்கள்: இந்த ரயில் எந்தெந்த நிறுத்தங்களில் நின்று செல்லும் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன. சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி வழியாக சென்று திருநெல்வேலி அடையும். மேல்கட்ட நிறுத்தங்களில் எல்லாம் இந்த ரயில் நிற்கும். இது போக கூடுதலாக ஒரு 1-2 நிறுத்தங்களில் நிற்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது ஜங்ஷன் அல்லாத மற்ற பெரிய ஸ்டேஷன்களில் இந்த ரயில் நிற்கும் வாய்ப்புள்ளது (ஆனால் முதல் பயணத்தில் இல்லை) என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
படுக்கை வசதி: நேற்று திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் சோதனை நடைபெற்றது. இந்த ரயில் திருச்சி ரயில் நிலையம் வந்த போது நடந்த சம்பவம் ஒன்று விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா முழுக்க பல மாவட்டங்களில், மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் தொடங்கப்பட்டு உள்ளது. வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், விரைவில் படுக்கை வசதிகளுடன் கூடிய 'வந்தே பாரத்' ரயில் அமலுக்கு வர போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
600 கிமீ தூரத்திற்கு மேல் செல்லும் வந்தே பாரத் ரயிலில் மட்டுமே படுக்கை வசதி இருக்கும். அதனால் இந்த 660 தூரம் கொண்ட சென்னை - நெல்லை ரயிலுக்கு படுக்கை வசதி இருக்கும் என்று பயணிகள் எதிர்பார்த்தனர். ஆனால் சோதனை ஓட்டத்தில் வந்த ரயிலில் படுக்கை வசதி இல்லை. இதனால் திருச்சியில் ரயிலில் ஏறி இறங்கி சோதனை செய்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
வரும் நாட்களில் இதில் படுக்கை வசதி வரும் என்றாலும் இப்போது படுக்கை வசதி இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
கவனம் பெறும் வந்தே பாரத்: வந்தே பாரத் ரயில் மக்கள் இடையே அதிக கவனம் பெற்றுள்ளது. இந்தியாவில் வந்தே பாரத் ரயில் அதிக கவனத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்த ரயிலை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சென்னை முதல் பெங்களூர் வழியாக மைசூர் வரை ஏற்கனவே வந்தே பாரத் சேவை உள்ளது. முதல்முறையாக தமிழ்நாடு உள்ளேயே வந்தே பாரத் ரயில் சென்னை - கோவை இடையே திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 6 மணி நேரத்தில் கோவை செல்ல முடியும்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications