தாம்பரம் தாண்டினால் தனி உலகம்.. செங்கல்பட்டு டூ பெருங்களத்தூர்.. ரயில் பயணிகளின் நிலைமை என்ன?
சென்னை: செங்கல்பட்டில் இருந்து சென்னை வரும் மின்சார ரயில்கள் எப்போதுமே தாமதமாக வருவதுடன், சரியான நேரத்திகு வராத காரணத்தால் பயணிகள் வேலைக்கு செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.. இதனால் செங்கல்பட்டு சென்னை வழித்தடத்தில் அதிக மின்சார ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை மாநகரம் சுற்றிலும் 100 கிலோ மீட்டர் தூரத்தில் வசிக்கும் வாழ்வாதாரமாக உள்ளது. சென்னை மாநகரம் செங்கல்பட்டு வரை வளர்ந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. செங்கல்பட்டு தொடங்கி பொன்னேரி வரையிலும், இந்த பக்கம்ஸ்ரீபெரும்புதூர் வரையிலும், அந்த பக்கம் திருவள்ளூர் வரையிலும் சென்னையில் வளர்ந்துவிட்டது.

சென்னையில் கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையிலும், சென்ட்ரல் முதல் அரக்கோணம் வரையிலும், சென்ட்ரல் முதல் திருத்தணி வரையிலும். கடற்கரை முதல் கும்மிடிப்பூண்டி வரையிலும் மின்சார ரயில்கள் ஓடுகின்றன. பணி, படிப்பு, வியாபார ரீதியாகவும் தினமும் இந்த ரயில்களில் ஏறி வந்து லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கிறார்கள்.
மேலே சொன்ன வழித்தடங்களில் மிக முக்கிய வழித்தடமாக சென்னை செங்கல்பட்டு வழித்தடம் உள்ளது இதில் தாம்பரம் வரை நான்கு பாதைகள் உள்ளன. அதற்கு பிறகு செங்கல்பட்டு வரை 3 பாதைகள் தான் உள்ளன. இதனால் தாம்பரம் வரை செல்லும் அனைத்து மின்சார ரயில்களையும் செங்கல்பட்டு வரை இயக்க முடிவது இல்லை.. இந்த சூழலில் அண்மையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையம் காரணமாக மின்சார ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகரித்துவிட்டது. ஆனால் ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.. அதேபோல் செங்கல்பட்டு கடற்கரை ரயில்கள் சரியான நேரத்திற்கு இயக்கப்படுவதும் இல்லை. எப்போதுமே தாமதமாக இயக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளது.
செங்கல்பட்டு, மகேந்திரா சிட்டி, பரனூர், மறைமலைநகர், பொத்தேரி, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர், பெருங்களத்தூர் உள்பட புறநகர் பகுதியிலிருந்து அலுவலகம் மற்றும் கல்லூரிகளுக்கு செல்கின்றவர்களுக்காக சாதாரண மின்சார ரயில்களை தாண்டி, அதிவிரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த ரயில்கள் சரியான நேரத்தில் பணிக்கு செல்வதற்கு மிகவும் முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பிற்கு முன்பு செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை வரை 6 அதிவிரைவு மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டது. ஆனால், தற்போது இந்த வழித்தடத்தில் 3 அதிவிரைவு மின்சார துரித ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
இதனால், பணி மற்றும் கல்லூரிக்கு செல்கின்ற பயணிகள் கூட்டம் துரித ரயில்களில் அதிகமாகவே காணப்படுகின்றது. அதுமட்டுமின்றி துரித ரயில்கள் சரியான நேரத்திற்கு வருவதும் இல்லை. பல நாட்களில் செங்கல்பட்டிலிருந்து ஊரப்பாக்கத்திற்கு காலை 8.40 மணிக்கு வரவேண்டிய துரித ரயில் 20 நிமிடம் தாமதமாக 9 மணிக்கு வருவதாகவும், காலை 8.55 மணிக்கு வரும் ரயில் 30 நிமிடம் தாமதமாக 9.25 மணிக்கும் வருவதாகவும் வேலைக்கு மற்றும் கல்லூரிகளுக்கு செல்கின்றவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இந்த ரயில்கள் ஒரு நாளும் சரியான நேரத்தில் வராத காரணத்தால் அலுவலகத்திற்கு எப்போதுமே தாமதாக செல்லும் நிலை இருப்பதாகவும் பயணிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications