Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாஸ் பிளான்! மெரினா மாற்றுத்திறனாளிகள் பாதை சிக்கலுக்கு தீர்வு! இனி எந்த புயல் வந்தாலும் சிக்கலில்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மெரினாவில் அமைக்கப்பட்டு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையில் உள்ள பார்வை மேடை இனிமேல் சேதம் அடையாமல் இருக்க தமிழ்நாடு அரசு புதிய திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது.

சென்னை மெரினாவில் கடந்த வருடம் இறுதியில் சில வாரங்களுக்கு முன் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் சாய்தள பாதை அமைக்கப்பட்டது. கடந்த சில வருடங்களாக அவ்வப்போது வார இறுதி நாட்களில் மட்டும் இந்த சாய்தள பாதைகள் தற்காலிகமாக அமைக்கப்படும்.

இவை எல்லாம் தற்காலிக பாதைகள்தான். வார இறுதி முடிந்த பின் இந்த பாதைகள் நீக்கப்படும். அப்போதில் இருந்தே இந்த பாதைகள் நிரந்தரமாக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன.

மாற்றுத்திறனாளிகள் பலர் தங்களுக்கு நிரந்தர பாதை வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த தற்காலிக அமைக்கப்பட்ட பின் அதற்கு பிரம்மாண்ட வரவேற்பு இருந்தது. ஆயிரக்கணக்கில் மாற்று திறனாளிகள் வந்து இங்கு பார்வையிட்டு சென்றனர். ஆனால் இது தற்காலிக பாதை என்பதால் அதன்பின் நீக்கப்பட்டது. இதை நிரந்தரமாக வேண்டும் என்று மக்கள் பலரும் தீவிரமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஸ்டாலின்

ஸ்டாலின்

இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், எத்தனை முறை சென்றாலும் சலிக்காதது கடல் என்பார்கள். அந்தக் கடலலையில் ஒருமுறையேனும் கால் நனைக்க நினைத்திருந்த மாற்றுத்திறனாளிகளின் எண்ணம் நனவாகும் வண்ணம் தற்காலிகப் பாதையினை ஏற்படுத்தியுள்ளோம்; விரைவில் நிரந்தரம் ஆக்குவோம். சிறிய பணிதான் இது; பெரிய மாற்றத்துக்குத் தொடக்கமும் கூட, என்று குறிப்பிட்டு இருந்தார். அதாவது மெரினாவில் அவ்வப்போது தற்காலிகமாக அமைக்கப்படும் இந்த பாதை விரைவில் நிரந்தரம் ஆக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார்.

பாதை

பாதை

அதன்படியே இதை நிரந்தரமாக்க.உத்தரவிடப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக தீவிரமாக நடந்து வந்தது. மொத்தம் 263 மீட்டர் தூரத்திற்கு இந்த பாதை நிரந்தரமாக அமைக்க பணிகள் நடந்தது. கடந்த முறை தற்காலிகமாக geosynthetic மெட்டீரியல் மூலம் இந்த பாதை அமைக்கப்பட்டது. இந்த geosynthetic மெட்டீரியல் பாதை அமைக்க 30 லட்சம் மட்டுமே செலவாகும். ஈரத்தில் இந்த பாதை வீணாகாது என்பதால் இப்படி அமைக்கப்பட்டது.ஆனால் ஈரமாக இருக்கும் போது இதில் வீல் சேர் ஓட்ட முடியாது. வீல் சேரில் வழுக்கும். இதனால் கடும் சிக்கல் ஏற்படும். இதனால் geosynthetic மெட்டீரியலுக்கு பதிலாக வேறு வகையான மர பாதை அமைக்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை வைத்தனர் .

மர பாதை

மர பாதை

மர பாதை அமைக்க 1.15 கோடி ரூபாய் செலவு ஆகும். இருந்தாலும் மரப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. விரைவில் இதற்கான பணிகள் நடந்து வந்தன. இதையடுத்து சில வாரங்களுக்கு முன் இந்த பாதை திறக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் பலர் இந்த பாதையை பார்வையிட்டனர். மக்கள் இடையே இந்த பாதை பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் சென்னையில் தாக்கிய மாண்டஸ் புயலின் போது இந்த பாதையின் இறுதியில் இருக்கும் பார்வையிடும் பகுதி சேதம் அடைந்தது. கடல் ஆக்ரோஷமாக இருந்ததால் ஏற்பட்ட மண் அரிப்பு காரணமாக அந்த பார்வையிடும் பகுதி மட்டும் சேதம் அடைந்தது.

பார்வையிடும் பகுதி

பார்வையிடும் பகுதி

கடல் ஆக்ரோஷமாக இருந்ததால் ஏற்பட்ட மண் அரிப்பு காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பார்வையிடும் பகுதியை புனரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. பாதையில் உள்ள பார்வை மேடை இனிமேல் சேதம் அடையாமல் இருக்க தமிழ்நாடு அரசு புதிய திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது. அதன்படி இந்த பார்வை மேடையை கழற்றி மாற்றும் வகையில் தற்காலிகமாக அமைக்க உள்ளனர். ஒவ்வொரு வருடமும் மழை காலத்தில் இதை கழற்றி மாற்றவும், புயலுக்கு முன்பாக கழற்றி மாற்றவும் முடிவு செய்துள்ளனர். என்னதான் இங்கு வலுவான மர கட்டுமானம் மேற்கொண்டாலும், அது உடைந்துவிடும் என்பதால் இந்த முறை தற்காலிகமாக அமைக்க முடிவு செய்துள்ளனர்.அதாவது இந்த பார்வை மேடை மட்டும் தற்காலிகமாக அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+