பட்டா மாறுதலில் மாற்றம்? பத்திரப்பதிவு அதிரடி.. ஜஸ்ட் 7 மாசத்துல கலக்கிய தமிழக பதிவுத்துறை.. சூப்பர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பத்திரப்பதிவுகள் அதிகரித்து வருவதால், கடந்த ஆண்டை விட நடப்பு நிதியாண்டில் இதுவரை, 11,733 கோடி ரூபாய் வசூலாகி உள்ளதாக, பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் மற்ற துறைகளை போலவே பத்திரப்பதிவு துறையும், முற்றிலும் ஆன்லைன்மயமாகிவிட்டது. ஒவ்வொரு வருடமும் வருவாய் இலக்கு நிர்ணயித்து, பத்திரப்பதிவு துறை செயல்பட்டு வருகிறது.

patta change tn registration department bond registration

அந்தவகையில், இந்த வருடமும் ரூ.25,000 கோடி வருவாய் இலக்கை நிர்ணயித்து, பதிவுத்துறை பயணப்பட்டு வருகிறது. இதற்காகவே, பல்வேறு அதிரடிகளையும், அறிவிப்புகளையும், வெளியிட்டு வருவதுடன், பொதுமக்களுக்கான சலுகைகளையும் வாரி வழங்கி வருகிறது.

கூடுதல் டோக்கன்கள்: அதன் ஒருபகுதியாக, சுபமுகூர்த்த தினங்களில் சார்பதிவாளர் அலுவலகத்தில் கூடுதல் டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அதுபோல, சில விடுமுறை நாட்களிலும் கூடுதல் பத்திரப்பதிவை மேற்கொள்ள மக்கள் கோரிக்கை விடுத்து வந்ததால், அதற்கேற்றபடியும் விசேஷ டோக்கன்கள் கூடுதலாக விநியோகிக்கப்படுகின்றன.

இதற்கு நடுவில், 20 பிரிவுகளுக்கான கட்டணம் கடந்த 2001ம் ஆண்டு முதல் உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், கடந்த மே மாதம் இந்த கட்டணத்தை பத்திரப்பதிவு துறை உயர்த்தியிருந்தது.

உறுதிமொழி ஆவணம்: அந்த வகையில், குறைந்த பட்ச முத்திரைத் தாள் கட்டணம் ரூ. 20 லிருந்து ரூ. 100, ரூ. 200, ரூ. 500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. உறுதிமொழி ஆவணத்திற்கான முத்திரைத் தாள் கட்டணத்தை ரூ. 20லிருந்து ரூ. 200 ஆக பத்திர பதிவுத்துறை அதிகரித்தது.. இபோல, நிறுவன குறைப்பாணைகள், பவர் பத்திரம், அடமான பத்திரம், கூட்டு ஒப்பந்தம், பாதுகாப்பு பத்திரங்கள் உள்பட 20 பிரிவுகளின் முத்திரைத்தாள் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன.

இப்படி உயர்த்தப்பட்ட கட்டணங்களால் பத்திரப் பதிவு துறைக்கு கூடுதலாக ரூ. 1222 கோடி வரை வருவாய் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. வருவாய் மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இந்தத் தகவல்கள் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவுத்துறை : தமிழகத்தில் பத்திரப்பதிவு பணிகள் குறித்த சீராய்வு கூட்டம், சென்னையில் நேற்று பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடந்தது. பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:

தமிழகத்தில் நடப்பு நிதி ஆண்டில், அக்டோபர் இறுதி வரையிலான ஏழு மாதங்களில், பத்திரப்பதிவுகள் வாயிலாக, 11,733 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், 10,511 கோடி ரூபாய் வசூலானது.

அதிக வசூல்: கடந்த ஆண்டைவிட தற்போது, 1,222 கோடி ரூபாய் கூடுதலாக வசூலாகியுள்ளது. பத்திரப்பதிவு அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது. முகூர்த்த நாள் என்பதால், நாளையும், நாளை மறுதினமும், சார்-பதிவாளர் அலுவலகங்களில், பத்திரங்கள் பதிவு செய்ய கூடுதல், டோக்கன்கள் வழங்கப்படும். வழக்கமாக, 100 டோக்கன்கள் வழங்கப்படும் இடங்களில், 150 டோக்கன்களும் மற்றும் 200 வழங்கப்படும் அலுவலகங்களில், 300 டோக்கன்களும் வழங்கப்படும்.

பதிவு முடிந்த பத்திரங்களை, உடனடியாக மக்களுக்கு திருப்பித்தர வேண்டும், வில்லங்க சான்று, பிரதி ஆவணங்களை உடனுக்குடன் அளிக்க வேண்டும். பத்திரப்பதிவின் போது தானியங்கி பட்டா மாறுதல் வசதியை, சார்- பதிவாளர்கள் பயன்படுத்த வேண்டும்" என்றார்.

வரவேற்பு: அதாவது பத்திரப் பதிவு மூலம், 2023-2024 ஆம் ஆண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான வருவாய் ரூ. 10,511 கோடியாக இருந்த நிலையில், இதே காலகட்டத்தில் 2024-2025ல் வருவாய் ரூ. 11,733 கோடியாக அதிகரித்திருப்பதும், பத்திரப்பதிவின் போது தானியங்கி பட்டா மாறுதல் வசதியை பயன்படுத்த அதிகாரிகளிடம் வலியுறுத்தியிருப்பதும் பொதுமக்களின் கவனத்தை பெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+