பட்டா மாறுதல்கள் செய்யணுமா? சொத்து பத்திரத்தில் பெயர் மாற்றணுமா? பிழை திருத்தல் பத்திரம் என்றால்? அட

Subscribe to Oneindia Tamil

சென்னை: சொத்து பத்திரங்களில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமா? பிழை திருத்தல் பத்திரம் என்றால் என்ன? அதற்கான கட்டணம் எவ்வளவு? சார் பதிவாளர் அலுவலகத்தில் இதுகுறித்த நடைமுறைகள் என்னென்ன? என்பதை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
பட்டா என்பது, வீடு, நிலத்தினை சொந்தமாக வாங்கும் உரிமையாளர்கள் பெற்றிருக்கவேண்டிய ஆவணமாகும்.. இந்த பட்டாவில் நிலத்தின் உரிமையாளரின் பெயர், சர்வே எண், நில வகை, நிலம் அமைந்துள்ள பகுதி போன்ற விவரங்கள் அடங்கியிருக்கும்.

patta change registration department

பத்திரங்கள்: எப்போதுமே பத்திரங்களை பெற்றிருக்கும் சொத்தின் உரிமையாளர்கள், பழைய எண், புதிய எண்களில் பிழைகள் உள்ளனவா? என்பதை கவனிக்க வேண்டும். சிறு பிழை என்றாலும், பத்திரத்தின் சொத்து விவரங்கள், பட்டாவுடன் முழுமையாக ஒத்துப்போகாது.. பொருந்தாமல் போய்விட்டால், பிற்காலத்தில் சிக்கல் வரும்.. அல்லது சொத்துக்களை அவசரத்துக்கு விற்க நேர்ந்தாலும், நெருக்கடி ஏற்பட்டுவிடும்.

அதேபோல, பெயர் மாற்றம் செய்வதாக இருந்தாலும் உரிமையாளர்தான் நேரில் செல்ல வேண்டும். எந்த முறையில் பெயர் மாற்றம் செய்ய போகிறீர்கள் என்பதை தெளிவாக சொல்ல வேண்டும். பிறகு உரிமையாளர் பெயரில் பட்டா மற்றும் பத்திரங்கள் உள்ளனவா என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

பதிவு கட்டணம்: இதற்கு பிறகு, நிலப்பதிவேடு அலுவலகத்திற்கு சென்று, முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணங்களை செலுத்த வேண்டும்... பின்னர், புதிய பெயரை பற்றின சுயசான்றளிக்கப்பட்ட சான்றிதழ்களை ஒப்படைக்க வேண்டும். நீங்கள் ஒப்படைத்த சான்றிதழ்கள் சரியாக உள்ளதா? என்பது அந்த அலுவலகத்தில் சரிபார்க்கப்படும்.

பிறகு, நிலப்பதிவேடு அலுவலகத்தின் உரிமை துறையானது, பத்திரத்தில் பெயர் மாற்றுவதற்கான முன்மொழிவு குறித்து விசாரணையை கையில் எடுக்கும்.. ஏனென்றால், இந்த பெயர் மாற்றத்தின் பெயரில், மோசடிகள் நடந்துவிடாமல் இருப்பதற்காக இதுபோன்ற விசாரணைகள் நடத்தப்படும்.

உரிமையாளர்கள்: சட்டரீதியாக ஒவ்வொன்றும் சரிபார்த்ததுமே, பத்திர பதிவுகளில் பெயர் புதுப்பிக்கப்படும்.. இறுதியில், பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கான ஆவணங்கள், சொத்தின் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படும்.

அதேபோல, எழுத்துப்பிழைகள் இருந்தாலும் சரிசெய்துவிட வேண்டும்.. பெரும்பாலும் தட்டச்சு செய்யும்போது இப்படியான பிழைகள் ஏற்பட்டுவிடும். எனினும் இந்த பிழையை அப்படியே விட்டுவிட முடியாது. ஓரிரு எழுத்துக்களில் பிழை என்றாலும், பிற்காலத்தில் இதனால் சிக்கல்கள் வர வாய்ப்புள்ளது. எனவே, பத்திரங்களில் உள்ள பிழைகளை உடனடியாக சரிசெய்துவிட வேண்டும். பெயரில் திருத்தம் செய்வதானாலும் சார் பதிவாளர் அலுவலகத்தில் செய்துவிட முடியும்..

பிழை திருத்தல்: சொத்து மாறாத நிலையில், குறைந்தபட்ச கட்டணமே இதற்கு வசூலிக்கப்படும். அதுமட்டுமல்ல, விற்பனை செய்து, ஆவணம் ஏற்படுத்தி தரும் அதே நபராலேயே, இந்த பிழை திருத்தம் செய்யப்படும். இப்படி பிழையும் திருத்தப்பட்டு, நம்மிடம் ஒப்படைக்கும் ஆவணத்தின் பெயர்தான், "பிழை திருத்தல் பத்திரம்" (Rectification Deed) என்பார்கள்.

துணைப்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட திருத்தப்பத்திரத்தைப் பெறுவதற்கான கட்டணம் ரூ. 100. எனினும், அசல் ஆவணங்களில் சிறிய தட்டச்சு அல்லது எழுத்துப்பிழை தொடர்பான மாற்றங்கள் இருந்தால் மட்டுமே இந்த கட்டணங்கள் பொருந்தும். ஆவணம் கணிசமான அளவில் மாற்றப்பட வேண்டியிருக்கும் பட்சத்தில், அலுவலகத்திற்கு அதிக கட்டணங்கள் தேவைப்படலாம், காரணம், ஆவணம் மீண்டும் உருவாக்க வேண்டும் என்று கருதப்படலாம்.

அதேபோல, நீங்கள் எந்த சொத்தை பட்டா மாற்ற வேண்டுமோ அந்த சொத்தினுடைய ஆவணம், அதாவது சொத்து பாத்திரம் (Registration Document), பட்டா மாற்றம் செய்ய இருக்கும் சொத்தினுடைய தாய் பத்திரமும் இற்கு தேவைப்படும். இந்த சொத்தினுடைய கணினி சிட்டா மற்றும் வில்லங்க சான்றிதழும் தேவைப்படும். அதேபோல, ஆதார் அட்டை, பான் அட்டை, ஓட்டுனர் உரிமம், ரேஷன் அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை குடியிருப்பு ஆவணங்களில் ஏதாவது ஒன்று கண்டிப்பாக தேவைப்படும்.. இதைத்ததவிர, ஆதார் அட்டை, தொலைப்பேசி ரசீது, மின் கட்டணம், சமையல் எரிவாயு ரசீது, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை போன்றவைகள் இருந்தால், பட்டா மாறுதல் செய்துவிடலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+