பட்டா மாறுதல்.. ஆன்லைனில் சர்வே எண் வருதா? உட்பிரிவு எண்? இதென்ன புதுஸா? பதிவுத்துறை தந்த நம்பிக்கை
சென்னை: சொத்து வாங்கியவர்கள் தங்கள் பெயருக்கு பட்டா மாறுதல் பெற வேண்டுமானால், அதற்கு ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கும் வசதியை தமிழக அரசு ஏற்படுத்தி தந்துள்ளது.. ஆன்லைனில் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும்போது, நேரம் மிச்சமாகிறது, இடைத்தரகர்களுக்கு இதில் இடமில்லை, பணம் விரயமாகாது, அலைச்சல் குறைகிறது. எனினும், ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது, சில இடங்களில் மட்டும், சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்த முக்கிய வேண்டுகோள் வருவாய்த்துறைக்கு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வீடு, மனை வாங்குவோர், அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும். இதற்காக, சொத்து வாங்கியவர்கள், இசேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். அதேபோல, இசேவை வெப்சைட்டிலும், நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் விண்ணப்பங்கள்
இப்படி வரும் ஆன்லைன் விண்ணப்பங்களை, சர்வேயர்களுக்கும், விஏஓவுக்களுக்கும் செல்லும்.. அவர்கள் அதுதொடர்பான கள ஆய்வு நடத்தி, பட்டா வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்கள்.
பொதுவாக, பட்டா மாற்றுவதில், உட்பிரிவற்ற பட்டா, உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் என 2 வகைகள் உள்ளன.. அதாவது, ஒருவர் தன்னுடைய பட்டாவில் உள்ள முழு நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்தால் அது உட்பிரிவற்ற பட்டா மாறுதல் ஆகும். அந்த நிலத்தை பகுதி, பகுதியாக பிரித்து விற்பனை செய்தால் உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் ஆகும்.
உட்பிரிவு இல்லாத பட்டாக்களுக்கு உடனடியாக பத்திரப் பதிவுத்துறையில் இருந்து வருவாய்துறைக்கு குறிப்பு அனுப்பி நில அளவீடு, ஆவண ஆய்வு செய்து பத்திரப்பதிவு நடப்பது வழக்கமாகும்.
பட்டா மாறுதல் வெப்சைட்
இந்நிலையில், பட்டா மாறுதலுக்கு அதற்கான வெப்சைட்டில் விண்ணப்பிக்கும்போது, பழைய உட்பிரிவு எண்கள் வருவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. அதாவது. சர்வே எண், பழைய உட்பிரிவு எண்ணுக்கு உட்பட்ட சொத்தின், ஒரு பகுதியை வாங்குவதாக இருந்தால், அதற்கு புதிய உட்பிரிவு எண் பெறுதல் தலைப்பில், பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
அப்படி விண்ணப்பிக்கும்போது, மாவட்டம், தாலுகா, கிராமம் விபரங்களை உள்ளீடு செய்தால், பிரதான சர்வே எண்கள் திரையில் தோன்றும்.. அதை தேர்வு செய்தால், சர்வே எண்ணில், இப்போதுள்ள உள்ள உட்பிரிவு எண்கள் திரையில் தோன்றும். இதில், பொருத்தமான உட்பிரிவை தேர்வு செய்தால்தான், விண்ணப்ப பதிவின் அடுத்த ஆப்ஷனுக்கு செல்ல முடியும்.
உட்பிரிவு எண்கள்
ஆனால், பிரதான சர்வே எண்ணை தேர்வு செய்த பிறகு, உட்பிரிவு எண்கள் வருவதில்லையாம்.. பாதியிலேயே முடங்கிவிடுகிறது. மறுபடியும் முயற்சித்தாலும், உட்பிரிவு எண்கள் வருவதில்லை. அதனால் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலைமை உள்ளதால், இந்த இடர்பாடினை வருவாய் துறை சரிசெய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் பொதுமக்கள் தரப்பிலிருந்து எழுந்துள்ளது.
ஆனால், ஒரு சில இடங்களில் மட்டுமே இப்படியான பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதால், அதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து, விரைவில், சிக்கல் சரிசெய்யப்படும் என்றும் வருவாய் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications