Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா.. தமிழக அரசு முடிவால் என்ன நன்மை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க கொள்கை ரீதியில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. அதனை முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேற்று கூறினார். .இது அரசாணையாக மாறி வெளியானால் பலர் பயன்பெறுவார்கள். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பலர் பயன்பெறுவார்கள்.

சட்டசபை கேள்வி நேரத்தின்போது, திருப்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. நல்லதம்பி, திருப்பத்தூர் வட்டம், எலவம்பட்டி மதுரா மைக்காமேடு மற்றும் ஜெகன்நாதன் வட்டம் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க அரசு முன்வருமா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பதில் அளித்து பேசுகையில், "எலவம்பட்டி மதுரா மைக்காமேடு பகுதியில் 1.39 எக்டேர் நிலம் தொழிற்சாலை புறம்போக்கு நிலம் என வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.

patta deeds for those living on pastoralist lands What are the benefits of the TN Govt s decision

மேலும் அங்கு செயல்பட்டு வந்த கனிமவள நிறுவனம் செயல்பாட்டில் இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேற்படி அங்கு குடியிருப்பவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க தமிழ்நாடு கனிமவள மேலாண்மை இயக்குனர், முதன்மை செயலாளர் கருத்துரு அனுப்ப கடிதம் கோரப்பட்டுள்ளது. மேலாண்மை இயக்குனர், முதன்மை செயலாளரின் கருத்துரு பெறப்பட்டு, பின்னர் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 22 லட்சம் பேருக்கு முதல்வர் ஸ்டாலின் பட்டா வழங்கியிருக்கிறார். மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க கொள்கை ரீதியில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. அதனை முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். அங்குள்ள ஏழை-எளிய மக்களுக்கு துன்பம் வராத வகையில் பட்டா வழங்கும் முயற்சிகளை இந்த அரசு மேற்கொள்ளும். பட்டா வழங்காததற்கு பல்வேறு பிரச்சினைகள் இருக்கிறது" இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 27ம் தேதி அன்று சட்டசபையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்க துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது.இந்த விவாதத்தின் போது வேளச்சேரி தொகுதி எம்எல்ஏவான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அசன் மவுலானா பேசுகையில், "பட்டா பெறுவதில் சென்னை போன்ற நகரங்களில் சிக்கல் இருக்கிறது. நகரமயமாக்குதலால் மேய்க்கால் புறம்போக்கு என்று இப்போது கேட்டால் இருக்காது. சென்னை மாநகரத்திற்குள் மேய்க்கால் மற்றும் மேய்ச்சல் புறம்போக்கு இருக்கும்போது, எப்படி ஆட்சேபனைக்குரிய புறம்போக்காக வரும்' என்று கவலை தெரிவித்தார்.

அதற்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பதில் அளித்து பேசுகையில், " இவை எல்லாம் நீதிமன்றம் போட்ட உத்தரவு. நமது அரசு போட்ட உத்தரவு இல்லை. அந்தக் காலத்தில், சென்னையை விரிவாக்கம் செய்யும்போது நிறைய ஆடு, மாடுகள் இருந்தன. மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள் நிறைய இருந்திருக்கின்றன. அதனால், ஆவணத்தில் அப்படி இருக்கிறது. அதை நாம் இப்போது மாற்ற வேண்டும் என்றால் நாம் நீதிமன்றத்திற்கு தான் போக வேண்டியிருக்கிறது" என்றார்.

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், "இந்த பிரச்சினை, சென்னையை ஒட்டியிருக்கக்கூடிய காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய இதுபோன்ற மாவட்டங்களில் இருந்து கொண்டிருக்கிறது. எனவே, இதுகுறித்து விரைவில் பரிசீலிக்கப்பட்டு, நிச்சயமாக, அனைவருக்கும் வழங்கக்கூடிய நிலையில், பட்டா வழங்கப்படும்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில்தான் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க கொள்கை ரீதியில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. அதனை முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேற்று கூறினார். தற்போதைய நிலையில்
அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கப்படுகிறது என்றாலும் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்கப்படுவது கிடையாது.. மேய்க்கால் புறம்போக்கு நிலத்திற்கு பட்டா தருவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனவே மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்து பட்டா பெறுவது சட்டப்படி தவறு.

இதன் காரணமாக பல ஆண்டுகளாக மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போர் பட்டா வாங்க முடியாமல் சென்னையின் புறநகர் பகுதிகளில் பலர் அவதிப்பட்டு வருகிறார்கள். ஏனெனில் மேய்க்கால் நிலங்களை வீட்டு மனைகளாகவோ அல்லது தொழிற்சாலைகளாகவோ மாற்றுவது சட்டப்படி கடினம். ஒருவேளை தவிர்க்க முடியாத காரணத்தால் (எ.கா: பொதுநலத் திட்டங்கள்) மேய்க்கால் நிலத்தை அரசு எடுத்தால், அதற்குப் பதிலாக அதே பரப்பளவில் மற்றொரு நிலத்தை அந்தப் பகுதியில் மேய்க்கால் நிலமாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

தற்போது அரசு கொள்கை முடிவு எடுத்திருப்பதாக கூறியுள்ளது.இது அரசாணையாக மாறி வெளியானால் பலர் பயன்பெறுவார்கள். திருப்போரூர், மறைமலைநகர் மற்றும் மதுராந்தகம் பகுதிகளில் உள்ள கிராமங்கள்,ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தொழிற்பேட்டைக்கு அருகில் உள்ள கிராமப்புறங்கள், சோழவரம், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பெரிய பயனுள்ளதாக இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+