பட்டா நிலங்கள்.. வீட்டுமனை பிரிவு.. ஹென்றி கேட்டதுமே மக்களுக்கு சான்ஸ் தந்த தமிழக அரசு! பெயிரா நன்றி
சென்னை: மலைப்பகுதிகளின் அருகில் மனைகளை வாங்கிவைத்துள்ளோர் சம்பந்தமாக, பெயிரா விடுத்திருந்த முக்கிய கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுள்ளது.. இதையடுத்து, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொண்டுள்ளது.
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி தமிழக அரசுக்கும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறைக்கும் நன்றி பாராட்டி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் உள்ளதாவது:

கடிதம்: தமிழகத்தில் கடந்த 20/10/2016 வரை அனுமதியற்ற பட்டா மனைகளை வாங்கவும் விற்கவும் அரசு அனுமதித்தது. இதற்கு சென்னை உயர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தடையால், தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து அனுமதியற்ற மனைகளையும், வீட்டுமனை பிரிவுகளையும் வரன்முறைப்படுத்தி அனுமதி பெற்றுக் கொள்வதற்கு வழிவகை செய்து அரசாணை வெளியிட்டு தீர்வு கண்டது.
அதன்படி தமிழகம் முழுவதும் (HACA) மலைகள் பாதுகாப்பு அதிகார குழுமத்தின் எல்லைக்குட்பட்ட சுமார் 24 மாவட்டங்களில் மலைப்பகுதிகளின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள கிராமங்களில், மேற்கண்ட வகையில் பட்டா நிலங்களை அனுமதியற்ற முறையில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள வீட்டுமனை பிரிவுகளையும், அதில் பொதுமக்கள் வாங்கி வைத்துள்ள மனைகளையும் வரன்முறைப்படுத்தி அனுமதி பெற்றுக் கொள்ளும் வகையில், அரசு வாய்ப்பினை ஏற்படுத்தி கடந்த 30/03/2020, அரசாணை எண். 66/2020 ஆக வெளியிட்டு வழிவகை செய்து தீர்வு கண்டது.
கோரிக்கை: இந்த வாய்ப்பினை மேற்கண்ட மலைப்பகுதிகளின் அருகில் மனைகளை வாங்கி வைத்துள்ள பல பொதுமக்களும், வீட்டு மனை அபிவிருத்தியாளர்களும் தவறவிட்டனர். இவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பினை வழங்க வேண்டும் என அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு தொடர்ந்து தமிழக அரசுக்கு கோரிக்கையை விடுத்து வந்தது.
இந்த கோரிக்கையை ஏற்று, இவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பினை வழங்கி எதிர்வரும் 2024 நவம்பர் 30ஆம் தேதி வரை கால நீடிப்பு செய்து அரசாணை எண். 132/2024 ஆக வெளியிட்டு வழிவகை செய்து, தீர்வினை ஏற்படுத்தி தந்தமைக்கு மேற்கண்ட FAIRA சார்பில் தமிழக அரசுக்கும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கும் உளம் நிறைந்த பாராட்டுகளையும், நெஞ்சம் நிறைந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று டாக்டர் ஹென்றி அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications