உணவு பரிமாறிய பெண்களிடம் சாதியை கேட்ட பட்டிமன்றம் ராஜா? பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் குற்றச்சாட்டு
சென்னை: பிரபல பட்டமன்ற பேச்சாளரும், நடிகருமான ராஜா மீது சாதிய பாகுபாடு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமெரிக்க தமிழ் சங்கத்தின் அழைப்பில் அட்லாண்டா சென்றபோது, ராஜாவுக்கு உணவு சமைத்து பரிமாறிய பெண்களிடம் அவர்களின் சாதி என்ன என்று ராஜா விசாரித்திருப்பதாக ஒருவர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
பட்டமன்ற பேச்சாளராக கொண்டாடப்பட்டு வருவபர் ராஜா. பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் நடக்கும் பட்டிமன்றங்களில் அரசியல், நகைச்சுவை, நய்யாண்டி நிறைந்து கருத்துகளை சாதுர்யமாக பேசி தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். பட்டிமன்றங்களில் பெற்ற புகழ் மூலமாக சிவாஜி, கோ, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

அட்லாண்டாவில் பட்டிமன்றம் ராஜா
தற்போது பட்டிமன்றம் ராஜா மீது சாதிய பாகுபாடு குறித்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் கார்த்திகேயன் என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், பட்டிமன்ற பேச்சாளர் ராஜா அமெரிக்க தமிழ் சங்கத்தின் அழைப்பில் அட்லாண்டா சென்றுள்ளார். அவருக்கும் அவரது சக பேச்சாளர் பாரதி பாஸ்கர் அவர்களுக்கும் அட்லாண்டா தமிழ் சங்கத்தின் சார்பாக தமிழ் உணவு தயாரித்துக் கொடுக்கும் பொறுப்பு எனது தங்கைக்கு கிடைத்தது.
பட்டிமன்றம் ராஜா கேட்ட கேள்வி
எனது தங்கை தனது சக தோழியர்கள் உடன் மிகச் சிறப்பான வகையில் சமைத்து எடுத்துச் சென்று இருக்கிறார். சிறந்த முறையில் அவர்களுக்கு உணவும் பரிமாறி இருக்கிறார்கள். பேச்சாளர் ராஜா இம்மூவரையும் சந்தித்து விசாரித்திருக்கிறார். மூவரிடமும் அவர்கள் ஊரினை விசாரித்திருக்கிறார். ஊர் பெயர் சொன்னவுடன் நீங்கள் இந்த சாதியா என்று கேட்டு இருக்கிறார். எனது தங்கை முறை வரும்போதும் நீங்க எந்த ஊருமா என்று கேட்டு இருக்கிறார்.
என்ன ஆளுங்க?
ஐயா நான் காரைக்குடி என்று சொல்லி இருக்கிறார். ஓ நீங்க செட்டியாரா என்று கேட்டிருக்கிறார். எனது தங்கை அமைதியாக இருக்கவும் விட்டிருக்கலாம். ஆனால் தொடர்ந்து நீங்கள் வேற என்ன ஆளுங்க என்றும் கேட்டிருக்கிறார். தங்கை எதுவும் பதில் கூறாமல் அமைதியாக இருக்கவும் தான் அடுத்தவர்களிடம் கேட்டிருக்கிறார். என் தங்கை இதைக் கூறும்போது அழுகையுடன் கூறினாள். சாப்பாடு நல்லா இல்லை என்று சொல்லி இருந்தால் கூட நான் வருத்தப்பட்டு இருக்க மாட்டேன்.
சோகமான பெண்
அங்கு யாருக்குமே நான் என்ன சாதி என்று தெரியாது யாரும் என்னிடம் கேட்டதும் இல்லை. திடீரென்று அப்படி கேட்கவும் ஒரு மாதிரியா ஆயிடுச்சு. வாந்தி வருவது போல் உணர்ந்தேன். அழுகையும் ஆத்திரமும் அடக்கிக் கொண்டு நிற்பது ரொம்பவும் சிரமமாக இருந்தது என்றாள்.
தமிழ்நாட்டில் ஒருவர் சாதி பெயரை கேட்பது அசிங்கமான செயல் என்று படிக்காத பாமரனுக்கும் தெரியும். அவன் தெரிந்து கொள்ள வேண்டுமென்று விரும்பினாலும் நேரடியாக கேட்க மாட்டான்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் கேள்வி
படித்தவர், பட்டிமன்ற பேச்சாளர், எண்ணற்ற மேடைகளில் பேசியிருக்கிறீர்கள், ஒவ்வொரு தீபாவளி அன்று சாலமன் பாப்பையா பட்டிமன்றத்தில் உங்களது பேச்சை ரசித்து கேட்டவர்களில் நானும் ஒருவன். என் தங்கையும் அப்படியே அதனால் தான். உங்களுக்காக விழுந்து விழுந்து சமைத்து எடுத்து கொண்டு சென்று இருக்கிறார். இந்த சாதி மத இன சனியன்களை விட்டு தள்ளி வாழ்வோம் என்று தான் என் தங்கை போன்றவர்கள் படித்து திறமை வளர்த்துக்கொண்டு அமெரிக்கா போன்ற நாடுகளில் செட்டில் ஆகிறார்கள்.

சாதிய மனநிலை
அங்கேயும் உங்களது ஈன புத்தியை கொண்டு வந்து காட்டுவீர்களா ?! ஊர் பெயரைக் கேட்டு சாதியை கண்டு கொள்ளும் மட்டமான புத்தி போகவில்லை. காரைக்குடி என்றால் செட்டியார் மட்டும்தான் இருக்கிறார்களா ? வேறு மனிதர்கள் இல்லையா ? அந்தக் கேள்விக்கு அமைதியாக இருந்த பின்னும் விடாமல் நீங்கள் வேறு என்ன ஆள் என்று கொக்கி பட வேண்டிய அவசியம் என்ன ? அப்படி சாதி அரிப்பு கொண்டிருக்கும் நீங்கள் உங்கள் சாதி மக்களிடம் மட்டும் பட்டிமன்ற பேச்சை நடத்துங்களேன்.

அமெரிக்கா வாழ் தமிழ்ச் சங்கம்
அமெரிக்காவில் சாதிகளை மறந்து தமிழர்களாய் இணைந்து ஒரு சங்கம் வைத்து அந்த சங்கத்திற்கு பேச கூப்பிட்டால் அங்கேயும் வந்து உங்களது சாதி வன்மத்தை தான் காட்டுவீர்களா?! சமைத்துக் கொடுத்தவர் என்ன சாதி என்று தெரிந்து கொள்வதில் அப்படி என்னயா ஆர்வம் ? உங்க நல்ல நேரம் என்னை போன்றவர்களிடம் நீங்கள் சிக்காமல் போனீர்கள். சிக்கி இருந்தீர்கள் என்றால் உங்களது சாதி வன்மத்தை தோல் உரித்து மூஞ்சியில் அடித்தால் போன்று நாக்க புடுங்குற மாதிரி நாலு கேள்வி கேட்டிருப்பேன். இன்னொரு முறை பட்டிமன்றம் என்று எங்கும் சென்றுவிட வேண்டாம். அந்தத் தகுதி உமக்கு இல்லை. மீறி வந்தால் அசிங்கப்பட்டு போவீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

ராஜா விளக்கம்
இதுதொடர்பாக எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவை பட்டிமன்றம் ராஜா தொடர்பு கொண்டு பேசிய போது, கார்த்திகேயன் சொன்னதை போல் எதுவும் நடக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். ஆனால் கார்த்திகேயன் தரப்பு, Facebook பதிவில் கூறியதை போல்தான் நடந்துள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் தகவல்களை தரவும் தயார் என தெரிவித்துள்ளார். இதனால் பட்டிமன்றம் ராஜா விவகாரம் விவாதமாகி இருக்கிறது.

-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications