பிரபாகரன் தானாக வெளியேறவில்லை- தளபதிகள் கட்டாயத்தால் வெளியேறினார்- மீண்டும் பழ.நெடுமாறன் திட்டவட்டம்
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என மீண்டும் திட்டவட்டமாக சொல்கிறார் பழ.நெடுமாறன்
சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தாமாகவே இலங்கையை விட்டு வெளியேறவில்லை; இறுதி களத்தில் மூத்த தளபதிகள் வலியுறுத்தலால் இலங்கையை விட்டு வெளியேறினார் என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் திட்டவட்டமாக கூறி வருகிறார்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த பழ.நெடுமாறன், பிரபாகரன் உயிருடன் இருப்பதாக அறிவித்தார். இதனை பிரபாகரன் குடும்பத்தினர் ஒப்புதலுடன் அறிவிக்கிறேன் என கூறினார். இதற்கு முன்னரும் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நெடுமாறன் கூறியிருந்தார். ஆனால் இம்முறை பிரபாகரன் குடும்பத்தினர் ஒப்புதலுடன் அறிவிக்கிறேன் என தெரிவித்தார்.

இந்த் விவகாரம் தொடர்பாக பல்வேறு முரண்பட்ட கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. பழ.நெடுமாறன், இந்திய உளவுத்துறையின் பிடியில் இருக்கிறார்; பாஜக பிடியில் இருக்கிறார்; அவரது அறிவிப்பு தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது என தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் நாள்தோறும் பல விமர்சனங்கள் வருகின்றன. அதேநேரத்தில் தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் புலம் பெயர் தமிழர்களிடமும் பழ.நெடுமாறனின் கருத்தும் அறிவிப்பும் சரியானதே என்கிற குரல்களும் வருகின்றன.
இது தொடர்பாக பழ.நெடுமாறன் சில ஊடகங்களுக்கு பேட்டியும் அளித்துள்ளார். அதிலும் பிரபாகரன் தாமாக வெளியேறவில்லை; தளபதிகளின் கட்டாயத்தால் அவர் வெளியேறினார் என திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.
மேலும் பழ.நெடுமாறனுக்கு மிக நெருக்கமான வட்டாரங்களில் நாம் தொடர்ந்து பேசியதில் இருந்து நமக்கு கிடைத்திருக்கும் தகவல்களைத்தான் இதில் பகிர்கிறோம். பொதுவாக விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பான அதிகாரப்பூர்வமான நிலைப்பாடுகள், ரகசியங்களை மிக மிக அதிகம் அறிந்தவர் பழ.நெடுமாறன் என்பதில் மாற்று கருத்து இல்லை. அதேநேரத்தில் 2009-ம் ஆண்டு இறுதி யுத்த காலத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் நெடுமாறனுக்குமான உறவு முன்னைப் போல அதிநெருக்கமானதாகவும் இல்லை. இது விடுதலைப் புலிகள், நெடுமாறனுடன் மிக நெருக்கமாக இணைந்து செயல்பட்டவர்களுக்குதான் தெரியும். அதற்காக விடுதலைப் புலிகள் முற்று முழுதாக நெடுமாறானை ஒதுக்கிவிடவும் இல்லை. அதனால் நெடுமாறன் புலிகளின் அத்தாரிட்டிகளில் முதன்மையானவர் என்பதில் சந்தேகமும் இல்லை. ஆகையால் வெளிநாடு வாழ் விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்கள், பிரபாகரன் குடும்பத்தினர் நெடுமாறனை தொடர்பு கொண்டு பேசி இருக்கலாம். அதை மறுக்க முடியாது என்கின்றனர்.

மேலும், தற்போது சர்வதேச அரசியல் சூழ்நிலைகள் மாறிவிட்டன. தலிபான்கள் மிக மோசமான பயங்கரவாதிகள். தலிபான்களையே அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேசம் அங்கீகரித்துவிட்டது. இந்த சூழ்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமை தமது இருப்பை சர்வதேச சமூகத்துக்கு முதலில் சமிக்ஞையாக தெரிவிக்க வேண்டிய நிலை உள்ளது. இதன்வெளிப்பாடுதான் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்கிற ஒற்றை அறிவிப்பு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக, பிரபாகரன் தமது மகன்களை பலி கொடுத்தது உண்மைதான். அந்த நிமிடம் வரை பிரபாகரன் இறுதி களத்தில் சாக வேண்டும் என்பதாகவே இருந்தார் என்பதும் உண்மை. இலங்கையையும் மக்களையும் சாகவிட்டு தப்பிச் செல்லக் கூடியவர் அல்லதான் பிரபாகரன். ஆனால் இறுதி களத்தில் அதாவது நந்தி கடல் அலையாத்தி காடுகளுக்குள் சென்ற மூத்த தளபதிகளின் நெருக்கடிக்கு பின்னரே ஒரு சில தளபதிகள் மட்டுமே பிரபாகரனுடன் வெளியேறினர். இதனை இத்தனை ஆண்டுகாலம் அறிவிக்க வேண்டிய தேவையும் இல்லை. ஏனெனில் ரஷ்ய புரட்சியின் போது லெனின் தலைமறைவாக இருந்துள்ளார்; வியட்நாம் ஹோசிமின் தலைமறைவாக இருந்துள்ளார். அவர்கள் மீண்டும் வந்து யுத்தத்தை வென்றது வரலாறு. அது ஏன் பிரபாகரனுக்கு பொருந்தாது என்கின்றனர் பழ. நெடுமாறன் தரப்பினர்.
மேலும், பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்; தமிழீழ தமிழர்களின் அரசியல் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்பதில் சர்வதேச சமூகத்தை விட இந்தியாதான் அக்கறை எடுத்தாக வேண்டும். இப்போது தமிழர்களின் அரசியல் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் இந்தியா அக்கறையாக அல்லது அதிதீவிரமாக உள்ளது. ஆகையால் இந்தியாவுக்கு பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற தகவலைத் தெரிவிக்க வேண்டியது தமிழர் தலைமைத்துவத்தின் கடமை. அதனையே பழ.நெடுமாறன் செய்திருக்கிறார் என்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
அத்துடன், புலம் பெயர் நாடுகளிலும் இலங்கையிலும் தமிழர் தரப்பு பல்வேறு பிரிவுகளாக சிதறுண்டு கிடக்கிறது. அன்னிய நாடுகளின் உளவு அமைப்பாகவே சில இயக்கங்கள், தனிநபர்கள் உருவெடுத்துவிட்டனர். சர்வதேச சூழல், இந்திய நிலைப்பாடு அனைத்தும் மாறிக் கொண்டிருக்கும் தருணத்தில் பிரபாகரனின் வருகை அல்லது பிரபாகரன் வருகிறார் என்கிற அறிவிப்பு தேவையானதாகவே இருக்கிறது. அதனால்தான் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற உண்மை அறிவிக்கப்பட்டது என்கிறது பழ.நெடுமாறன் தரப்பு.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications