வாடகை வீட்டை காலி செய்த நல்லக்கண்ணு... அரசுக்கு பழநெடுமாறன் கோரிக்கை
Recommended Video
சென்னை: நல்லக்கண்ணுவுக்கு அரசு வேறு இடத்தில் வீடு வழங்க வேண்டும் தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு. இவர் எளிமையின் அடையாளமாய் வாழ்ந்து வருகிறார்.
இதுவரை சென்னை தியாகராய நகரில் வீட்டு வசதி வாரிய வாடகை குடியிருப்பில் அரசு ஒதுக்கியிருந்த வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நிலையில் அந்த கட்டடத்தில் புதிய திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

வெளியேறிய நல்லக்கண்ணு
இதையடுத்து வீட்டை காலி செய்ய நல்லகண்ணு உட்பட குடியிருப்பில் வசிக்கும் அனைவருக்கும் வீட்டை காலி செய்ய அரசு தரப்பில் நோட்டீஸ் விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சுமார் 12 ஆண்டுகளாக இந்த வீட்டில் குடியிருந்து வரும் நல்லக்கண்ணு அரசிடம் மாற்றிடம் கேட்காமல் இன்று அந்த வீட்டில் இருந்து வெளியேறினார்.

கண்டனம்
வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் இருந்து வெளியேறிய நல்லக்கண்ணு கே கே நகரில் குடிபெயர்ந்துள்ளார். நல்லகண்ணுவுக்கு நோட்டீஸ் அளித்த விவகாரத்துக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

அரசுக்கு கண்டனம்
இதுதொடர்பாக பேசிய தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் 94 வயதான நல்லக்கண்ணுவின் தொண்டும் தியாகமும் ஆகியவற்றை எண்ணி பார்க்காமல் வெளியேற்றிருப்பது கண்டனத்துக்குரியது என்றார்.

வீடு ஒதுக்கவேண்டும்
மேலும் இந்த பிரச்சனையில் முதல்வர் தலையிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு வேறு இடத்தில் தமிழக அரசு வீடு வழங்க வேண்டும் என்றும் தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications