அமெரிக்காவிற்கு நேர்ந்த அதே "ஜப்பான் சம்பவம்".. உக்ரைன் வேலையால் ரஷ்யா கையில் எடுக்கும் அணு குண்டு?
மாஸ்கோ: அமெரிக்காவில் நடந்த ஜப்பானின் பேர்ல் ஹார்பர் தாக்குதலுக்கு இணையான தாக்குதலை ரஷ்யா மீது உக்ரைன் மேற்கொண்டு உள்ளது.
பேர்ல் ஹார்பர் மீதான தாக்குதல் உலக போர் அரங்கில் மறக்க முடியாத சம்பவம். உலகில் நாடுகள் போர் செய்யும் முறையை மாற்ற காரணமாக அமைந்த சம்பவம். அதாவது அணு ஆயுத போர் நடப்பதற்கான அடித்தளத்தை விதைத்த சம்பவம்.
இது டிசம்பர் 7, 1941 அன்று ஹவாயின் ஓஹுவில் உள்ள பேர்ல் ஹார்பரில் உள்ள அமெரிக்க பசிபிக் கடற்படைத் தளத்தின் மீது ஜப்பான் பேரரசு நடத்திய ஒரு எதிர்பாராத இராணுவத் தாக்குதலாகும். அந்த நேரத்தில், அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் நடுநிலை நாடாக இருந்தது
டிசம்பர் 7, 1941 அன்று ஹவாயின் பேர்ல் ஹார்பரில் உள்ள அமெரிக்க பசிபிக் கடற்படையின் மீது ஜப்பான் திடீர் தாக்குதலைத் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 3,500 க்கும் மேற்பட்ட அமெரிக்க துருப்புக்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அமெரிக்க கடற்படை கடுமையாக சேதமடைந்தது; மேலும் நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்தத் தாக்குதலால் அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் நுழைந்தது, மறுநாள் ஜப்பான் மீது போரை அறிவித்தது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பானுக்கு எதிரணியில் கைகோர்த்து போரில் களமிறங்கியது.

இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவும் ஜப்பானும் பசிபிக் பெருங்கடலில் கொடூரமான போரை நடத்தின, இரு தரப்பிலும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. ஜப்பான் சரணடைய மறுத்ததால், அமெரிக்கா ஜப்பானின் மீது நிலப் படையெடுப்புக்குத் தயாரானது, இது மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 4 வருடங்கள் இந்த போர் தீவிரமாக நடந்தது. இதையடுத்து ஹிரோஷிமா & நாகசாகி மீது அமெரிக்கா அணுகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. ஜப்பானின் தாக்குதலுக்கு பதிலடியாக ஹிரோஷிமா & நாகசாகி மீது அமெரிக்கா அணுகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இது போரை முடிவிற்கு கொண்டு வந்தது. அதோடு உலக அளவில் போர் செய்யும் முறையையும் மொத்தமாக இந்த தாக்குதல் மாற்றியது.
இணையான தாக்குதல்
அமெரிக்காவில் நடந்த ஜப்பானின் பேர்ல் ஹார்பர் தாக்குதலுக்கு இணையான தாக்குதலை ரஷ்யா மீது உக்ரைன் மேற்கொண்டு உள்ளது. ரஷ்யாவில் உக்ரைன் நடத்திய திட்டமிட்ட டிரோன் தாக்குதல் காரணமாக 41 ரஷ்ய போர் விமானங்கள் அழிக்கப்பட்டு உள்ளது. ரஷ்யா - உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்புகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
ரஷ்யா உக்ரைன் போர் உச்சம் அடைந்து உள்ளது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான போர் ஒப்பந்தங்கள், அமைதி பேச்சுவார்த்தைகள் எதுவும் பயனளிக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் உக்ரைன் நாட்டின் டிரோன்கள் ரஷ்யா மீது நேற்று இரவு கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டது. இதில் ரஷ்யாவின் 41 போர் விமானங்கள் அழிக்கப்பட்டது. முக்கியமாக ரஷ்யாவின் குண்டு போடும் போர் விமானங்களான Tu-95 மற்றும் Tu-22 அழிக்கப்பட்டது. உக்ரைன் மீது குண்டுகளை வீச ரஷ்யா இந்த போர் விமானங்களை பயன்படுத்தி வந்தது.
மர்மன்ஸ்க், இர்குட்ஸ்க், இவானோவோ, ரியாசான் மற்றும் அமுர் பகுதிகளில் உள்ள ரஷ்ய இராணுவ விமானநிலையங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது. மர்மன்ஸ்க் மற்றும் இர்குட்ஸ்கில் நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தவிர, நாட்டின் அனைத்து இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை முறியடித்துவிட்டதாக ரஷ்யா கூறி உள்ளது.
சிறிய ரக சூசைட் டிரோன்களை கருப்பு உள்ளிட்ட நிறங்களில் பெயிண்ட் செய்து, மிக தாழ்வாக ரேடாரில் படாமல் பறக்கவிட்டு, போர் விமானங்கள் ஹேங்கரில் இருக்கும் போது அருகில் சென்று அதை தாக்கி அழித்து உள்ளது உக்ரைன். சிறிய ரக டிரோன்கள் என்பதால் இதனால் மொத்தமாக போர் விமானங்களை அழிக்க முடியாது.
ஆனால் இவை சூசைட் டிரோன்கள். நேராக போர் விமானங்கள் மீது விழுந்து வெடித்து விமானங்களை தீ பிடிக்க வைக்கும். அப்படித்தான் இந்த தாக்குதல்களை உக்ரைன் நடத்தி உள்ளது. இதனால் இரண்டு நாட்டு போர் அடுத்த கட்டத்திற்கு சென்று உள்ளது. போர் கடுமையான நிலையை அடைந்து உள்ளது. இதற்கு பதிலடி தர ரஷ்யா மிக கடுமையான முடிவுகளை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. அதாவது உக்ரைனுக்கு பதிலடி கொடுக்க ரஷ்யா அடுத்த எந்த கட்டத்திற்கும் செல்லும் என்றும் கூறப்படுகிறது. அதாவது ரஷ்யா அணு ஆயுதத்தை கையில் எடுக்கலாம்.. அமெரிக்கா ஜப்பானுக்கு எதிராக அணு ஆயுதத்தை கையில் எடுத்தது போல ரஷ்யாவும் உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதத்தை எடுக்கும் அபாயம் உருவாகி உள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications