"ஏ.. இந்தா".. மூக்குக்குள் திணித்து.. "மதுர மல்லி.. மதுர மல்லி".. வடிவேலு சொல்வாரே.. அதுமாதிரியே..!
வடிவேலு படத்தை போலவே, சுற்றுலா பயணிகளிடம் நூதன விற்பனை நடந்து வருகிறது
சென்னை: இணையத்தில் இன்றைய தினம் வீடியோ ஒன்று வெளியாகி, பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.. அத்துடன் ஏராளமானோர் அந்த வீடியோவை ஷேர் செய்தும் வருகிறார்கள்.
நீண்ட தூரம் செல்லும், பஸ் பயணிகள் அல்லது சுற்றுலா பயணிகளை நம்பி எத்தனையோ சிறுவியாபாரிகள் வாழ்க்கை ஓட்டிவருகிறார்கள். எத்தனையோ குடிசை தொழில்கள் இதனால் பிழைத்து வருகின்றன.
சாலையோரங்களில் பஸ் அல்லது வாகனங்கள், சாப்பிடுவதற்காக 5 நிமிடம் அல்லது 10 நிமிடம் பஸ்கள், நிறுத்தப்படுவது வழக்கம். இந்த 5 நிமிட நேரம்தான், எத்தனையோ வியாபாரிகளுக்கு அன்றைய பொழுதை நகர்த்த அடித்தளமாக இருந்து வருகிறது.

பிளாஸ்டிக் பைகள்
பிளாஸ்டிக் பையில் கட்டப்பட்ட நுங்கு, பலாப்பழம், வேர்க்கடலை, மக்காச்சோளம் உட்பட எத்தனையோ தின்பண்டங்கள் பஸ்களுக்குள் ஏறி சென்று பயணிகளிடம் விற்பனை செய்வார்கள்.. ஒருசிலர் அந்த வாகனங்களுக்குள் ஏறாமல், ஜன்னல் வழியாகவே இத்தகைய தின்பண்டங்களை விற்று செல்வார்கள்.. தரமில்லாத மற்றும் ஈக்கள் மொய்த்து கிடக்கும் பொருட்களை, பெரும்பாலும் யாரும் வாங்கி சாப்பிடுவதில்லை. சிலசமயம் தின்பண்டங்கள் இல்லாமல் மல்லிகைப்பூ, பிளாஸ்டிக் வகைகள் என பொருட்கள் விற்பனையும் நடக்கும்.
|
டுபாக்கூர் பூப்பந்து
இன்றைய தினம் சோஷியல் மீடியாவில் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது.. ஒரு படத்தில், தம்பி ராமையா, வடிவேலுவிடம் ஒரு டுபாக்கூர் பூப்பந்தை தலையில் கட்டுவதற்காக, மதுரை மல்லி மதுரை மல்லி மதுரை மல்லி என்று கூவுவாரே, அதுபோலவே இந்த சம்பவமும் நடந்துள்ளது.. வடிவேலுவின் மூக்கில் கொண்டு வந்து அந்த பூவை திணித்து, விற்பனை செய்வார்.. "முகர்ந்து பார்த்தால்தானடா காசு கேப்பே" என்று சொல்லி மூக்கையும் மூடிக் கொள்வார் வடிவேலு.. அப்படி இருந்தும், பஸ்ஸுக்குள் ஏறி, டிரைவரை "கரெக்ட்" செய்துவிட்டு, அதற்கு பிறகு, அதே மல்லிகைப்பூவை 50 ரூபாய்க்கு விற்றுவிட்டு செல்வார் தம்பி ராமையா.

மதுர மல்லி.. மதுர மல்லி
கடைசியில் பேப்பர் பண்டல் உள்ளிருப்பதை பார்த்துவிட்டு, "மதுரை மல்லி, மதுரை மல்லின்னு, மதுரைக்காரனையே வாடா, ஏமாத்திட்டு போறேன். ஏலேய்".. என்று கதறுவார் வடிவேலு.. காமெடிக்காக இப்படிப்பட்ட காட்சிகள் திணிக்கப்பட்டதாக அப்போது நினைத்தோம்.. ஆனால் அது கற்பனையுமில்லை.. காமெடியுமில்லை.. நிஜமாகவே அப்படி ஒரு சம்பவம்தான் நடந்துள்ளது.. அது இணையத்திலும் வீடியோவாக வெளிவந்துள்ளது.. இவர்கள் எந்த நாட்டுக்காரர்கள் என்று தெரியவில்லை..

ஜன்னல் - விற்பனை
நண்பர்கள் நான்கைந்து பேர் சேர்ந்து வெளியூருக்கு வேனில் சென்று கொண்டிருக்கிறார்கள்.. அப்போது வழியில் சிக்னலுக்காக வேன் நின்றுள்ளது.. அப்போது திடீரென அந்த வேனை அங்கிருக்கும் சிறுவியாபாரிகள் சுற்றிக் கொண்டார்கள்.. வேன் ஜன்னலுக்குள், அங்கு மலிவாக கிடைக்கும் பூக்களை (எவர்லாஸ்டிங்) கொண்டு வந்து, இந்த நண்பர்களிடம் விற்பதற்காக சூழ்ந்து கொண்டனர்.. திடீரென அவர்கள் திரண்டு வந்ததால், ஜன்னலையும் உடனே மூட முடியவில்லை..

வடிவேலு காமெடி
அதனால், அந்த பூக்களை கொண்டு வந்து, இவர்களின் மூக்கிலேயே திணிக்கும் அளவுக்கு போய்விட்டனர்.. அதில் ஒருசிலர் கூல்டிரிங்ஸ் பாட்டிலை எடுத்து அவர்கள் வாயருகே கொண்டு செல்கிறார்கள்.. மூக்கின் அருகிலும், வாய் அருகிலும் திணிக்ப்பதை பார்த்து, அந்த நண்பர்கள் பேயறைந்தது போல் ஆகிவிட்டார்கள்.. வேண்டாம் என்று மறுத்தும், வியாபாரிகள் அவர்களை தொல்லை செய்து கொண்டே நிற்கின்றனர்.. இதை யாரோ வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவிலும் போட்டுவிடவும், "ஊரெல்லாம் இதே வேலையாத்தான்" என்று கிண்டலடித்து வருகிறார்கள் இணையவாசிகள்..!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications