சென்னை ஈக்காட்டுதாங்கலில் கொத்தாக மாட்டிய வாகன ஓட்டிகள்.. காட்டிக் கொடுத்த ஒற்றை போட்டோ!
சென்னை : சென்னை ஈக்காட்டுதாங்கலில் சிக்னலில் லைனை தாண்டி நின்ற கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு அடுத்தடுத்து விதிமீறல் குற்றத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் கிராஸ் லைனை தாண்டினால் கண்டிப்பாக அபராதம் விதிப்பார்கள். எனவே மாட்டிக் கொள்ளாதீர்கள்.
சென்னையில் போக்குவரத்து விதிமீறலை தடுக்க அபராதம் கடுமையாக விதிக்கப்படுகிறது. வார இறுதி நாட்களான இப்போது இரவு நேரங்களில் மது அருந்துவோரை குறிவைத்து பிடிப்பார்கள். அப்படி சிக்கினால் அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.இதுபொதுவான நடைமுறை தான்.

விபத்துக்களை தடுக்க மதுபோதையில் செல்வாரை பிடித்து அபராதம் விதிக்கிறார்கள். வாரஇறுதிகளில் தான் அதிகம் பேர் மது அருந்திவிட்டு செல்வார்கள் என்பதால் இப்படி பிடித்து அபராதம் விதிக்கிறார்கள். அதேநேரம் சிக்னலை மீறி செல்பவர்களுக்கும் போலீசார் தற்போது அதிகமாக அபராதம் விதிக்கிறார்கள். போலீசார் நடத்திய வாகன சோதனையில் அபராதம் விதிக்கிறார்கள்.
வாரஇறுதிகளில் மதுபோதையில் செல்வோர் பிடிக்கப்படுகிறார்கள் என்றால் வார நாட்களில், ஹெல்மட் அணியாமல் செல்வோர் . டிரபிள்ஸ் செல்வோர் பிடிக்கப்படுவார்கள். காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கண்டிப்பாக சென்னையில் எல்லா பகுதியிலும் போக்குவரத்து போலீசார் தீவிரமாக சோதனை செய்வார்கள். அந்த சோதனை எப்படி இருக்கும் என்றால் ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் உட்பட்ட பகுதிகளில் ஒரு முக்கியமான இடத்தில் சோதனை நடத்துவார்கள்.
இருசக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமல்ல, இரண்டு பேரும் ஹெல்மட் அணிந்திருக்க வேண்டும். அப்படி ஹெல்மட் அணியாமல் சென்றால் அவர்களுக்கு 500 முதல் 1000 வரை கண்டிப்பாக அபராதம் விதிப்பார்கள். மேலும் வாகனங்களில் இன்சூரன்ஸ் இல்லை என்றாலும் அபராதம் உறுதி. எனவே நீங்களோ, உங்களுடன் செல்வோரா கண்டிப்பாக தலைகவசம் அணிந்திருக்க வேண்டும். ஒருவர் மட்டும் தலைகவசம் அணிந்திருந்தாலும் அபராதம் உறுதி.
ஹெல்மட் மட்டுமல்ல சிக்னலை தாண்டி நின்றாலும் அபராதம் உறுதியாக விதிக்கப்படும். அது எப்படி என்றால், தானியாங்கி கேமரா எடுத்த புகைப்படங்களின் அடிப்படையில் அபராதம் விதிக்கப்படுகிறது. முதல் முறை சிக்னலை மீறினால் மட்டும் தான் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறையாகவோ அல்லது அடிக்கடி மீறினாலோ 1500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
இந்நிலையில் சென்னை ஈக்காட்டு தாங்கல் ஜெயா டிவி ஆபிஸ் அரகே சிக்னலை தாண்டி நின்ற கார்கள், இருசக்கர வாகனங்கள் குறித்து நெட்டிசன் ஒருவர் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் மூன்று வாகனங்களுக்கு தலா 500 அபராதம் விதித்து போலீசார் சலான் அனுப்பி உள்ளனர். அவர்களுக்கு மொபைலுக்கு ஸ்டாப் லைன் விதிமீறலுக்கான அபராதம் குறித்த எஸ்எம்எஸ் போய் சேர்ந்திருக்கும்.
தினமும் சென்னை போலீஸார் 50க்கும் மேற்பட்ட பொதுமக்களின் புகார்களை சிசிடிவி அடிப்படையில் பார்த்து , அதனை உறுதி செய்து அபராதம் விதிக்கிறார்கள். எனவே சென்னைக்கு முதல்முறையாக வருவோர் ,அல்லது தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர், உங்கள் பகுதியில் உள்ளது போல் சுற்றினால் அபராதம் நிச்சயம். எனவே சென்னையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு விட வேண்டாம். அபராதம் என்பதற்காக என்பதை தாண்டி, விபத்து நடக்கக்கூடாது எனவே அதற்காக விதிமீறலில் ஈடுபடாதீர்கள். அதுதான் அபராதம் விதிப்பதன் நோக்கம்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications