Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

40 கிமீ வேகம்.. சென்னையில் இந்த 10 இடங்களில் கண்டிப்பாக அபராதம்.. சங்கர் ஜிவால் சொன்ன லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இன்று முதல் 10 இடங்களில் 40 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் போனால் தானாகவே அபராதம் விதிக்கும் கேமராக்களை காவல்துறை அமைத்துள்ளது. அந்த இடங்கள் எது எது என்பதை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்தார். அதனை இப்போது பார்ப்போம்.

சென்னை போலீசார் போக்குவரத்து விதிமீறல்களை தடுக்கவும், மக்களுக்கு போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், விபத்துக்களை குறைக்கவும் பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார்கள்

Penalty for going over 40 kmph in these 10 places in Chennai: Shankar Jiwal described list

குறிப்பாக போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க ஒவ்வொரு காவல் சரகத்திலும் தினமும் போக்குவரத்து போலீசார் சோதனை நடத்துகிறார்கள். டிராபிக் சிக்னலை தாண்டி செல்வோர், ஹெல்மெட் அணியாமல் செல்வோர், அதிவேகமாக செல்வோர், ஒரு வழிப்பாதையில் செல்வோர், இன்சூரன்ஸ் இல்லாமல் செல்வோர், மதுபோதையில் செல்வோர், சீட் பெல்ட் அணியாமல் செல்வோர், அதிக பாரம் ஏற்றி செல்வோர், தவறான பதிவு எண் கொண்ட வாகனங்கள், ஒரே வாகனத்தில் மூன்று பேர் செல்வது, மதுபோதையில் செல்வோர் ஆகியோரை கண்டுபிடித்து அபராதம் விதிக்கிறார்கள்

இது தவிர போக்குவரத்து போலீசார் நவீன தனியாங்கி சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் டிராபிக் சிக்னலை தாண்டி செல்வோர், ஹெல்மெட் அணியாமல் செல்வோர், அதிவேகமாக செல்வோர், ஒரு வழிப்பாதையில் செல்வோரை கண்டுபிடித்து அபராதம் விதிக்கிறார்கள்.

இதுதவிர ட்விட்டர் மூலம் போக்குவரத்து விதிமீறல்களை புகைப்படம் அல்லது வீடியோ மூலம் மக்கள் புகாராக சென்னை போக்குவரத்து போலீசாரை டேக் செய்து சொன்னாலும் நடவடிக்கை எடுக்கிறார்கள்.

இந்நிலையில் சென்னையில் சென்னையில் இன்று முதல் 10 இடங்களில் 40 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் போனால் தானாகவே விதிக்கும் கேமராக்களை காவல்துறை அமைத்துள்ளது. அந்த இடங்கள் எது எது என்பதை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் கூறினார்.

செய்தியாளர் சந்திப்பில் சங்கர் ஜிவால் கூறுகையில், "சென்னையில் டிராபிக் பிரச்சனை ஏற்படும் பகுதிகளில்தான் விதிமீறல்களை கண்காணித்து வருகிறோம். ஆனாலும் அந்த பகுதியை தாண்டி மற்ற பகுதிகளில் பலர் விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர். அதுபோன்ற குற்றங்களைக் கண்காணித்தும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

அதேபோல், ஓவர் ஸ்பீடில் வாகனங்களை ஓட்டுபவர்களைக் கட்டுப்படுத்துவது எங்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. சில பேர் ரேஸ் வைத்து ஓட்டுகிறார்கள். நைட் டைம்ல ஓவர் ஸ்பீட்ல வாகனங்களை ஓட்டுவதால் தான் விபத்துகள் நடக்கின்றன. அனைத்து இடங்களிலும் காவல் துறையினரை பணியமர்த்தி, அதி வேகமாக இயக்கப்படும் வாகனங்களைக் கண்காணிக்கிறது ரொம்ப கஷ்டம்.

எனவே 30 இடங்களில் ஸ்பீட் அடார்கன் வச்சிட்டு கண்காணிக்க போகிறோம். இந்த இடங்களில் பகல் நேரங்களில் மணிக்கு அதிகபட்சமாக 40 கி.மீட்டர் வேகத்திலும், இரவு நேரங்களில் 50 கி.மீட்டர் வேகத்திலும் வாகனங்கள் இயக்க அனுமதிப்போம். வேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிய சென்னை மாநகரில் முதல்முறையாக 10 இடங்களில் கண்காணிப்புக் கருவி (ஸ்பீட் அடார்கன்) இன்று பொருத்தப்பட்டுள்ளது.

எந்தெந்த இடம் என்றால் விமான நிலையம் வெளியே, டாக்டர் குருசாமி பாலம், ஹபிபுல்லா அவின்யூ, மதுரவாயல் ரேஷன் கடை ஜங்சன், பாரிஸ் கார்னர் ஜங்சன், ஈஞ்சம்பாக்கம், ஸ்பென்சர் பிளாசா உள்பட 10 இடங்களில் போட்டிருக்கிறோம்.

இது தவிர மேலும் 20 இடங்களில் கண்காணிப்புக் கருவி பொருத்த நடவடிக்கை எடுக்க போகிறோம். பொருத்தப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை மீறி இயக்கப்படும் வாகனங்களுக்கு, தானியங்கி கருவி மூலம் விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளுக்கு சலான் செல்லும் வகையில் நாங்கள் அதனை வடிவமைத்துள்ளோம். போக்குவரத்து துறையில் வேக கட்டுப்பாடு ஆணை உள்ளது. அதை அடிப்படையாக கொண்டுதான். வாகனங்களை இயக்குவதற்கான வேகம் நிர்ணயித்துள்ளோம்" இவ்வாறு சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+