பென்ஷனில் மாற்றம்.. ஓய்வூதியம், ரயில் ரிசர்வேஷன் டிக்கெட், ஆதார் கட்டணம்.. அனைத்துமே மாறிடுச்சு
சென்னை: நாடு முழுவதும் இன்று அக்டோபர் 1ம் தேதி முதல் பல முக்கிய விதிமுறைகளில் மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. குறிப்பாக, ரயில் டிக்கெட் ரிசர்வேஷன், என்பிஎஸ் சொல்லக்கூடிய தேசிய ஓய்வூதிய முறை (NPS), டிஜிட்டல் கட்டணங்கள் உள்ளிட்டவைகளில் மாற்றங்கள் நடந்துள்ளன.. இவைகளை பற்றி இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
பொதுவாக, கேஸ் சிலிண்டர் விலைகள் ஒவ்வொரு மாதமும் எண்ணெய் நிறுவனங்களால் மாற்றியமைக்கப்படும்.. ஆனால், சிலிண்டர்களின் விலை நீண்ட காலமாகவே மாறாமல் அப்படியே நிலையானதாக உள்ளது...

தீபாவளி பண்டிகையும் வரப்போவதால், மத்திய அரசு சிலிண்டர் விலையை குறைத்து இல்லத்தரசிகளுக்கு மத்திய அரசு சர்ப்ரைஸ் தரும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்தன. ஆனால், வீட்டு சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை என்றும், வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.1,754க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஆதார் அட்டை சேவை கட்டணம்
அக்டோபர் 1ம் தேதி முதல் ஆதார் அட்டை சேவைகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.. அதன்படி, ஆதாரில் பெயர், முகவரி மாற்றம் செய்ய கட்டணம் ரூ50ல் இருந்து ரூ.75ஆக உயர்த்தப்படுகிறது. பயோமெட்ரிக் (Biometric) மாற்றம் செய்ய, கட்டணம் ரூ.100லிருந்து, ரூ.125-ஆக உயர்த்தப்படுகிறது என்றும், புதிய ஆதார் பெற விண்ணப்பிப்போருக்கு இந்த கட்டணம் பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல இன்று முதல் ஆன்லைன் கேமிங் தளங்களுக்கு கடுமையான விதிமுறைகள் வரவுள்ளன. ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறை மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்திருந்தது.. இந்த மசோதாவுக்கு கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி, குடியரசு தலைவர் ஒப்புதலும் அளித்திருந்தார்.. அதன்படி, ஆன்லைன் விளையாட்டு விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ரயில் டிக்கெட் ரிசர்வேஷன்
அதேபோல, ரயில் டிக்கெட் முன்பதிவு செயல்பாட்டில் மாற்றங்கள் நடந்துள்ளன.. அதாவது ரிசர்வேஷன் திறந்த முதல் 15 நிமிஷங்களுக்கு, ஆதாருடன் இணைக்கப்பட்ட IRCTC கணக்குகளைக் கொண்ட பயணிகள் மட்டுமே IRCTC வெப்சைட் அல்லது ஆப்பில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்.
ஆனால், ரெயில் நிலையங்களில் உள்ள கவுண்டர்களுக்கு இந்த நடைமுறை பொருந்தாது. இந்த புதிய நடைமுறை காரணமாக, விரைவான முன்பதிவு அணுகல் அல்லது முன்னுரிமை டிக்கெட் ஒதுக்கீட்டைப் பெறலாம்... மேலும் இடைத்தரகர்களின் அத்துமீறலையும் தடுக்க முடியும்.
NPS முதலீட்டு விருப்பங்கள்
New Pension Scheme தேசிய ஓய்வூதிய முறையில் (NPS) சில மாற்றங்கள் இன்று முதல் வந்துள்ளது.. குறிப்பாக, தேசிய ஓய்வூதிய முறை (NPS) ஓய்வூதிய சேமிப்பாளர்களுக்கு ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வரப்போகிறது.
அதன்படி, அரசு சாரா துறையின் சந்தாதாரர்கள் Multiple Scheme Framework - MSF கீழ் தங்கள் முதலீட்டில் 100% வரை பங்குச் சந்தை (Equity) விருப்பங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இப்போதுள்ள MSF (Multiple Scheme Framework) என்ற புதிய விதியால் PRAN என்று சொல்லக்கூடிய நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண்ணின் கீழ் பல திட்டங்களை வைத்திருக்கலாம்.
இதன் மூலம், அரசு சாரா NPS சந்தாதாரர்கள் இனிமேல் ஒரே பான் எண் (PAN) கீழ் பல திட்டங்களில் முதலீடு செய்ய முடியும். எனினும், ஒருங்கிணைந்த பென்சன் திட்டத்துக்கு மாற விரும்பாதவர்கள் தேசிய பென்ஷன் திட்டத்தையே தொடரலாம்.
UPI விதிகளில் மாற்றம்
டிஜிட்டல் பணப்பரிமாற்ற அமைப்பான UPI சேவையிலும் இன்று முதல் மாற்றம் ஏற்பட்டுள்ளது.. அதன்படி, தேசிய பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ), தனிநபர்களுக்கிடையேயான பண கோரிக்கை (money request) சேவையை நீக்குகிறது. இதுநாள்வரை PhonePe, Google Pay போன்ற யுபிஐ (UPI) பயன்பாடுகள் விரைவாக பணத்தை அனுப்ப பயன்படுத்தப்பட்டு வந்தது..
DA விரைவில் கிடைக்குமா
அதேபோல மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 2025க்கான டிஏ உயர்வு (DA Hike) பற்றிய அறிவிப்பு இந்த மாதம் முதல் வாரத்திலேயே வரக்கூடும் என்கிறார்கள்.. அந்தவகையில், அகவிலைப்படி 3% அதிகரிக்கும் என்றும், 3 சதவீதம் என்றால் மொத்த அகவைப்படி 58% ஆக அதிகரிக்கும் என்றும் கணிக்கப்படுகிறது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications