பென்ஷன்.. ஓய்வூதியம் குறித்து ஆராய தமிழக அரசு குழு! போராட்டத்தை தொடர ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு முடிவு
சென்னை: ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அவ்வமைப்பின் கோரிக்கைகள் குறித்து ஆராய மூவர் குழுவைத் தமிழக அரசு அமைத்துள்ளது.. எனினும், ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு தங்கள் போராட்டத்தில் உறுதியாக இருப்பதாகவும், அதில் எந்த மாற்றமுமில்லை என்றும் திட்டவட்டமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ள நிலையில், அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்ட வாக்குறுதியைத் திமுக அரசு இன்னும் நிறைவேற்றவில்லை.. எனவே, இதனை வலியுறுத்தியும் வேறு பல கோரிக்கைகளை முன்வைத்தும் பிப்ரவரி 14ஆம் தேதி வட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமும் பிப்ரவரி 25ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் மறியல் போராட்டமும் நடைபெறும் என ஜாக்டோ-ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.
3 பேர் குழு: இதனிடையே, ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அவ்வமைப்பின் கோரிக்கைகள் குறித்து ஆராய மூவர் குழுவைத் தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த குழுவில் ஐஏஎஸ் அதிகாரிகள் ககன்தீப் சிங் பேடி, பிரத்திக் தாயன், சென்னை பொருளியல் கழகத்தின் முன்னாள் இயக்குநர் டாக்டர் கே.ஆர். சண்முகம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திடவே, இந்த குழுவை அமைத்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.. அத்துடன், அக்குழு தனது விரிவான அறிக்கையையும் பரிந்துரைகளையும் ஒன்பது மாதங்களுக்குள் தாக்கல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜாக்டோ ஜியோ: பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, வரும் 14ம் தேதி, அனைத்து தாசில்தார் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அரசு ஊழியர், ஆசிரியர் சங்க கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ அறிவித்திருக்கும் நிலையில், திட்டமிட்டபடி போராட்டம் நடத்த, ஜாக்டோ - ஜியோ அமைப்பு, தமிழக தலைமை செயலக ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் தயாராகி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
அதுமட்டுமல்ல, மாநிலம் முழுவதும் வரும் 25ம் தேதி, மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டத்திற்கும் திட்டமிடப்பட்டு உள்ளது. ஆய்வு குழு அமைத்ததால், போராட்டம் ரத்து செய்யப்படும் என அரசு எதிர்பார்த்த நிலையில், திட்டமிட்டபடி போராட்டம் நடத்த பல்வேறு சங்கங்கள் தயாராகி வருகின்றனவாம்..
ஓய்வூதிய திட்டம்: இதுகுறித்து தமிழக பட்டதாரி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலர் செல்லையா ஒரு சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், இப்படி ஓய்வூதிய திட்டம் குறித்து ஆராய குழு அமைப்பது, ஏற்கனவே பலமுறை நடந்ததுதான்..
கடந்த 2015ல் ஆசிரியர்கள் போராட்டம் தீவிரமடைந்தபோது, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவும், ஐஏஎஸ் அதிகாரி சாந்தஷீலா நாயர் தலைமையில் குழு அமைத்து, அறிக்கை பெற்றார். பிறகு 2017ல் ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீதர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கைக்கும், அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பழைய ஓய்வூதிய திட்டம்: அப்போதுதான், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், "ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம்" என்றார். அதையே தேர்தல் வாக்குறுதியாகவும் தந்து இதுவரை நிறைவேற்றவில்லை. எனவே, ஓய்வூதிய திட்டம் குறித்து ஆராய குழு அமைப்பது எனபது, அந்த திட்டத்தை தள்ளிப்போடும் முயற்சிதான்.. எனவே, அதனால், இந்த அறிவிப்பை ரத்து செய்வதுடன், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications