ஒரே நாளில் இப்படி ஒரு மாற்றம்.. தாம்பரம் மாநகராட்சி அசத்தல்.. திகைத்து போன மக்கள்
சென்னை: தாம்பரம் ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிய மழை நீரை இரவோடு இரவாக அப்புறப்படுத்தி மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளார்கள் தாம்பரம் மாநகராட்சி ஊழியர்கள். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி உள்ளது
வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், சென்னையில் மட்டுமின்றி, நேற்று சென்னையின் புறநகர் பகுதியான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், அனகாபுத்தூர், செம்பாக்கம், சேலையூர், பெருங்களத்தூர், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. நேற்று முழுவதும் கனமழை பெய்தது.

இதன் காரணமாக தாம்பரம் பகுதியில் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் தேங்கி குளம் போல் காணப்பட்டது. மழை நீர் தேங்கி நின்றதால் வாகனங்கள் ஊர்ந்தபடியே நேற்று முழுவதும் சென்றன.
தாம்பரம் அடுத்த சேலையூர் கேம்ப் ரோடு பகுதியில் வேளச்சேரி சாலையில் சுமார் 2 அடி உயரத்துக்கு மழை நீர் தேங்கி உள்ளது. தாம்பரம் மாநகராட்சியின் தாழ்வான பகுதிகளில் தேங்கி நின்ற மழைநீரை மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார் மூலமாக அகற்றினார்கள்.
இதேபோல் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதை முழுவதும் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சுரங்கப்பாதையை கடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.
தாம்பரம் மாநகராட்சி ஊழியர்கள் மின் மோட்டார் மூலம் ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நின்ற மழைநீரை வெளியேற்றினார்கள். அதன்பிறகு சுரங்கப்பாதையில் போக்குவரத்து சீரானது. இதனிடையே குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் தேங்கிய மழை நீரால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்,
சென்னையை ஒட்டிய காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. புழல், ஆவடி, திருமுல்லைவாயல், பட்டாபிராம், திருநின்றவூர், கோவில்பதாகை, நெமிலிச்சேரி, முத்தாபுதுப்பேட்டை, மிட்டனமல்லி, பாக்கம், பருத்திப்பட்டு, அயப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. ஆவடி காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்குள் மழைநீர் புகுந்ததால் போலீசார் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர். இதேபோல் மீனம்பாக்கம் பகுதியில் கனமழை காரணாமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications