சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மீண்டும் முழு ஊரடங்கு?.. வீட்டில் பொழுதை கழிக்க மக்கள் முன்கூட்டியே செய்யும் காரியத்தை பாருங்க!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றவுடன் மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்ற தகவலால் மக்கள் தங்கள் பொழுதை போக்கிக் கொள்ள தாயக்கட்டை, பல்லாங்குழி, செஸ்போர்டு, பரமபதம் உள்ளிட்ட விளையாட்டுகளை வாங்கி வருகிறார்கள்.

கடந்த ஆண்டு கொரோனா பரவலின்போது இந்தியாவே முழு ஊரடங்கால் வெறிச்சோடிக் கிடந்தது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் என மூடப்பட்டிருந்தன.

கர்நாடகாவில் ஆக்ஸிஜனுக்கு கடும் தட்டுப்பாடு.. கலபுராகி, பெலெகாவியில் 7 பேர் மரணம் கர்நாடகாவில் ஆக்ஸிஜனுக்கு கடும் தட்டுப்பாடு.. கலபுராகி, பெலெகாவியில் 7 பேர் மரணம்

இதனால் வெளியே எங்கும் செல்ல முடியாத நிலையில் மக்கள் தாயம், சீட்டுக்கட்டு, கேரம்போர்டு, செஸ் போர்டு, திருடன் போலீஸ் விளையாட்டு, பல்லாங்குழி உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி பொழுதை கழித்தனர்.

சகஜ நிலை

சகஜ நிலை

பின்னர் இந்தியாவின் நிலை சீராகி ஓரளவு சகஜ நிலைக்கு வந்தது. ஊரடங்கில் பல தளர்வுகள் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை உக்கிரமாக இருக்கிறது. இதனால் இந்தியாவில் தினந்தோறும் லட்சக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள்.

நோயாளிகள்

நோயாளிகள்

ஆயிரக்கணக்கானோர் கொரோனாவால் இறக்கிறார்கள். மூச்சுதத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகளுக்கு படுக்கைகள் இல்லாமலும் ஆக்ஸிஜன் இல்லாமலும் அவதியுறுகிறார்கள். ஒவ்வொரு மாநிலமாக இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாள் ஊரடங்கு, வார ஊரடங்கு என லாக்டவுனை போட்டு வருகின்றன.

ஆக்ஸிஜன்

ஆக்ஸிஜன்

எனினும் தொற்று குறைந்தபாடில்லை. தற்போது மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்ஸிஜன் இல்லாத நிலையில் இந்தியாவுக்கு ஊரடங்கு போடாவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். மேலும் இந்தியாவுக்கு சில வாரங்களுக்கு கட்டாய முழு லாக்டவுன் தேவை.

விளையாட்டுகள்

விளையாட்டுகள்

இல்லாவிட்டால் கொரோனாவின் 3ஆவது அலையில் சிக்க நேரிடும் என எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனால் மீண்டும் ஒரு லாக்டவுன் போடப்படலாம் என தெரிகிறது. இதனால் மக்கள் இப்போதே தாயக்கட்டை, பரமபதம், செஸ் போர்டு, கேரம், சைனீஸ் செக்கர்ஸ் உள்ளிட்ட விளையாட்டுகளை வாங்கி வருகிறார்கள்.

English summary
People are buying games in shops to play in home if full lockdown implements.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X