பெரிய எல்இடி திரையில் ஐபிஎல் லைவ்! சென்னையில் 5 மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏற்பாடு.. கட்டணம் எவ்வளவு?
சென்னை: 16வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் சென்னையில் உள்ள 5 மெட்ரோ ரயில் நிலையங்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை பெரிய எல்இடி திரைகளில் பொதுமக்கள் கண்டுகளிக்கலாம். இதற்கு ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை டிக்கெட் கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டி திரையில் ஐபிஎல்
இந்தியா சார்பில் ஆண்டுதோறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 31ம் தேதி 16வது ஐபிஎல் சீசன் தொடங்கியது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் முதல் போட்டி நடந்தது. நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் குஜராத் அணி வெற்றி பெற்றது. தோனி தலைமையிலான சென்னை அணி தோல்வியடைந்தது.

இந்நிலையில் தான் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராகுல் தலைமையிலான லக்னோ அணிகள் இன்று மோதுகின்றன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு துவங்கி நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை லைவ்வாக காண சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி எல்இடி திரைகள் மூலம் வடபழனி, விம்கோ நகர், சென்ட்ரல், நந்தனம், திருமங்கலம் ஆகிய ரயில் நிலைங்களில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்பட உள்ளது. இந்த போட்டியை காணும் மக்களுக்கு டிக்கெட் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மெட்ரோ ரயில் நிலையங்களில் ஐபிஎல் போட்டியை காண விரும்புவோர் ஒரு மணிநேரத்துக்கு ரூ.10 கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் ஐபிஎல் போட்டியை காண செல்வோர் அதற்கான டிக்கெட்டை பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. மேலும் சென்னையில் போட்டி நடக்கும் வேளையில் இரவு நேரத்திலும் மெட்ரோ ரயில் சேவையை நீட்டிப்பு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஐபிஎல் போட்டிகளை பெரிய எல்இடி திரைகளில் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications