ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தீர்ப்பு- பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மக்கள் கொண்டாட்டம்
சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
Recommended Video
நாசகார நச்சு ஆலையான ஸ்டெர்லைட்டுக்கு எதிராக 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதன் உச்சமாக 2018-ம் ஆண்டு மே 22-ந் தேதி போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 தமிழர்கள் மாண்டு போயினர்.

நெஞ்சை உறைய வைத்த இந்த படுகொலை சம்பவத்தைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழக அரசின் அரசாணைக்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா குழுமம் சட்டப் போராட்டங்களில் இறங்கியது.
இதன் ஒருபகுதியாக சென்னை உயர்நீதிமன்றம் இன்று வேதாந்தா குழுமத்தின் மனுவை தள்ளுபடி செய்து, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை; ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் அரசாணை செல்லும் என தீர்ப்பளித்திருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு வெளியான உடனே, பொதுமக்கள் பல இடங்களில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இந்த தீர்ப்பை சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications