இந்தாங்க இத வாங்கிட்டுப்போங்க.. ஓடாதீங்க... வேண்டாம்ப்பா, ஆள விடுங்க.. ஜெயலலிதா பிறந்த நாள் களேபரம்
Recommended Video

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71வது பிறந்த தினம் நேற்று அதிமுகவினரால் தமிழகம் முழுக்க கொண்டாடப்பட்டது.
ஆங்காங்கு உள்ள அதிமுக நிர்வாகிகள், ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். சிற்றுண்டிகள் செய்து, அவற்றை பொதுமக்களுக்கு வழங்கினர்.

இப்படித்தான் ஒரு இடத்தில் ஜெயலலிதாவிற்கு, மரியாதை செலுத்தி, சிற்றுண்டி வழங்கப்பட்டதை மக்கள் வாங்க மறுத்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
கண்ணை நம்பாதே.. என்ற எம்ஜிஆர் பாடல் பின்னணியில் இந்த நிகழ்ச்சி அரங்கேறியது. தெருவில் போவோரை கூப்பிட்டு, கூப்பிட்டு பார்த்தும் யாரும் சிற்றுண்டி வாங்க முன்வரவில்லை.
அடேய்ய்..! சும்மாதாண்டா தர்றேன்..!! 😜😜😜 pic.twitter.com/ewrB4ReF6n
— ஷிவானி சிவக்குமார் (@19SIVA25) February 24, 2019
ஜெயலலிதா பெயரைச் சொல்லி கொடுக்கும் சிற்றுண்டியை கூட வாங்க மக்கள் மறுத்து ஓடுகிறார்களே, அப்புறம் எப்படி அந்த கட்சிக்கு ஓட்டு கிடைக்கும் என சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications