தொடர் மழையை கண்டு மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை... அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேட்டி
Recommended Video
சென்னை: மழையை கண்டு மக்கள் அச்சப்படும் நிலை தற்போது இல்லை என அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள அடுத்த இருதினங்களுக்கு தமிழகத்தில் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துளளது.
இந்நிலையில் தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் அரசின் நடவடிக்கைககள் குறித்து வருவாய் துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

நிலைமை கட்டுக்குள்
அப்போது அவர் கூறும் போது, தமிழகத்தில் தொடர் மழையை கண்டு மக்கள் அச்சப்பட தேவையில்லை. 37 வருவாய் மாவட்டங்களிலும் நிலைமை கட்டுக்குள் உள்ளது. மழையால் பாதிக்கப்படும் 4,399 இடங்களில் மண்டலக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையம் நாளை ஓரளவு தான் தமிழகத்தில் மழை பெய்யும் என கூறியுள்ளது.

சராசரி மழைதான்
வடகிழக்கு பருவமழையைப் பொறுத்தவரையில் இன்னும் போதிய அளவு மழை பெய்யவில்லை. கடலோர மாவட்டங்களில் சராசரி அளவை விட அதிகமாக மழை பெய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இயல்பைவிட அதிக அளவு மழை பெய்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இயல்பான அளவு மழை பெய்துள்ளது.

முகாம்களில்
கடலூர் மாவட்டத்தில் தாழ்வான 4 இடங்களில் இருந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். நெல்லை மாவட்டத்தில் தாழ்வான 2 இடங்களில் இருந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்

நவீன உபகரணங்கள்
தமிழகத்தில் மாவட்டந்தோறும் பேரிடர் மீட்பு வீரர்கள் எப்போதும் தயார் நிலையில் உள்ளார்கள். தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்கு சேட்டிலைட் போன்கள் மற்றும் நவீன உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
கார்கே மகன் - சித்தராமையாவின் மகனுக்கு இடம்.. கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார் யார்? முழு லிஸ்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications