"ஏழைகள் வாழ நீ செய்த யாகம்"! இறுதி ஊர்வலம் முடிந்தது.. தேமுதிக அலுவலகத்திற்கு வந்தார் விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை தீவுத்திடலில் இருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் சந்தன பேழையில் வைக்கப்பட்டு கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு இறுதி ஊர்வலம் வந்தடைந்தது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கமான பரிசோதனைக்காக சென்னை ராமாவரத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதியானது.

People pay tribute to Vijayakanth on the way to DMDK Party office

இதையடுத்து அவர் நுரையீரல் அழற்சி காரணமாக அவர் நேற்று காலை உயிரிழந்தார் என மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அவருடைய உடல் சாலிகிராமம் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

தேமுதிக அலுவலகத்திற்கு விஜயகாந்த் உடல் வருகிறது என தெரிந்தவுடன் லட்சக்கணக்கான தொண்டர்கள் அங்கு குவியத் தொடங்கினர். விஜயகாந்த் ஊர்வலம் சாலிகிராமத்திலிருந்து கோயம்பேடு வர 4 மணி நேரம் எடுத்துக் கொண்டது. இந்த நிலையில் கோயம்பேடு கட்சி அலுவலகம் இருக்கும் பகுதி மெயினானது என்பதால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இந்த நிலையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாத நிலை வந்ததும் காவல் துறையினருடன் பிரேமலதா ஆலோசனை நடத்தினார். இதையடுத்து விஜயகாந்தின் உடலை தீவுத்திடலுக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இன்று காலை 6 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை பொதுமக்கள் பார்வைக்காக அவரது உடல் தீவுத்திடலில் வைக்கப்பட்டது.

இதையடுத்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வரும் தொண்டர்களும், பிரபலங்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் ஒரே வழியாக அனுப்பப்படுகிறார்கள். இதனால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. எனவே அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வந்த வயதான பிரபலங்கள் அந்த கூட்டநெரிசலில் வந்து செல்ல மிகவும் கடினமாக இருந்தது.

இந்த நிலையில் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வந்த போது கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு ராஜாஜி ஹாலில் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதே கோரிக்கையை கருணாஸும் வைத்திருந்தார்.

இந்த நிலையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாத நிலை வந்ததும் காவல் துறையினருடன் பிரேமலதா ஆலோசனை நடத்தினார். இதையடுத்து விஜயகாந்தின் உடலை தீவுத்திடலுக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று காலை 5.10 மணிக்கு தீவுத்திடலுக்கு புறப்பட்ட விஜயகாந்தின் உடல் பிற்பகல் 2.45 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

விஜயகாந்தின் உடலுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், குஷ்பு, நளினி, ராதாரவி, வாகை சந்திரசேகர், பாக்யராஜ், சாந்தனு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அது போல் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், ஓபிஎஸ், கடம்பூர் ராஜு, ஜிகே வாசன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

இறுதியாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்த நிலையில் விஜயகாந்தின் உடல் சந்தன பேழையில் வைக்கப்பட்டது. அதில் தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் என எழுதப்பட்டிருந்தது. அவரது உடல் பூ அலங்கார ஊர்தியில் வைக்கப்பட்டு இறுதி ஊர்வலம் தொடங்கியது.

பூந்தமல்லி சாலை வழியாக அவருடைய உடல் தேமுதிக கட்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. வழிநெடுகிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக கூடி மலரஞ்சலி செய்தனர். மிக பெரிய கட்டடங்களின் மேல் ஆபத்தான முறையில் நின்று கொண்டு கேப்டன் உடலை பார்க்க கூடினர். கேப்டனின் பூத உடலுக்கு சாலையின் இரு புறமும் மக்கள் நின்று கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அந்த வாகனத்தில் பிரேமலதா, விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் உள்ளிட்டோர் இருந்தனர். கிட்டதட்ட ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக மக்களின் கட்டுக்கடங்காத வெள்ளத்தில் நீந்தி கேப்டன் உடல் தேமுதிக அலுவலகத்திற்கு வந்தடைந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+