மூழ்கிய 'அயனாவரம்'.. தமிழ்நாட்டிலேயே இளம் கவுன்சிலர் கையில்.. பெரிய பொறுப்பு.. கிரவுண்ட் ரிப்போர்ட்
சென்னை: சென்னையில் மழை விட்டு இரண்டு நாட்கள் ஆகியும் சில இடங்களில் இன்னும் மழை நீர் வடியவில்லை. புறநகர் பகுதிகள் ஒருபுறம் இருந்தாலும், நகர் பகுதிகளிலேயே பல இடங்களில் மழை நீர் வடியாமல் இருக்கிறது. எனவே மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டின் இளைய கவுன்சிலர் ஆ.பிரியதர்ஷினியின் சென்னை 98வது வார்டில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
சென்னையில் கடந்த 2 நாட்களாக மழை கிடையாது. புயல் எல்லாம் முடிந்து இன்றுடன் மூன்றாவது நாள் ஆகிறது. ஆனாலும் சென்னையின் பிரதான பகுதியில் மழைநீர் தேங்கியிருக்கிறது. குறிப்பாக சென்னை அயனாவரத்தில் 3-4 அடி வரை மழைநீர், கழவுநீருடன் கலந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் சூழ்ந்திருக்கிறது. அயனாவரத்தின் 97,98வது வார்டுகளில் குட்டியப்பன் தெரு, லாக்மா நகர், சன்யாசிபுரம், டேவிட்புரம் பகுதிகளில் மழை நீர் இன்னமும் வடியாமல் இருக்கிறது.

புயல் அன்று மற்ற எல்லா பகுதிகளை போலவே இங்கும் தண்ணீர் தேங்கியிருக்கிறது. இந்த பகுதிகளுக்கு அருகில் குடிநீர் வாரியத்தின் வாட்டர் டேங்க் இருக்கிறது. இங்கிருந்துதான் குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு சென்னையின் பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த வாட்டர் டேங்க்கின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்திருப்பதால் அங்கிருந்து குடிநீர் ஊருக்குள் புகுந்திருக்கிறது. எனவே மழை நின்ற பின்னர் கூட இந்த பகுதியில் நீர் வடியவில்லை. இதுதான் பிரச்னைக்கு காரணமாக இருக்கிறது.
குட்டியப்பன் தெருவில் மட்டும் சுமார் 500 வீடுகள் வரை இருக்கின்றன. மற்ற மூன்று நகர்களை சேர்த்தால் சுமார் 1500-2000 வீடுகள் வரை இருக்கும். இந்த பகுதியில் பெரும்பாலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள்தான் வசிக்கிறார்கள். இவர்களால் இந்த பகுதியை விட்டு வெளியேற முடியவில்லை. உணவும் முறையாக விநியோகிக்கப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது. மழை நீருடன், வாட்டர் டேங்க் பகுதியிலிருந்து வெளியான குடிநீரும் கலந்திருப்பதால் அந்த பகுதியில் குடிநீர் விநியோகம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
குழந்தைகளுக்கும், முதியோர்கள், நோயாளிகளுக்கு பால் கிடைக்காமலும், உணவு பொருள் கிடைக்காமலும் அப்பகுதி மக்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். நாற்றமெடுக்கும் கழிவுநீர் ஒருபுறம், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காதது மறுபுறம் என நெருக்கடியை சந்தித்து வந்த மக்கள் தற்போது போராட்டத்தில் குதித்துள்ளனர். 98வது வார்டில் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்ற வருகின்றன.
98வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆ. பிரியதர்ஷினிதான் கவுன்சிலராக இருக்கிறார். கவுன்சிலர் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு வந்து எட்டிப்பார்க்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புயல் அன்றே வாட்டர் டேங்கின் சுவர் உடைந்துவிட்டது, ஒரு சுவரை கட்ட 2 நாட்களா? என்றும் கேள்வியெழுப்பியுள்ளனர். மட்டுமல்லாது தேங்கி நிற்கும் மழைநீர் காரணமாக வீடுகளுக்குள் விஷ பூச்சிகள் வருவதாகவும், கொசு தொல்லை அதிகரித்திருப்பதாகவும், எனவே இவற்றை தடுக்க முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக கவுன்சிலர் பிரியதர்ஷியினிடம் கேட்டபோது, "வாட்டர் டேங்கின் சுவரை கட்டும் பணிகள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் எம்எல்ஏ வெற்றியழகன் வழிகாட்டுதலின்படி வேகமாக நடைபெற்று வருகின்றன. இன்று இந்த பணிகள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் ஊருக்குள் தேங்கியிருக்கும் தண்ணீர் வடிந்துவிடும். மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது. நாங்கள் மக்கள் இருக்கும் பகுதிகளுக்கு சென்று அத்தியாவசிய பொருட்களை விநியோகித்து வருகிறோம். விரைவில் நிலைமை சீர் செய்யப்படும்" என்று கூறியிருக்கிறார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications