குட் நியூஸ்! கையில் வரப்போகும் ரூ.6000.. ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணம்! கணக்கெடுப்பு ஓவர்!
சென்னை: புயல் வெள்ள நிவாரணம் கேட்டு விண்ணப்பித்த ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு விரைவில் ரூ. 6,000 நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் மாதம் 3, 4ஆம் தேதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

தொடர்ந்தும் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6,000 வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த 37 லட்சம் குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க அரசு அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு புயல் வெள்ள நிவாரணத் தொகை நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்பட்டது. மேலும் குடும்ப அட்டை இல்லாதவர்கள், வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு வெள்ள நிவாரணம் வழங்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டது.
அதே சமயம் ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, தனித்தனியாக விண்ணப்பித்து தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விவரங்கள் தெரிவித்து நிவாரணம் பெற்றுக்கொள்ள அரசு அறிவுறுத்தியது.
இந்நிலையில் ரேஷன் அட்டை இல்லாமல் மிக்ஜாம் புயல் நிவாரணம் கேட்டு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு விரைவில் ரூ.6 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்து கணக்கெடுக்கும் பணி தற்போது நிறைவடைந்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ரேஷன் அட்டை இல்லாத 5.5 லட்சம் பேர் புயல் வெள்ள நிவாரணம் கேட்டு விண்ணப்பித்து உள்ளனர். விண்ணப்பித்தோரின் வீடுகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு தகுதியானவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
எனவே தகுதியானவர்களுக்கு விரைவில் நிவாரண தொகை ரூ. 6000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் நிவாரணம் கேட்டு ரேசன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் ரூ.6,000 வழங்கப்பட உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications