பெரம்பலூர் எம்.பி. அருண் நேரு சாதித்தது என்ன? ஓராண்டு ரவுண்ட்-அப்!
சென்னை: பெரம்பலூர் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், கே.என். அருண் நேரு. முதல் முறை எம்.பி.யான இந்த இளைஞர் பதவியேற்ற ஓராண்டு காலத்தில் சாதித்தது என்ன?. ஒரு ரவுண்ட்-அப்.
தமிழ்நாட்டிலேயே ரயில் சேவை இல்லாத ஒரே மாவட்டம் பெரம்பலூர் என்றால் நம்ப முடிகிறதா.. உண்மைதான். இந்த குறையை போக்க முழு முயற்சியில் இறங்கியுள்ளார் அருண் நேரு. இது தொடர்பாக தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் இவர், அரியலூர்-நாமக்கல் வழியாக 108 கி.மீ தூரத்திற்கு ரயில் பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை 2024 டிசம்பரில் மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளார். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் பெரம்பலூரின் பொருளாதார வளர்ச்சிக்கும் போக்குவரத்து வளர்ச்சிக்கும் ஒரு புதிய பாதை வகுக்கப்படும்

வேளாண் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் முயற்சிகள்
விவசாயம் பெரம்பலூரின் முக்கிய வாழ்வாதாரம். அறுவடைக்கு பிந்தைய இழப்புகளைக் குறைக்கவும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், பெரம்பலூரில் சிறு வெங்காயம் மற்றும் மக்காச்சோளம் பதப்படுத்தும் தொழிற்சாலைகளை அமைக்க மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தியுள்ளார். இந்தப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக அமைச்சகத்தை தொடர்ந்து நெருக்கி வருகிறார்
சாலை வசதி
பெரம்பலூர்-ஆத்தூர் NH-136 சாலையை நான்கு வழிச்சாலையாக விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத் துறையிடம் அருண் நேரு கோரிக்கையும் வைத்துள்ளார். மேம்பட்ட சாலை இணைப்பு உள்ளூர் தொழில்துறையையும், விவசாய சரக்கு போக்குவரத்தையும் எவ்வாறு அதிகரிக்கும் என்ற ஆய்வு அறிக்கையையும் தயாரித்து சமர்பித்துள்ளார்.

சுற்றுலா மேம்பாடு
17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ரஞ்சன்குடி கோட்டையை புதுப்பித்து சுற்றுலா மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்குமாறு 4 மாதங்களுக்கு முன் மத்திய கலாச்சார அமைச்சகத்திடம் அருண் நேரு வலியுறுத்தினார். இது செயல்பாட்டுக்கு வந்தால், பெரம்பலூரின் சுற்றுலாத் துறைக்கு புத்துயிர் அளிப்பதோடு, வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும்.
பெரம்பலூரில் தொழில் வளர்ச்சி
கோத்தாரி ஃபுட்வேர் குழுமம் பெரம்பலூரில் உள்ள தனது ஆலையில், உலகப் புகழ்பெற்ற Crocs பிராண்ட் காலணிகளை உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிலையில் அந்த நிறுவனம், தமிழகத்தில் கூடுதலாக ரூ.5,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த முதலீட்டின் மூலம் பெரம்பலூர் மற்றும் கரூர் மாவட்டங்களில், சர்வதேச பிராண்டுகளுக்கான தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி செய்யும் இரண்டு புதிய ஆலைகள் அமைக்கப்படும். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், எவர்வான் கோத்தாரி ஃபுட்வேர் லிமிடெட் நிறுவனத்திற்கும், தமிழக அரசுக்கும் (Guidance Tamil Nadu) இடையே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு 50,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உள்ளூர் பொருளாதாரத்தில் ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்தும்.

பிற முக்கிய முயற்சிகள்:
வேலைவாய்ப்பு முகாம்கள்: பதவியேற்றதிலிருந்து பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளார்.
கைகளத்தூரில் புதிய மருத்துவக் கட்டிடங்கள்: கைகளத்தூரில், புதிய மருத்துவக் கட்டிடங்களுக்கான பணிகளை மேற்கொண்டுள்ளார்.
புதிய வகுப்பறைகள்: பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வரும் இவர் திருச்சி வெங்கடேசபுரம் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு புதிய வகுப்பறைகள் கட்ட முயற்சி எடுத்தார்.

பொதுமக்கள் கோரிக்கைகள்: மக்களின் கோரிக்கையை ஏற்று அங்கன்வாடி பள்ளி கட்டிடங்கள், நூலகங்கள் போன்றவற்றை அமைக்க ஏற்பாடு செய்துள்ளார்.
விவசாயிகள் மேம்பாடு: டெல்டா விவசாயிகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்து APEDA உடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
குளித்தலை நீர் வழங்கல் திட்டம்: குளித்தலை நீர் வழங்கல் திட்டத்தை நிறைவேற்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
ரயில்வே மேம்பாலங்கள்/சுரங்கப்பாதைகள்: லால்குடி மற்றும் கல்லக்குடியில் ரயில்வே சுரங்கப்பாதைகள், லாலாபேட்டையில் பாதசாரி மேம்பாலம், திருச்சி லால்குடி - அன்பில் சாலையில் ரயில்வே மேம்பாலப் பணிகள், லால்குடி தொகுதிக்குட்பட்ட மணக்கால் ஊராட்சியில் ரயில்வே மேம்பாலம் ஆகியவற்றை அமைக்க முயற்சித்து வருகிறார்.

பொதுமக்கள் குறைதீர்ப்பு: ஒவ்வொரு மாதமும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் அனைத்து அரசு திட்டங்களையும் பெறுவதற்கு அதிகாரியுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
நீர் நிலைகள் தூர்வாரும் பணிகள்: பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகளை தூர்வார ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த ஓராண்டு பணிகள் பாராட்டத்தக்க வகையில் தான் உள்ளன. தானே முன் முயற்சி எடுத்த இந்த திட்டங்களை முழுமையாக நிறைவேற்றவும் கடுமையாக உழைத்தால், தந்தையும் அமைச்சருமான கே.என்.நேருவை எப்படி திருச்சி எப்போதும் கைவிடுவதில்லையோ அதே போல பெரம்பலூர் அருணை தொடர்ந்து அரவணைக்கும்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications