பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!
சென்னை: சென்னை பெரம்பூர் தொகுதியிலும், திருச்சி கிழக்கு தொகுதியிலும் தவெக தலைவர் விஜய் போட்டியிடுகிறார். இன்று வேட்பாளர்களை அறிவித்து வரும் விஜய், பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் வேட்பாளராக சி.ஜோசப் விஜய் என அறிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. தனித்து களம் காண்கிறது விஜய் தலைமையிலான தவெக. 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை இன்று வெளியிட்டு வருகிறார் விஜய்.

தவெக தலைவர் விஜய் இன்று காலை 11 மணிக்கு சென்னை நுங்கப்பாக்கத்தில் உள்ள பிபரல தனியார் விடுதியில், 234 தொகுதிகளுக்கான தவெக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறார். அதன்படி, விஜய், பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் வேட்பாளராக சி.ஜோசப் விஜய் போட்டி என அறிவித்துள்ளார்.
முதல்வர் வேட்பாளராக தேர்தலில் நிற்கும் விஜய் , தனது வெற்றியை உறுதிப்படுத்திக்கொள்ள, ஒரு தொகுதியில் பின்னடைவு ஏற்பட்டாலும் மற்றொரு தொகுதியில் வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழையும் வகையில், பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு இடங்களில் போட்டியிடுகிறார் எனக் கூறப்படுகிறது.
தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சி கிழக்கில் விஜய் போட்டியிடுவதால் டெல்டா பகுதிகளிலும் தென் மாவட்டங்களிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். பெரம்பூரில் போட்டியிட்டால் தலைநகரில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் இரண்டு தொகுதிகளிலும் நிற்கலாம் என்ற முடிவை விஜய் எடுத்ததாக கூறப்படுகிறது.
பெரம்பூர் தொகுதி முன்பு தனி தொகுதியாக இருந்து, 2008ல் தொகுதி மறுசீரமைப்பின் போது பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டது. இதுவரை திமுக 9 முறை, மார்க்சிஸ்ட் 3 முறை, அதிமுக 3 முறை, காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்ற தொகுதி பெரம்பூர்.
2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றிவேல் 79,974 வாக்குகள் பெற்று 519 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வேட்பாளரான பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் தனபாலனை தோற்கடித்தார்.
2021 தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் 105,267 வாக்குகள் பெற்றார். இந்த முறை அதிமுகவுடன் கூட்டணி வைத்து இரட்டை இலையில் போட்டியிட்ட தனபாலனை 54,976 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
திருச்சி கிழக்கு தொகுதியில் 1984, 1989ல் மலர்மன்னன், 1996, 2001ல் பரணிக்குமார், 2006ல் அன்பில் பெரியசாமி ஆகியோர் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். 2011ல் அதிமுகவைச் சேர்ந்த மனோகரன், 2016ல் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
2021 தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ் 94,302 வாக்குகள் பெற்று 53,797 வாக்குகள் வித்தியாசத்தில் வெல்லமண்டி நடராஜனை வீழ்த்தி திருச்சி கிழக்கில் வெற்றி வாகை சூடினார். கிறிஸ்தவர்கள் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகள் அதிகம் இருப்பதால் விஜய் இந்த தொகுதியை தேர்வு செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக, தவெக சார்பில் இரண்டு கட்டமாக வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பணிகள் நடைபெற்றன. இறுதிக்கட்டமாக வேட்பாளர் தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் மார்ச் 26 ஆம் தேதி பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் விஜய் தலைமையில் நடைபெற்றது. அதில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை விஜய் இறுதி செய்ததாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
நள்ளிரவு சர்ப்ரைஸ் ரெய்டு விட்ட அமைச்சர்.. கோவை அரசு மருத்துவமனையில் ட்விஸ்ட் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார்












Click it and Unblock the Notifications