பேரறிவாளனுக்கு ஜாமின்.. துணை நின்ற முதல்வருக்கு நன்றி சொன்ன அற்புதம்மாள்!
சென்னை: பேரறிவாளனுக்கு இன்று ஜாமின் கிடைத்துள்ள நிலையில், தமிழக முதல்வருக்கு அற்புதம்மாள் நன்றி தெரிவித்துள்ளார்.
Recommended Video
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவித்து, தனக்கு விடுதலை கொடுக்க வேண்டும் என்று பேரறிவாளன் மனு தாக்கல் செய்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று இருக்கும் பேரறிவாளனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இந்த வழக்கில் சிறையில் ஆயுள் தண்டனையோடு இருக்கும் 7 பேரில் முதல் முதலாக இப்போதுதான் ஒருவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பேரறிவாளன்
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 28 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கியது நீதிமன்றம். 2014ல் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இவர்களின் கருணை மனு அப்போது நிலுவையில் இருந்தது. நீண்ட காலம் கருணை மனு நிலுவையில் இருப்பது அநீதிக்கு சமமானது. இதை சுட்டிக்காட்டி 2014ல் இவரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பேரறிவாளன் 2016ல் மனுதாக்கல் செய்து, அதன்பின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தார்.

வழக்கு
இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பேரறிவாளனுக்கு ஜாமின் கொடுக்க கூடாது என மத்திய அரசு வாதாடியது. இதையடுத்து தமிழ்நாடு அரசு சார்பாக ராகேஷ் திவேதி வைத்த வாதத்தில், இந்த வழக்கில் தண்டனை கைதி ஆயுள் தண்டனை பெற்று இருக்கிறார். சட்டப்படி ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை விடுவிக்கும் சக்தி குடியரசுத் தலைவருக்கு கிடையாது . அது மாநில அரசுக்கு மட்டுமே உள்ளது.

ஜாமின்
ஆயுள் தண்டனை பெற்ற கோட்சே சகோதரர் 14 ஆண்டுகளில் விடுவிக்கப்பட்டாரே?. மாநில அரசு கோபால் கோட்சே போல் இல்லாமல் பேரறிவாளன் 32 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்திருக்கிறார். இந்த அதிகாரம் மாநில அரசுக்கு கீழ் வருகிறது. மாநில அரசு இதில் முடிவு எடுக்க முடியும். இதனால் மாநில அரசு நினைத்தால் ஆயுள் தண்டனை கைதிகள் போல இந்த வழக்கிலும் மன்னிப்பு வழங்க முடியும் என்று வாதம் வைத்தனர். இதையடுத்து பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

அற்புதம்மாள்
பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கப்பட்ட நிலையில், அற்புதம்மாள் ட்வீட் செய்துள்ளார். அதில், '' பேரறிவாளன் 31 ஆண்டு சிறை, நன்னடத்தை, சிறையில் பெற்ற கல்வி, உடல்நிலை கருதி ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. பேரறிவாளனுக்கு ஜாமின் கிடைக்க துணை நின்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. அதோடு
தமிழக அரசு சார்பாக நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர்களுக்கு நன்றி'' என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications