வென்றது நீதியும்... அற்புதம் அன்னையின் போர்குணமும்... பேரறிவாளன் விடுதலை பற்றி கமல்ஹாசன் கருத்து
சென்னை: டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்ட நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவன தலைவர் கமல்ஹாசன் வரவேற்றுள்ளார். ‛‛வென்றது நீதியும், அற்புதம் அன்னையின் போர்குணமும்'' என அவர் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வராவ் தலைமையிலான அமர்வு முன் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மத்திய, மாநில அரசுகள் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

தீர்ப்பு வாசிப்பு
இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுவிக்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றத்தின் நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு பேரறிவாளன் வழக்கில் தீர்ப்பு வழங்கினர். பேரறிவாளன் விடுதலை கோரிய வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா தீர்ப்பை வாசித்தனர்.

பேரறிவாளன் விடுதலை
அதில், 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்த நிலையில் பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142யை பயன்படுத்தி பேரறிவாளனை உச்சநீதிமன்றம் வி டுதலை செய்தது. அரசியலமைப்பின் 161வது பிரிவில் முடிவெடுக்க ஆளுநர் தாமதப்படுத்தியதாக சுட்டிக்காட்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அரசியல் கட்சிகள் வரவேற்பு
பேரறிவாளனின் இந்த விடுதலை தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளன. திமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், பாமக, நாம்தமிழர் உள்பட அனைத்து கட்சிகளும் வரவேற்றுள்ளன. காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையே 31 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்த நிலையில் வழக்கில் இருந்து விடுதலை ஆனதால் பேரறிவாளன் மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Recommended Video

கமல்ஹாசன் வரவேற்பு
இதுபற்றி நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் நிறுவன தலைவரான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‛‛ஆயுள் தண்டனையை காட்டிலும் நீண்ட 31 ஆண்டுகள் இப்போதேனும் முடிந்ததே என மகிழ்கிறோம். பேரறிவாளனுக்கான அநீதியில் அரசுகள் பந்த விளையாடிய சூழலில், நீதிமன்றமே முன்வந்து விடுதை செய்திருக்கிறது. வென்றது நீதியும் அற்புதம் அன்னையின் போர்க்குணமும்'' என குறிப்பிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications