Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கலவரத்தைத் தூண்டிய பெரியார் ஊர்வலம்..! ‘சோ’ பற்ற வைத்த நெருப்பு.. 1971 தேர்தலில் சாதித்த திமுக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 1971 தேர்தல் சமயத்தில் பெரியார் சேலத்தில் நடத்திய கடவுள் நம்பிக்கைக்கு எதிரான ஊர்வலம், திமுக கூட்டணிக்குச் சரியான சறுக்கலாக அமையும் எனப் பலரும் கணித்திருந்த நிலையில் தேர்தல் முடிவுகள் அதற்கு மாறாகவே வந்தன.

மு.கருணாநிதி தலைமையில் ஆட்சிக்கு வந்த பின், அதிகாரம் முழுக்க அவரது இயற்கையாகவே அவரது கைக்குச் சென்றது. குறிவைத்து அவர் தனக்கு எதிரான சக்திகளை ஓரங்கட்டி வந்தார். அண்ணா மறைவுக்குப் பின் மு.கவை திமுக சட்டமன்றத் தலைவராக முன்மொழிந்ததே மதியழகன் தான். ஆட்சி அதிகாரம் வரப்பெற்றதும் தன் மீது விமர்சனம் வைத்த மதியழகன் மற்றும் அன்பழகன் ஆகியோர் மீதே கருணாநிதி நடவடிக்கை எடுக்கத் துணிந்தார்.

Periyar March That Sparked Riots The Fire Ignited by Cho The DMK won in 1971 Election

தேசிய அளவில் காங்கிரஸ் காமராஜ் தலைமையில் ஸ்தாபன காங்கிரஸ் (ஓ) ஆகவும் இந்திரா காந்தி தலைமையில் இ காங்கிரஸ் (ஆர்) ஆகவும் உடைந்ததால் நாடெங்கும் கட்சியின் நிலை பரிதாபகரமானது. 62இல் பேரவையில் 51 ஆக இருந்த பலம் 15 ஆகச் சுருங்கியது. அதவது 57 தேர்தலில் திமுக அடைந்த முதற்கட்ட வெற்றியை காமராஜ் 71 தேர்தலில் பெற்றார். இது மகத்தான தோல்வி. இந்திரா காங்கிரஸ் பக்கம் சி.சுப்பிரமணியமும் எம்.பக்தவத்சலமும் அணி தாவியதால் அக்கட்சியின் பலம் 8 ஆக இருந்தது.

தமிழ்நாட்டில் பெரும்பாலான தொண்டர்கள் காமராஜின் ஸ்தாபன காங்கிரசில்தான் இருந்தனர். 1970 உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் (ஆர்) வெறும் 7% வாக்குகளைப் பெற்றும் வெறும் 3% இடங்களையே பெற்றது. இது படுதோல்வி எனத் தனியே கூறவேண்டியதில்லை.

வெந்து எழுதிய ராஜாஜி

திமுக 71இல் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடிப்பதற்கு முன் ஈ.வெ.ரா.சாமி, சேலத்தில் கடவுள் சிலைகளை வைத்து ஒரு மூடநம்பிக்கைக்கு எதிரான ஊர்வலத்தை நடத்தினார். பல ஊடகங்கள் அதில் கவனம் செலுத்தத் தவறிவிட்டன. 'துக்ளக்' அதை முக்கியத்துவம் அளித்து படங்களுடன் செய்திக் கட்டுரையைப் பிரசுரம் செய்து ஊருக்கு வெளிச்சமிட்டுக் காட்டியது.

அந்த ஊர்வலம் இந்து மதத்தின் மீது நம்பிக்கைக் கொண்டவர்களைக் கொதிப்படையச் செய்தது. அதுவும் தேர்தல் காலகட்டம் என்பதால் செய்து விஷம்போல் பரவியது. 'பாடம் கற்பிக்க வேண்டும்' எனத் தலையங்கம் தீட்டிக் கண்டித்தது 'கல்கி' (28 பிப்ரவரி 1971). "சேலத்தில் பெரியார் தலைமையில் ஓர் அக்கிரமக் கூட்டம் ஊர்வலமாக அதிகாரிகளுடைய பார்வையும் ஜனவரி 24 ஆம் தேதி சென்றது. நியாயப்படியும் நீதிப்படியும் இந்த அக்கிரம ஊர்வலத்தை உடனே கலைத்து ஊர்வலத்தைத் தலைமை தாங்கி நடத்தியவர்களைச் சிறைச் சாலையில் மூடிருக்க வேண்டும்.

திமுக தலைமையில் நடக்கும் இந்த ஆட்சியில் மனப்பான்மையை உணர்ந்துதான் போலீசாரும் கடமையில் கவனம் செலுத்தாமல் அதற்கு உடந்தையாக இருந்தனர் எனக் கருத வேண்டும். விஷயத்தை வெளிப்படுத்திய பத்திரிகைகள் மீது திமுக அரசாங்கம் பாய்ந்திருக்கிறது. ஆகவே திமுக அரசாங்கத்தை அப்புறப்படுத்த வேண்டும். ஒரு பக்கம் இந்திரா காந்தியின் டெல்லி ஆட்சிமுறை தேசத்தைக் கம்யூனிஸ்ட் ஆட்சியாக்கப் பார்க்கிறது. மற்றொரு பக்கம் திமுக ஆட்சி தமிழ்நாட்டு மக்களை உணர்ச்சியற்ற பூச்சிகளாகக் கருதப் பார்க்கிறது.

மார்ச் மாதம் முதல் வாரத்தில் மக்கள் இதற்கு எதிராகக் கிளம்பவேண்டும். தேர்தலில் திமுகவுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும். "சம்பவம் நடந்து 25 நாட்களுக்குப் பின் இப்போது பெரியார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கப்போவதாக முதல்வர் பேசியிருக்கிறார். அவர் கூறும் சமாதானங்கள் எல்லாம் நொண்டிச் சமாதானங்கள்." என்று குமுறி இருந்து.

அன்று 12.8% இப்போது 48.6%

"டெல்லி அரசியலிலிருந்து இந்திரா காந்தி அகற்றப்பட வேண்டும். திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்" என்று மக்களைக் கேட்டுக் கொண்ட ராஜகோபாலாச்சாரி, சேலத்தில் நடந்த சர்ச்சையான ஊர்வலத்தைப் பற்றிக் கட்டுரை எழுதி இருந்தார். "சேலத்துப் பயங்கர அசம்பாவிதத்தின் நிர்வாகிகள் மீதும் பெரியார் மீதும் தமிழக அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. இந்த ஊர்வலத்தைப் பற்றி தகவல் பெறுவதற்கு அரசாங்கத்திற்கு இத்துணைக் காலம் ஆகியிருக்கிறது போலும்.

மகா ஆபாசமான முறையில் இந்த ஊர்வலம் நடந்திருக்கிறது. இந்த ஊர்வலத்தின் வெளியிட இருந்த 'சோ'வுக்கு தமிழ்நாட்டுச் சர்க்கார் நன்றி தெரிவிக்க வேண்டும், ஊர்வலப் படங்களை 'சோ' வெளியிட முன்வராவிடில் இந்த விபரீத ஊர்வலம் குறித்துத் தமிழக அரசாங்கம் கவனமே செலுத்தி இராது" என நொந்து பேசியிருந்த ராஜாஜி, 'இந்த வயதிலும் நான் அரசியலை ஈடுபடவேண்டியிருக்கிறது' எனத் தன் முதுமையை எண்ணி வருந்தியிருந்தார். அப்போது இவருக்கு 94 வயது. இதே ஆண்டு இந்த மனக் காயம் மறைவதற்குள் டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி அவர் காலமாகிவிட்டார்.

சுருண்டு விழுந்த காங்கிரஸ்

அண்ணா தலைமையில் 1957 தேர்தலில் முதன்முறையாகக் களம் காணும்போது 12.8% வாக்குகளைப் பதிவு செய்திருந்தது. அதே 1971இல் கருணாநிதி தலைமையில் களம் கண்டபோது அதன் வாக்குச் சதவீதம் 48,6% பெற்றிருந்தது. அதாவது 35.8% அளவு அதன் வாக்கு வங்கி உயர்ந்திருந்தது.

பெரியாரின் சிலை உடைப்புப் போராட்டத்திற்கு எதிராக முதுபெரும் தலைவர்களான காமராஜ் மற்றும் ராஜாஜி ஆகிய இருவரும் கடும் பரப்புரையை மேற்கொண்டு பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியும், திமுகவின் தேர்தல் வளர்ச்சிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

இறுதியில் அன்பழகனின் பகிர்ந்திருந்த புரிதலே மக்கள் மனநிலையாக அமைந்திருந்தது என அறியமுடிந்தது. அவர், "திமுகவுக்கும் தி.கவுக்கும் உள்ள வித்தியாசத்தை மக்கள் அறிவார்கள். 1944இல் இருந்து திகவின் நாத்திக வாதம் நாடறிந்ததே. வலதுசாரிகளின் துவேஷமான மத பிரச்சார அலை யாரையும் அடித்துச் சென்றுவிடாது என்பதை நாங்கள் அறிவோம்" என்றார்.

சட்டமன்றத்தில் 234 தொகுதிகளில் 184 இடங்களை உறுதிசெய்த திமுக மக்களவையில் மொத்தம் 40 தொகுதிகளில் இக்கூட்டணி 39 இடங்களைப் பெற்று வரலாறு படைத்திருந்தது.

எழுதியவர்: கடற்கரய்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+