பொன்னேரி பேருந்து நிலையம் அருகே பெரியார் சிலை சேதம்.. ஒருவர் சரண்
பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேருந்து நிலையத்தின் அருகே உள்ள பெரியார் சிலை சேதம் அடைந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பொன்னேரி காவல் நிலையத்தில் செல்லக்கிளி என்பவர் சரணடைந்துள்ளார்.

பெரியார் சிலையை இரும்பு கம்பியால் சேதப்படுத்தியதாகவும் அவர் காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளார். சிலையின் முகம் சிதைக்கப்பட்டும், மூக்கு கண்ணாடி உடைக்கப்பட்டும் இருந்த நிலையில்,உடனடியாக நிகழ்விடத்திற்கு வந்த காவல் துறையினர், சிலையை துணியால் மறைத்தனர்.
திராவிட கழகத்தினர் சிலையை சேதப்படுத்திய இடத்தில் திரண்டனர். சிலையை சேதப்படுத்தியதற்கான காரணம் குறித்து காவல் நிலையத்தில் சரணடைந்த செல்லக்கிளி என்பவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட இடத்திற்கு எதிரே உள்ள கடையின் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையிலும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்மைக்காலமாக மீஞ்சூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் இருந்த பெரியார் சிலை சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications