Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேசிய பாதுகாப்பு சட்டம் போட்ட போது கெஞ்சிய சீமான், படகில் செல்லாமல் ஓடி வந்தவர்..கரு.அண்ணாமலை சாட்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தம் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்த போது போலீசாரின் கைது நடவடிக்கையை எதிர்கொள்ள முடியாமல் கெஞ்சியவர்தான் தற்போது மேடைகளில் வீரமாக முழங்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் (Seeman) என்று அப்போது உடன் இருந்த திராவிடர் இயக்க மூத்த நிர்வாகி கரு.அண்ணாமலை (Seeman Periyar Prabhakaran) சாட்சியமளித்துள்ளார்.

சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளரும் திராவிடர் இயக்க மூத்த நிர்வாகியுமான சென்னை எம்ஜிஆர் நகர் கரு.அண்ணாமலை அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: திராவிடர் இயக்கத்தில் தொடர்ந்து செயல்பட்டு வரும் என் வீடும் இயக்குநர் மணிவண்ணன் வீடும் பக்கத்தில்தான் உள்ளன. நான் ஒரு பெரியாரிஸ்ட் என்ற அடிப்படையில் எங்கள் பொதுக் கூட்டங்களுக்கு மணிவண்ணனை அழைப்போம்; நிதி உதவி பெறுவோம். இதற்காக மணிவண்ணன் வீட்டுக்கு நாங்கள் செல்வோம். அப்போதுதான் முதல் முறையாக சீமானை சந்தித்தோம். அதன் பிறகு 2002-ம் ஆண்டு முதல் நாங்கள் ஏற்பாடு செய்த கூட்டங்களுக்கு சீமான் தொடர்ந்து வரத் தொடங்கினார். அப்போது சீமான், வளசரவாக்கம் வீட்டில் இருந்தார். 16 ஆண்டுகாலம் வாடகையே தராமல் ஒரு ஆசிரியரை சீமான் ஏமாற்றிய வீடுதான் அந்த வளசரவாக்கம் வீடு. அந்த வீட்டுக்குதான் நாங்கள் செல்வோம்.

periyar seeman prabhakaran

சீமான் காட்டுவது உண்மையான போட்டோவே அல்ல

சீமான், ஈழத்துக்குப் போனது உண்மைதான்; பல நாள் காத்திருந்த பின்னர்தான் பிரபாகரனை சீமான் சந்தித்தார் என்பதும் உண்மைதான்; அதுவும் கொளத்தூர் மணியின் வேண்டுகோளை ஏற்றுதான் சீமானை பிரபாகரன் சந்தித்தார். அதேபோல பிரபாகரனுடன் சீமான் போட்டோ எடுத்ததும் உண்மைதான்.ஆனால் தற்போது சீமான் காட்டிக் கொண்டிருக்கிற போட்டோ அது அல்ல. அந்த உண்மையான போட்டோவை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் வெளியிடுவார். தற்போது சீமான் காட்டிக் கொண்டிருக்கும் படம் கிராபிக்ஸ். 2010-ம் ஆண்டு ஆனந்த விகடனில் இந்த படம் வெளியான உடனேயே கிராபிக்ஸ்தான் இது என திட்டவட்டமாக கூறினேன் நான்.

அன்றே சொன்னேன்...

10 ஆண்டுகளுக்கு முன்னர் இயக்குநர் களஞ்சியம் என்னைப் பார்க்க வந்தார். அப்போது கூட இந்த போட்டோ கிராபிக்ஸ் என்றேன். அதற்கு களஞ்சியம், என்னய்யா செய்யுறது.. எதோ நல்லா இருக்கிறார் என்றார். சில நாட்களுக்கு முன்னர் கூட களஞ்சியத்தின் செல்போனுக்கு நான் இதனை நினைவூட்டி தகவல் அனுப்பி இருந்தேன்.

கடல் வழியே செல்லாம ஓடி வந்த சீமான்

சீமான், ஈழத்துக்கு செல்ல 2 முறை படகு பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் படகில் பயணம் செய்த சிறிது நேரத்திலேயே கரைக்கு திரும்பவும் ஓடிவிட்டார். அவரால் கடல் காற்றை எதிர்கொண்டு படகில் செல்ல முடியவில்லை. அவரது உடல்நிலைக்கு ஒத்துவரவில்லை. இதன் பின்னர்தான் பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு சென்றார் சீமான்.

காத்திருந்து ஏமாந்த சீமான்.. உதவிய கொளத்தூர் மணி

அப்படி இலங்கைக்கு சென்ற சீமான் பிரபாகரனை சந்திக்க முடியாமல் மாமரத்தின் கீழ் சும்மாதான் அமர்ந்திருந்தார். இது உண்மையா? பொய்யா? ஏன் பார்க்க முடியவில்லை? அங்கிருந்து கொளத்தூர் மணியை தொடர்பு கொண்டு பேசினார் சீமான். கொளத்தூர் மணிதான் புலிகளின் தளபதி நடேசனுக்கு தொடர்பு கொண்டு, பிரபாகரனை சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். இதன் பின்னரே பிரபாகரனை சீமான் சந்தித்தார். இந்த சந்திப்பு ஒரு சில நிமிடங்கள்தான் நடந்தது. தற்போது சீமான் காட்டி வரும் போட்டோ அப்போது எடுக்கப்பட்டது அல்ல.

கிராபிக்ஸ் ஐடியா கொடுத்ததே நான்.. உடனிருந்த விஜயலட்சுமி

தற்போது சீமான் காட்டுவது கிராபிக்ஸ் படம்தான். ஏனெனில் 21.07.2009-ல் சீமானை நான் சந்தித்து பேசினேன். அப்போது சீமான் என்னிடம், பிரபாகரனுடன் ஒரே ஒரு போட்டோதான் எடுத்தேன். வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டோ அது. அந்த போட்டோ கிடைக்குமான்னு தெரியலை.. உனக்குதான் தொடர்புகள் இருக்கே.. முடிந்தால் வாங்கிக் கொடு என கெஞ்சினார். அப்போதுதான், இயக்கமே அழிஞ்சு போச்சு.. இனிமே கிராபிக்ஸில்தான் எதையாவது செய்தால்தான் உண்டு என சொன்னது நான் தான். அப்போது நடிகை விஜயலட்சுமியும் உடன் இருந்தார். இப்படி நான் சீமானிடம் சொன்ன சில நாட்களிலேயே பிரபாகரனுடன் இருக்கும் சீமானின் கிராபிக்ஸ் போட்டோ வெளியானது. அப்போதே நான் இது கிராபிக்ஸ் என்பதை திட்டவட்டமாக கூறினேன். அதுதான் ஆனந்த விகடனிலும் வெளிவந்தது.

நடிகர் சத்யராஜிடம் வாங்கிய பணம்

இதேபோல நடிகர் சத்யராஜிடம் விடுதலைப் புலிகளுக்கு உதவ வேண்டும் என பல முறை பணம் பெற்றிருக்கிறார் சீமான். இதனை நடிகர் சத்யராஜ் என்னிடமே சொல்லி புலம்பியும் இருக்கிறார்.

தேசிய பாதுகாப்புச் சட்டம்

ராமேஸ்வரம் பொதுக் கூட்டத்தில் சீமான் பேசிய பிறகு அவர் மீது தேசப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்போது சீமானை கைது செய்ய போலீசார் அவாது வீட்டுக்கு வருகின்றனர். அப்போது நான் தான் சீமான் வீட்டு கேட்டை திறந்துவிட்டு போலீசாரையும் உள்ளே அழைத்துச் சென்றேன். இன்று சீமானுக்காக பேசுகிற சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி என யாருமே அன்று கிடையாது.

தேசிய பாதுகாப்புச் சட்டம்.. கெஞ்சிய சீமான்

சீமான் வீட்டுக்குள் போலீசார் நுழைந்தனர்; அப்போது போலீசாரிடம் சீமான் சொன்ன முதல் வார்த்தையே.. முன்வரிசையில் உட்கார்ந்திருந்தப்பவர்களை குஷிபடுத்துவதற்காக ஏதோ பேசிவிட்டேன்.. இதற்காக தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வதா? ஏதாவது கொஞ்சம் பார்த்து செய்யக் கூடாதா? என கெஞ்சினார் சீமான். இதற்கு உடன் இருந்த நான்தான் சாட்சி. சீமான் பொது மேடைகளில்தான் வீரமாக பேசுவார்... நெஞ்சை நிமிர்த்திக் காட்டுவார்.. ஆனால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யும் போது எப்படி கெஞ்சினார் என்பது உடன் இருந்த எனக்குதான் தெரியும். இவ்வாறு கரு. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+