Periyar Issue:சீமான் மீது பெட்ரோல் குண்டு வீசுவோம்-'வெடிகுண்டு' மிரட்டலுக்கு பெரியாரிஸ்டுகள் பதிலடி!
சென்னை: பெரியார் தொண்டர்கள் மீது சீமான் வெடிகுண்டு வீசினால் பதிலுக்கு பெட்ரோல் குண்டுகளை சீமான் மீது வீசுவோம் என்று பெரியாரிஸ்டுகள் பதிலடி தந்துள்ளனர். மேலும் சீமான் சொல்கிற பிரபாகரனின் வெடிகுண்டுகளை தமிழ்நாட்டில் தயாரித்து அனுப்பி சிறை தண்டனையை அனுபவித்தவர்களே தாங்கள்தான் என்றும் ஏற்கனவே பெரியார் தொண்டர்கள் பதிலளித்திருந்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியாரின் வெங்காயத்தை என் மீது வீசினால் பெரியார் தொண்டர்கள் மீது வெடிகுண்டு வீசுவேன்.. பிரபாகரன் தந்த வெடிகுண்டு
வைத்திருக்கிறேன்., Be Carefull என மிரட்டல் விடுத்திருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சீமானின் இந்த பேச்சுக்கு எதிராக போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சீமானை கைது செய்து அவரது பிரசாரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் பெரியார் இயக்கங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
மேலும் சீமான் சொல்கிற, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கே வெடிகுண்டுகளை தயாரித்து அனுப்பி சிறை தண்டனைகளை ஏற்றவர்கள்தான் பெரியார் தொண்டர்கள் எனவும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் பதில் தந்தது. திராவிடர் விடுதலை கழகத்தினரும் சீமானுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் யூடியூப் ஒன்றுக்கு பேட்டியளித்த திராவிடர் பெரியார் கழகத்தின் முதன்மை நிர்வாகி மா.பா. மணிஅமுதன், பெரியார் தொண்டர்கள் மீது சீமான் வெடிகுண்டு வீசினால் பதிலுக்கு அணுகுண்டு வீசுவோம். ஆனால் சீமான் அந்த அளவுக்கு ஒர்த் இல்லை. தகுதியானவர் இல்லை. அதனால் பெட்ரோல் குண்டுதான் வீசுவோம். அரை லிட்டர் பெட்ரோல் போதுமே.. உருண்டை உருட்டியவர்களுக்கே (வெடிகுண்டு தயாரித்தவர்கள்) மிரட்டல் விடுப்பதா?
சீமான் சொல்கிற பிரபாகரனின் கையில் இருக்கும் வெடிகுண்டுகளில் பெரியாரிஸ்டுகளான கோவை ராமகிருட்டிணன் முகம் இருக்கும்; கொளத்தூர் மணி முகம் இருக்கும்; ஆறுச்சாமி முகம் இருக்கும்; ஒவ்வொரு பெரியார் தொண்டரின் முகம் இருக்கும்; அந்த அளவுக்கு தியாகம் செய்தவர்கள் என்பதை சீமான் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications