கியர் மாறும் கிளாம்பாக்கம்.. இதைவிடுங்க, பெருங்களத்தூர் ரோட்டுல சும்மா பறக்கலாம்.. பாலம் திறந்தாச்சு
சென்னை: மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில், பெருங்களத்தூர் மேம்பாலம் இன்று திறந்து வைக்கப்பட்டது.. இதனால் வெளியூர் செல்பவர்களுக்கு இனி எந்த பிரச்சனையும் இருக்காது என்று நம்பப்படுகிறது. அத்துடன், வாகன ஓட்டிகளுக்கும் பெருத்த மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
பெருங்களத்தூர் ரயில் நிலையம் பகுதியில் மேம்பாலங்களும் இல்லை என்பதால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் நிறையவே சிரமங்களை எதிர்கொண்டனர்..
எனவே, கடந்த 2020ம் ஆண்டு, 234 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டின்மூலம் அந்த பகுதியில் மேம்பாலங்கள் கட்டும் பணி ஆரம்பமானது..

பழைய ரயில்வே மேம்பாலத்தை இடித்து அகற்றிவிட்டு சுமார் ரூ.25.7 கோடியில் புதிய மேம்பாலம் கட்டத் திட்டமிடப்பட்டது. 2.4 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட உள்ள இந்த மேம்பாலத்தில் இருபுறமும் சேர்த்து எட்டு வழி பாதையாக அமைக்கவும் திட்டமிடப்பட்டது.
செங்கல்பட்டு: அதன்படி, பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகில், மாநில நெடுஞ்சாலைத் துறை, ரயில்வே இணைந்து ரூ.234 கோடியில், மேம்பாலம் கட்டும் பணிகள் ஆரம்பமாகின.. இதன் ஒரு பகுதி ஜி.எஸ்.டி., சாலையில், செங்கல்பட்டு- தாம்பரம் மார்க்கமான ஒரு வழிப்பாதை கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திறக்கப்பட்ட நிலையில், பெருங்களத்தூரிலிருந்து சீனிவாசா நகர் செல்லும் ரயில்வே கிராசிங் மேம்பால பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று வந்தன..
இதனால், சீனிவாசா நகர், முடிச்சூர், ஆர் எம் கே நகர் , பீர்க்கன்கரணை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து செல்லும் வாகன ஓட்டிகள், தாம்பரம் மற்றும் வண்டலூர் செல்வதற்கு சுமார் 4 முதல் 5 கிலோமீட்டர் வரை சுற்றி செல்லும் நிலைமை ஏற்பட்டது... இந்நிலையில், பெருங்களத்தூர் மேம்பாலம் கட்டிமுடிக்கப்பட்ட நிலையில், மின்இணைப்பு பெறுவது உள்ளிட்ட நடைமுறை சிக்கல்களால், பாலத்தை திறப்பதில் தாமதம் ஏற்பட்டுக்கொண்டேயிருந்தது..

மேம்பாலம் திறப்பு: தற்போது அந்த பணிகள் அனைத்தும் முடிந்தநிலையில், மேம்பாலம் இன்று திறக்கப்பட்டது.. சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் சீனிவாசா நகர் பாதையை, மக்கள் பயன்பாட்டுக்கு இன்று மாலை 3:00 மணிக்கு திறந்து வைத்தார்.
சீனிவாசா நகர், ஆர்.எம்.கே.நகர், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து செல்லும் வாகன ஓட்டிகள், வண்டலூர், தாம்பரம் செல்வதற்கு 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை இருந்தது தற்போது மாறியுள்ளது.. அதேபோல, பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், பணிக்கு செல்லும் ஊழியர்கள் என ஆயிரக்கணக்கானோர் பெருங்களத்தூர் ரயில்வே கிராசிங்கை கடந்து செல்லும் சூழல் நிலவி வந்த நிலையில், இப்போது நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
நெரிசல்: அனைத்து தரப்பினருக்குமே இந்த புதிய மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது பெருத்த மகிழ்ச்சியை தந்துவருகிறது. இனி போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என்றும் நம்பப்படுகிறது.
இதனிடையே, கிளாம்பாக்கம் பஸ் முனையம் விரைவில் திறக்கப்படும் என்று நம்பப்படுகிறது.. ஆனால், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் மழை பெய்தாலே, தண்ணீர் தேங்கி நிற்பது சில சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது..
எனவே, பேருந்து நிலையப்பகுதியில் மழைநீர் தேங்குவதால் வடிகால் கட்டும் பணிகள் துரிதமாகி உள்ளன.. அதேபோல, பஸ்கள், எளிதாக சென்று வரும் வகையில் கிளாம்பாக்கத்தை சுற்றி சாலை அமைக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.. இந்த பணிகள் எல்லாம் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications