அடியோடு மாறப்போகுது பெருங்களத்தூர்.. மத்திய அரசு கொடுத்த கிரீன் சிக்னல்.. இனி டிராபிக்கே இருக்காது
சென்னை: கிழக்கு தாம்பரம் பைபாஸ் சாலை, பெருங்களத்தூர் மேம்பால பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. வண்டலூர் காப்புக் காடுகளுக்கு சொந்தமான நிலத்தை பயன்படுத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தற்போது ஒப்புதல் வழங்கி இருப்பதால், 2 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் இந்த மேம்பால பணிகள் விரைவில் புத்துயிர் பெற்று பணிகள் வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக டெண்டர் விடப்பட்டு இதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது.
சென்னையின் நுழைவாயில் என்று சொல்லப்படும் பகுதிகளில் ஒன்று பெருங்களத்தூர். தென் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் பெருங்களத்தூர், தாம்பரம் சாலை வழியாகத்தான் சென்னை சிட்டிக்குள் வருகின்றன. இதனால், இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் என்பது எப்போதும் அதிக அளவில் காணப்படும். பீக் நேரத்தில் ஜிஎஸ்டி சாலையில் நத்தை போல வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய அளவுக்கு போக்குவரத்து நெரிசலானது காணப்படும்.

தற்போது கிளாம்பாக்கத்திற்கு பேருந்து நிலையம் மாற்றப்பட்டு இருப்பதால், முன்பை விட சற்று நெரிசல் குறைந்து இருக்கிறது. கோயம்பேட்டில் இருந்து வெளியூருக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த போது, பெருங்களத்தூரில் வாகன ஓட்டிகள் திண்டாடிப்போகும் அளவிற்கு போக்குவரத்து நெரிசல் இருக்கும். பெருங்களத்தூர் பகுதியிலேயே வாகன ஓட்டிகள் பல மணி நேரம் டிராபிக்கில் தவிக்க வேண்டியிருக்கும்.
பெருங்களத்தூரில் உள்ள போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக பல்வேறு சாலை மேம்பாட்டு திட்டங்களை தமிழக அரசு அப்பகுதியில் மேற்கொண்டு வருகிறது. ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, சென்னைக்கு வெளியில் இருந்து வரும் வாகனங்கள் தாம்பரம் கிழக்கு பைபாஸ் சாலையை இணைக்கும் விதமாக கிரேட் செபரேட்டர் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் இதற்கான நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் இருந்தது.
பெருங்களத்தூர் அருகே உள்ள வனப்பகுதியில் அனுமதி வாங்குவது உள்ளிட்ட காரணங்களால் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது. பல மாதங்களாக இந்த மேம்பால பணிகள் அப்படியே கிடப்பில் கிடக்கிறது. வண்டலூர் காப்புக் காடுகளுக்கு சொந்தமான நிலத்தை பயன்படுத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் முதன்மை ஒப்புதல் வழங்கியிருக்கிறது.
அதாவது, பெருங்களத்தூர் மேம்பால பணிகள் அமைப்பதற்கும், தாம்பரம் ஈஸ்டர்ன் பைபாஸ் சாலை அமைப்பதற்கும் வனத்துறை இடங்களை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பெருங்களத்தூர் மேம்பாலம் அமைப்பதற்கும் வனத்துறையின் 2.35 ஏக்கர் நிலத்தையும் தாம்பரம் கிழக்கு பைபாஸ் அமைப்பதற்கு 11.2 ஏக்கர் ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் பெருங்களத்தூர் மேம்பாலத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தில் 204 வனத்துறை மரங்களும், கிழைக்கு பைபாஸ் சாலைக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் 285 மரங்களும் வெட்டப்பட உள்ளன.
வெட்டப்படும் மரங்களுக்கு மாற்றாக கூடுதலாக மரங்களை நடவும் திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் தற்போது கிடைத்து இருப்பதால் கிழக்கு தாம்பரம் பைபாஸ் சாலை, பெருங்களத்தூர் மேம்பால பணிகள் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. 2 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் இந்த மேம்பால பணிகள் விரைவில் புத்துயிர் பெற்று பணிகள் வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக டெண்டர் விடப்பட்டு இதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது.
கிழக்கு தாம்பரம்: பெருங்களத்தூரில் இருந்து சதாநாதபுரம், சேலையூர், ராஜகீழ்ப்பாக்கம், கேம்ப் ரோடு, வேளச்சேரி வழியாக செல்லும் வகையில் தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை என்ற திட்டம், 15 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இந்த புறவழிச்சாலையில் கடைசி 900 மீட்டர் சாலை பெருங்களத்தூர் மேம்பாலத்துடன் இணைக்கப்படுகிறது.
இதற்காக வண்டலூர் காப்பு காடுகள் வசம் உள்ள 4.46 ஹெக்டேர் நிலம் தேவைப்பட்டது. பெருங்களத்தூர் மேம்பாலத்துடன் தாம்பரம் கிழக்கு பைபாஸ் சாலையை இணைக்க 0.95 ஹெக்டேர் வனப்பகுதி நிலம் தேவைப்பட்டது. தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை மற்றும் பெருங்களத்தூர் மேம்பாலம் (ROB) பணிகளை மாநில நெடுஞ்சாலை தனித்தனியாக மேற்கொண்டது. வனத்துறைக்கு சொந்தமாக உள்ள நிலம் கையகப்படுத்த வேண்டியிருந்ததால் இந்த மேம்பால பணிகள் இரண்டு ஆண்டுகளாக முடங்கி கிடந்தது.
இந்த நிலையில் தான், தற்போது ஸ்டேஜ் 1 முதன்மை ஒப்புதலை மத்திய அமைச்சகம் இரண்டு திட்டங்களுக்கும் தனித்தனியே வழங்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "வனத்துறைக்கு சொந்தமான நிலம் கிடைப்பது மற்றும் அந்த பகுதியில் இருக்கும் துணை மின் நிலையம் ஆகியவற்றை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டியிருந்தது. ஆனால், வனத்துறை அலுவலகத்தை மாற்ற ஒப்புதல் கிடைக்காததால், ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்திருந்தோம்.
தற்போது வனத்துறை நிலத்தை பெற ஒப்புதல் கிடைத்துள்ளது. துணை மின் நிலையதை வேறு இடத்திற்கு மாற்றியதும் புதிய டெண்டர் விடப்பட்டு எஞ்சிய பணிகளை விரைவில் முடிக்க திட்டமிட்டுள்ளோம்” என்றனர். இந்த பணிகள் முடிவடைந்து விட்டால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தாம்பரம், பெருங்களத்தூர் பகுதியில் பெருமளவு போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications